பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/879

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழிவுநீர்த்‌ திண்மங்கள்‌ 859

கழிவுநீர் அகற்றக் துரைக்கப்பட்டுள்ளன. குழாய்களின் குறுக்களவுகள் பின்வருமாறு பரிந் (வீடுகளைப் பொறுத்தவரை} கழிப்பு செல்லும் குழாய்: 100 மி.மீ. கழிவு செல்லும் குழாய்: 75 மி.மீ. வளி வெளியேற்றக்குழாய் (vent pipe): 50 மி.மீ. சிறுநீர்க்கழிப்பறை, கழிவுநீர்த் தொட்டி (wash basin) ஆகியன சிறு,தற்காலிகச் சேகரிப்பு அமைப்புகளாகும். -மே. ரா. பாலசுப்ரமணியன் நூலோதி Edward D. Schroeder, Water and Waste Water, McGraw-Hill Book Company, New York, 1977. கழிவுநீர்த் திண்மங்கள் சாக்கடை மற்றும் அழுகு தொட்டி நீரில் இடம் பெறும் திண்ம நிலைப் பொருள்கள் பின்வருமாறு வகையிடப்படுகின்றன; சிதறிய, படியாத திண் மங்கள். படியும் திண்மங்கள் (settleable solids). கரைந்த நிலைத் திண்மங்கள் வை யாவும் சேர்ந்தது மொத்தத் திண்மமாகும். திண்மங்களை எளிதில் ஆவி யாகக்கூடிய (volatile) திண்மங்கள். நிலையான திண்மங்கள் (fixed solids) எனவும் பிரிக்கலாம். கழிவுநீரில் நீரின் சதவீதத்துடன் (99.9%) ஒப்பிடுகையில், மொத்தத் திண்மங்களின் சதவீதம் (0.05-0.1%) மிகச் சிறிதேயாகும் சிதறிய திண் மங்கள் சாக்கடை நீரில் மிதக்கவல்லன. கழிவுநீரை 2 மணிநேரத்திற்குச் சலனமின்றி தேக்கி வைத்திருந் தால் படியும் திண்மம் நிலைப்படிவுத் திண்மம் எனப் படும். ஏறத்தாழ 1000 கி.கி. கழிவு நீரில், 0.45 கி.கி. மொத்தத் திண்மங்களாகவும், 0.225 கி.கி. சுரைந்த நிலையானவாகவும், 0.112 கி.கி. சிதறியனவாகவும், 0.112 கி.கி. படியத் தக்கனவாகவும் உள்ளன. மொத்தத் திண்மத்தில் கரிம வகை ஏறத்தாழ 45% ஆகும். கனிம வகைத் திண்மங்களுள் மணல், பெரு மணல், கரைந்த உப்புகள் உடைதுண்டுகள் (debris) ஆகியனவும், கரிம வகையில் கார்போஹைட்ரேட்டு கள், எண்ணெய் (மற்றும் கொழுப்பு), புரதப்பொருள் கள் ஆகியனவும் அடங்கும். இவற்றுள் கரிம வகைத் திண்மங்களே கேடு தருபவை அளவறிதல். மொத்தத் திண்ம அளவை அறிவு தற்குக் கழிவு நீரை ஆவியாக்கி, எஞ்சியுள்ள உயர்ந்த திண்மப் பொருளை எடையிட வேண்டும். மொத்தத் திண்மத்தில் எளிதில் ஆளியாகும் பகுதியின் சதவீதத்தை அறிவதற்கு, உலர்ந்த திண்மத்தை கழிவுநீர்த் திண்மங்கள் 859 நன்கு சூடாக்க வேண்டும். சூடுபடுத்துவதால் நிகழும் எடை இழப்புச் சதவீதம் ஆவியாகும் திண்மமாகவும் எஞ்சிய பொருள் நிலைத்த திண்மமாகவும் கருதப் படும். பொதுவாக, ஆவியாகக்கூடிய திண்மப்பொருள் கரிம நிலைப் பொருள் எனக் கொள்ளலாம். சிதறிய நிலையில் நிலையில் உள்ள திண்மப்பொருள் மாதிரியைக் சதவீதத்தை அறிவதற்குக் கழிவுநீர் கல்நார் வடிகட்டியின் மீது ஊற்றி, வடிநீர்மத்தில் மொத்தத் திண்ம அளவை (S) அறிதல் வேண்டும். S என்பது கரைந்த நிலையிலுள்ள திண்மத்தின் எடையாகும். மொத்தத் திண்ம எடையிலிருந்து S ஐக் கழித்துப் பெறுவது சிதறியநிலைத் திண்ம எடையாகும். படியக்கூடிய திண்ம அளவை அறிவதற்கு இம்ஃ காஃப் கூம்பு எனும் கலம் பயன்படுகிறது. இம்கூம்பு அளவீடு (graduated) கொண்டது. கண்ணா, டியா லான இக்கூம்பில் கழிவு நீரை இரண்டு மணி நேரத் திற்குத் தேங்க வைக்க வேண்டும். பின்பு தேங்கி நிற்கும் திண்மத்தின் அளவை அளவீட்டிலிருந்து அறியலாம். நகராட்சியின் பெரிய அழுகுத் தொட்டியில் தேங்கும் கழிவு நீரில் பலவகைத் திண்மங்களின் அளவு கள் (மி.தி.வி): மொத்தத் திண்மங்கள் = 1250 மொத்த ஆவியாகும் திண்மங்கள் சிதறிய திண்மங்கள் = 360 810 ஆவியாகக்கூடிய சிதறிய திண்மங்கள் (volatile suspended solids) = 215 படியக்கூடிய திண்மங்கள் = 7 (I.L/M) ஈதரில் கரைவன 22 அகற்ற முறைகள் பெருமணற்கல் அறைகள். மணல், பெருமணல், சரளைமண், எலும்பு, முட்டை ஓடு, கந்தல் துணி போன்ற 2 மி.மீக்கும் மேற்பட்ட குறுக்களவு கொண்ட துகள்களைப் படிய வைத்து அகற்றுவதற் குப் பெரிய தொட்டிகள் பயன்படுகின்றன. கனிம வகைப் பொருள்கள் இத்தொட்டியில் படிகின்றன. இலேசான கரிம வகைத் துகள்கள் நீரோட்டத்தில் கலந்து அடுத்த கட்டத்தை அடைகின்றன. எண்ணை, கொழுப்பு, மசகு (grease), மெழுகு போன்ற பொருள்கள் காற்றூட்டத்தால் மேல்பரப் புக்கு நுரைவடிவில் சேர்க்கப்பட்டுச் சட்டுவங்களால் அகற்றப்படுகின்றன. அடுத்த கட்டத்தில் பெரிய நிலைப்படிவுத் தொட்டிகளில் (settling or sedimenta- tion tanks) நீண்ட நேரம் கழிவு நீரைத் தேங்கவைத் துத் திண்மங்களைப் படிய வைக்கலாம்.