பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/876

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

856 கழிவுநீர்‌ அகற்றல்‌

856 கழிவுநீர் அகற்றல் படிவித்தல் தொட்டி உள்பாயும் கழிவு காற்றூட்டத் வெளியேறும் கழிவு தொட்டி கசடு திரும்புதல் (அ) உள்பாயும் கழிவு செருகு பாய்ம படிவித்தல் தொட்டி உள்பாயும் காற்றூட்டத் வெளியேறும் கழிவு சுழிவு படிவித்தல் தொட்டி வெளியேறும் கழிவு தொட்டி கசடு திரும்புதல் காற்றூட்டத் தொட்டி கசடு திரும்புதல் தேவையற்ற கசடு செருகுபாய்ம (4) படம் 10. கிளர்வு பெற்ற சகதி முறை (அ) பழங்காலமுறை (ஆ) படிப்படியாகக் காற்றூட்டம் செய்தல் (இ) முழுமையான கலப்பு களை ஆக்சிஜனேற்றமடையச் செய்கின்றன. வெறும் காற்றூட்டத்தை விட இம்முறையில் காற்றூட் டத்தின் காலம் கூடுதலாகும். காற்றூட்டத்தின் இறுதியில் கழிவு நீரும் சகதியும் ஒரு நிலைப் படிவுத் தொட்டிக்கு இட்டுச் செல்லப்படுகின்றன. இங்கு படியவைத்தல் நிகழ்ந்த பின்பு தெளிந்த நீர் வெளி யேற்றப்படுகிறது. அவ்வப்போது சகதிப் பொருள் மீண்டும் காற்றூட்டத் தொட்டியில் நுழையும் கழிவு நீருடன் கலக்கப்படுகிறது. கிளர்வு பெற்ற சகதி ஒரு கரும் பழுப்பு நிற மெல்லிழைத் திரளான (flocculent) பொருளாகும். நுண்ணோக்கி வழியாக ஆராய்கையில், சகதியின் ஊன்பசை போன்ற பகுதியின்மீதுஎண்ணிறந்த முன் தோன்றிகள் (protozoa) ஒற்றைச் செல் நுண்ணு யிர்கள், ஆல்காக்கள் ஆகியன ஊர்வது தெரியும். இந்த ஆய்வினால் பின்வரும் உண்மை தெளிவாகிறது: கிளர்வு பெற்ற சகதியை மீண்டும் கழிவுநீரில் சேர்த்தல் செரிமான நிகழ்ச்சிக்கு இன்றியமையாத செயல்முறையாகும். இவ்வாறு திருப்பப்படும் சகதி (return sludge) மொத்தச் சகதியில் 20-25% வரை இருக்கக்கூடும். திருப்பப்படும் சகதியின் அளவுக்கும், காற்றூட்டத் தொட்டியில் கழிவுநீருக்குத் தேவைப் படும் கொள்ளளவுக்கும் எதிர் விகிதத் தொடர்பு உள்ளது. எனவே இவ்விரண்டுக்கும் இடையே ஒரு சம நிலையை உருவாக்கவேண்டிவரும். . கழிவுநீர் அகற்றத்தில் மூன்று கட்டங்கள் இருப் பதை எளிதில் அறியலாம். அவை முதல்நிலை (pri- mary), துணைநிலை (secondary), கடைநிலை(tertiary) எனப்படும். முதல்நிலை செரிமானத்தில் படியவைப் புத்தொட்டிகளும், பெருந்துகள் இருத்தி அறைகளும் (grit chambers) அடங்கும். இங்கு மொத்தத் திண்மப் பொருளில் 60%உம், ஆக்சிஜன் வேண்டும் கழிவுகளில் 33% உம் அகற்றப்படுகின்றன. கிளர்வுபெற்ற சகதி, சொட்டும் தொட்டி ஆகிய அமைப்புகள் துணைநிலை அமைப்புகளாகும். இக்கட்டத்தில் 90% வரை ஆக்சி ஜனுடன் வினையுறும் கழிவுகள் அகற்றப்படுகின்றன. இவ்விரு கட்டங்ளைத் தாண்டிய நிலையிலும், உ.ஆ. தே இல் 10% உம், சிதறிய திண்மங்களில் 10% உம், நைட்ரேட் வகை நைட்ரஜனில் 50% உம் பாஸ்பேட் வகை பாஸ்பரசில் 70% உம் கரைந்த உப்புகளில் 90% உம், கதிரியக்க ஐசோடோப்புகள் முழுமையும், பூச்சிகொல்லி போன்ற கரிமப்பொருள் களும் கழிவு நீரில் எஞ்சியுள்ளன. கடைநிலைச் செரிமான முறைகள், சிறப்பு முறைகள்: செலவினம் மிக்கவை. வேதிப்பொருள் சேர்த்து வீழ்ப்படிய வைத்தல், கிளர்வூட்டப்பட்ட கரியைக் கொண்டு உட்கவருதல் (absorption on activated charcoal) மின் வழிக்கூழ்மப்பிரிப்பு, எதிரிடைச் சவ்வூடு பரவல் (reverse osmosis) ஆகியன இவற்றுள் அடங்கும். இவற்றுடன் தொற்றுநீக்கியைக் கலப்பதும் கடை நிலை முறையேயாகும் (குளோரினேற்றம்). மூடிய சாக்கடை வசதி இல்லாத இடங்களில் ஏறத்தாழ 6 மீட்டர் ஆழத்தில் குழி வெட்டப்பட்டு, கழிவு நிரம்பும் வரை பயன்படுத்தப்படுகிறது. பிறகு புதிய இடத்தில் மற்றொரு குழியை வெட்ட வேண்டும். சிறிய அளவிலான பாக்டீரியத் தொட்டி யையும் இதற்குப் பயன்படுத்தலாம். -மே.ரா.பாலசுப்பிரமணியன் நூலோதி. E.W. Steel & Terence J.McGhee, Water Supply Sewerage, Fifth Edition, McGraw- Hill Co, Singapore, 1979.