பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/881

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழிவுநீர்‌ பதப்படுத்தல்‌ 861

நாளைக்கு நூறு டன் அளவுள்ள திண்மப் பொருள் களை அகற்ற வேண்டியுள்ளது. கழிவு நீரைத் தெளிய வைக்கும்போது திண்மப் பொருள்களின் ஒரு பகுதி தங்கிவிடுகிறது. இம்முறைக்குத் தெளிய வைத்துப் படி தல் (sedimentation) என்று பெயர். இம்முறையால் கழிவு நீரை நீண்ட நேரம் தெளிய வைக்கும்போது குழைமத் திண்மப் பொருள்கள் தெளிய வைக்கும் தொட்டியின் அடியில் சென்று தங்கிவிடும். தெளிய வைத்துப் படிதலுக்கு இரு வகைப்பட்ட தொட்டிகள் பயன்படுகின்றன. வட்ட வடிவத் தொட்டிகளின் நடுப்பகுதியில் கழிவு நீர் செலுத்தப்பட்டு ஓரமாக உள்ள வாரணையின் (wtir) மூலமாகத் திண்மப் பொருள்கள் வெளியேற்றப்படுகின்றன. "படம்1 நீள் சதுரத் தொட்டிகளின் நீளம் அவற்றின் அகலத்தைப் போல நான்கு அல்லது ஐந்து மடங்கு மிகுதியானது. இவற்றின் ஒரு முனையில் கழிவு நீர் வாங்கப்பட்டு மறு முனையில் வெளியேற்றப்படுகிறது. தொட்டிகளில் படிதல் நடைபெறும்போது கழிவு நீரின் வேகம், படிதலைத் (settling) தடை செய் யாமல் இருக்கப் பல முறைகள் கையாளப்படுகின்றன. வட்டத் தொட்டிகளின் நடுவில் பொருத்தப்படும் புனல் போன்ற அமைப்பின் மூலம் கழிவு நீரில் உள்ள திண்மப் சேர்க்கப்படுகின்றன. நீள் பொருள்கள் சதுரத் தொட்டிகளில் கழிவு நீர் வாங்கும் இடத்தில் கழிவுநீர் பதப்படுத்தல் 861 வைக்கப்படும் சுரண்டிகள் (scraper) இப்பணியைச் செய்கின்றன. இம்முறை தொடர்ச்சியாகவோ ஒரு நாளில் பல முறைகளிலோ கையாளப்படுகிறது. படிதல் முறையில் 40 - 55% வரை திண் குழைமப் பொருள்கள் நீக்கப்படுகின்றன, இதனால் உயிர் வழி ஆக்சிஜன் தேவை (biological oxygen demand) அதே அளவு குறைக்கப்படுகிறது. நடைமுறையில், கழிவு நீரில் கரைந்த நிலையில் உள்ள எந்தப் பொருளும் நீக்கப்படுவதில்லை. ஜெர்மானியப் பொறியியல் வல்லுநர் கார்ல் இம்காஃப் ஒரு புதிய தொட்டியை வடிவமைத்தார். இத்தொட்டியின் மேல்தட்டு, திண் குழைமப் பொருள்கள் தங்குவதற்கும், கீழ்த் தட்டு எஞ்சிய திண்மப் பொருள்கள், பாக்டீரியாக்களால் தைவடைவதற்கும் பயன்படுகின்றன. இந்தத் தொட்டியில் நகரும் பகுதி எதுவும் இல்லை. இவ் பயன்படு வகைத் தொட்டிகள் உலகம் முழுதும் . கின்றன. எனினும், அண்மைக் காலமாகப் பெருமள வில் கழிவு நீரைப் பயன்படுத்தும் தொட்டிகளால் வருகின்றன. மாற்றப்பட்டு இம்காஃப் தொட்டிகள் பெரும்பாலும் வடிகட்டுதலுக்கு முன் பயன்படுகின்றன. வை வேதி வீழ்படிவாக்கம். பெரிய நதிகளின் மீது உள்ள நகரங்களில் கழிவு நீர் முதலில் படிதலுக்கு படுகை எண் 1 தொட்டி மற்றும் வடிகுழாய்கள் படுகை எண் 2 படியும் தொட்டியிலிருந்து படுகை எண் 3 வரும் நுழைவாய் வெட்டுமுகத்தோற்றம் படுகை எண் 4 வெளியேற்றத் தொடர் துளை மணல் வடிகட்டி படம் 2. இடைவிட்டு வடிகட்டும் மணல் வடிகட்டியின் அமைவுப்படம் வெளிச்செல்வாய்