862கழிவுநீர் பதப்படுத்தல்
862 கழிவுநீர் பதப்படுத்தல் உட்படுத்தப்பட்டுப் பின் அடியில் தங்கிய திண்மப் பொருள்கள் வெளியேற்றப் படுகின்றன. படிதலுக்குப் பின் உள்ள நீர் (effiuent) குளோரினூட்டம் செய்யப் பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆனால் சிறிய ஆறுகளை மட்டுமே கொண்ட நகரங்களில் வேதி வீழ்படிவாக்கம் (chemical precipitation) தேவைப்படுகிறது. வேதி முறையில் வீழ்படிவாக்கம் செய்வதற்கும் சில வேதிப்பொருள்கள் கழிவு நீருடன் சேர்க்கப்படு கின்றன. இவ்வாறு சேர்ப்பதால் கழிவு நீரில், கூழ்ம நிலையில் உள்ள பொருள்கள் படியக்கூடிய நிலைக்கு மாற்றப்படுகின்றன. இம்முறையில் பயன்படும் பொது வான வேதிப்பொருள்கள் அலுமினியம் சல்பேட், ஃபெரிக், ஃபெரஸ் சல்பேட்டுகள், ஃபெரிக்குளோரைடு ஆகும். இப்பொருள்களில் ஒன்றை, கழிவு நீரோடு சேர்த்துத் தொட்டியில் கலக்கும்போது கூழ் (floc) போன்ற பொருள் உண்டாகிறது. பிறகு கழிவு நீர் (கூழோடு) படியும் தொட்டி களுக்கு (settling tank) அனுப்பப்படுகிறது. இத் தொட்டிகளின் அடியில் கூழ்படிகிறது. கழிவு நீரின் தன்மையைப் பொறுத்துத் தேவையான வேதிப் பொருள்களின் அளவு மாறுபடும். பத்து லட்சம் காலன் கழிவு நீருக்கு 180-315 கிவோ கிராம் வேதிப்பொருள்கள் தேவைப்படும். கழிவு நீரோடு வேதிப்பொருள்களைச் சேர்ப்பதன் மூலம் 80 90% வரை திண் குழைமப் பொருள்களும். கூழ்மப் பொருள்களும் நீக்கப்படுகின்றன. ஆனால் இம்முறை யின் மூலம் நீக்கப்படும் பொருளகள் மிகக் குறைவே யாகும். இரண்டாம்தரப் பதப்பாடு (secondary treatment). முதன்மைப் பதப்பாட்டு முறையில் படிதலுக்குப் பிறகு வெளிவரும் கழிவு நீரில் திண்மக் குழைம நிலையில் சிறிது பொருள்களும் கூழ்ம நிலையிலும், கரைந்த நிலையிலும் மிகுதியான பொருள்களும் உள்ளன. இவ்வகைப் பொருள்கள் சிதையும்போது கெடு நெடி உண்டாகிறது. அதனால் முதன்மைப் பதப்பாட்டுக்குப் பிறகு உள்ள கழிவு நீரையும் பதப் படுத்துவது இன்றியமையாததாகிறது. இரண்டாம் தரப் பதப்பாட்டில் பல முறைகள் கையாளப்படுகின் றன. இவற்றில் முக்கியமானவை: துளிவிழும் வடி கட்டிகள் (trickling filter), செயலூக்கப்பட்ட கழிவு முறை (activated-sludge process), மணல் வடிகட்டி கள் (sand filter) ஆகியன. துளி விழும் வடிகட்டிகள் (trickling filters). துளி விழும் வடிகட்டி என்பது இரண்டு முதல் நான்கு அங்குல விட்டமுடைய சிறு கற்களாலான படுக்கை கள் கொண்ட 6-8 அடி ஆழமுள்ள தொட் டியாகும். கழிவு நீரை இத்தொட்டிகளின் மேல் துளித்துளி யாகச் செலுத்தும்போது, வடிகட்டிய கழிவு நீர் தொட்டியின் அடியில் கசிவாக வெளிவரும். இம் முறையில் கல்படுக்கைகளின் மீது இருக்கும் களி போன்ற பாக்டீரியாப் படலங்களாலும் சில உயிர் களாலும் கழிவு நீர் தூய்மையாக்கப்படுகிறது. குறிப் பிட்ட கால இடைவெளியில் கழிவு நீர் கல் படுக்கை கள் மீது நுண் திவலைகளாகத் தூவப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம், காற்று, கல்படுக்கை களுடன் தொடர்பு கொள்ள, படுக்கைகளின் மேல் உண்டாகும் விலங்கினப் பொருள்களின் (zoogleal growth) வளர்ச்சி ஆக்ஸிஜனேற்றத்தால் படுகிறது. குறைவாக தடுக்கப் வடிப்பான்; 6 மி.மீட்டருக்குக் 6-25 மி.மீ 25-50 மி.மி படம் 3. இடைவிட்டு வடிகட்டும் மணல் வடிகட்டியின் கீழ்வடிகால் செயலூக்கப்பட்ட கழிவு முறை (activated sludge process). கழிவு நீரில் உள்ள கரிமப் பொருள்களைச் சிறப்பாக நீக்கும் வேறொரு முறையை ஆங்கிலேயர் கள் 1912-1915 ஆண்டுகளில் வடிவமைத்தனர். துளி விழும் வடிகட்டிகளில் கரிமப் பொருள்களுக்குக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனேற்றம் ஏற்படும் தொடர்பைக் கருத்தில் கொண்டு கழிவு நீர்த் தொட்டியில் அழுத்தமுள்ள காற்றை அனுப்பும் முறையைக் கண்டுபிடித்தனர். இவ்வாறு செய்வதன் மூலம் பதப்படுத்தும் முறையைக் கட்டுப்படுத்த முடியும். அதே சமயத்தில் பதப்பாட்டில் ஒரு குறிப் பிட்ட அளவையும் அடைய முடியும். இம்முறையில் காற்றைக் கழிவு நீரில் செலுத்தும்போது. உயிர் வினைகள் நடப்பதற்குத் தேவையான பரப்பளவு கிடைக்கிறது. அதாவது கழிவு நீரில் உள்ள உயிர் களும். காற்றில் உள்ள ஆக்சிஜனும் அதிக வினையில் ஈடுபடுகின்றன. உள்ளே அனுப்பப்படும் காற்றின் அளவையும், மீண்டும் கிடைக்கும் கழிவின் அளவை யும் மாற்றுவதன் மூலம் அதிக அளவு பதப்படுத்த முடியும். கழிவு உயிரினங்களோடும் பாக்டீரியாக்க ளோடும் கூட்டாக இருப்பதால் இக்கழிவைச் செயலூக்கம் அடைந்த கழிவு என்றும் (activated .