860 கழிவுநீர் பதப்படுத்தல்
860 கழிவுநீர் பதப்படுத்தல் இறுதியாக, கழிவு நீரை அழுகு தொட்டிகளில் (septic tanks) நிலைத்திருக்கச் செய்தால் சுழிவு செரிமானமடைகிறது. பெருவாரியான திண்ம நிலைப் பொருள்கள் வளிமமாகச் சிதைவடை கின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் சேகரிக்கப்படும் திண்மத்தை (sludge) அப்புறப்படுத்துவதற்கு மூன்று முறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவை, தாழ்வான பகுதிகளை நிரப்புதல்; எரித்தல் நீர்நிலைகளில் கலத்தல்; நுண் தூளாக்கி உரமாகப் பயன்படுத்துதல் போன்றவை ஆகும். மே.ரா.பாலசுப்ரமணியன் நூலோதி. S.K. Garg, Sewage and Waste Disposal Engineering. Fifth Edition, Khanna Publishers, New Delhi, 1987. கழிவுநீர் பதப்படுத்தல் முதன்மைப் பதப்படுத்தும் முறை (primary treatment). மரத்துண்டுகள், கம்பித் துண்டுகள், கத்தையான துண்டுகள் (bundles of rags), பெரிய அளவிலுள்ள பொருள்கள் இவற்றைக் கழிவு நீரில் இருந்து திரை உதவியால் நீக்குவது வடிகட்டுதல் (screening) எனப் படும். இவ்வகைப் பொருள்கள் எக்கிகளைப் (pump) பாதிக்கும். சரியாகத் தெரியும் துளைகள் கொண்ட வடிகட்டிகள் பல வழிகளில் பயன்படுகின்றன. துளை களின் குறுக்களவு 1.5 அங்குலம் வரை இருக்கும். மின்னணுக் காலங்காட்டுங் கருவியின் மூலம் குறிப் பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை வடிகட்டிகள் தூய்மை செய்யப்படுகின்றன. இவ்வாறு வடிகட்டி யின் மூலம் நீக்கப்படும் பொருள்கள் கழிவு நீரில் உள்ள திண்மப் பொருள்களின் மொத்த அளவில் ஒரு சிறிய பகுதியே ஆகும். ஆனால் மிகப் பெரிய நகரங்களில் இவை பல மடங்கு மிகுதியாக இருக்கும். இப்பொருள்களைப் பதப்படுத்துவதன் மூலமாகவோ, எரிப்பதன் மூலமாகவோ, அரைத்துக் கழிவு நீரோடு சேர்ப்பதன் மூலமாகவோ அகற்றலாம். மணல் துகள்களை நீக்குதல். (grit removal). உராய்வைக் கொடுக்கக் கூடிய பொருள்களான மணல், சாம்பல் தூள் முதலியவற்றை நீக்குவதன் மூலம் எக்கியின் தேய்மானம் குறைகிறது. மேலும் இவ் வகைப் பொருள்கள் பதப்படுத்தும் எந்திரங்களின் சில இடங்களில் தொடர்ந்து சேர்வதால் இடையூறுகள் ஏற்படுகின்றன. கழுவும் வேகத்தை ஈடு செய்வதன் மூலம் மணல் துகள்கள் வேசான திண்மத் துகள்களிட மிருந்து பிரிக்கப்படுகின்றன. இம்முறை கனிமங்களி லிருந்து உலோகத் தாதுவைக் கழுவும் முறையால் பிரிப்பதை ஒத்ததாகும். தெளிய வைத்துப் படிதல், கழிவு படிதல். கழிவு நீரிலிருந்து வடிகட்டிய பொருள்களும், மணல் துகள்களும் நீக்கப்பட்ட பின்பும், சில திண்குழைமப் பொருள்கள் இருக்கும். பத்து லட்சம் காலன் கழிவு நீரில் இவற்றின் அளவு ஏறக்குறைய ஒரு டன் ஆகும். ஐந்து லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு நகரத்தில் ஒரு நாளைக்கு வெளிப்படும் கழிவு நீரின் அளவு ஏறத்தாழ ஆயிரம் லட்சம் காலன் இருக்கும். எனவே. ஒரு ப்ப படம் 1. வளைந்து வளைந்து செல்லும் அணை. . }