கழுகுத் திருக்கை 865
பருவத்திற்கு ஒன்றாக மாறிமாறிப் பயன்படுத்துவதும் உண்டு. ஆணும் பெண்ணும் அடைகாத்துக் குஞ்சு களைப் பேணுவதில் பங்குகொள்கின்றன. கள்ளப் பருந்தைவிடச் சற்றுப் பெரிய கரும் பழுப்புக் கழுகு (Aquila rpex) இந்தியத் துணைக் கண்டம் முழுதும் வறண்ட நிலஞ்சார்ந்த பகுதிகளில், கேரளம், அசாம் போன்ற மழைவளம்மிக்க மலைப் பகுதிகள் தவிர எங்கும் காணப்படும். மரங்களில் உயர அமர்ந்து கூர்ந்து நோக்கி இரைதேடும் இக் கழுகு இனங்கள், பிற பறவைகள் வேட்டையாடிப் பிடிக்கும் இரையைப் பிடுங்கித்தின்னும், ஊர்ப்புறங் களில் பிணந்தின்னிக் கழுகு, கருடன், காகம் ஆகிய வற்றோடு சேர்ந்து இறந்து கிடக்கும் உடல்களையும் தின்னக் காணலாம். இனப்பெருக்க காலமான நவம்பர் - ஏப்ரல் முடிய உள்ள பருவத்தில் உயரப் பறந்து பின் 'கெக்... கெக்... கெக்...' எனக் கத்தியபடி தலைகீழாகப் பாய்ந்து விளையாட்டு வேடிக்கை காட்டும். இது கருவேலம் முதலான மரங்களில் உயரக் கூடுகட்டி இரண்டு அல்லது மூன்று முட்டை களிடும். செம்புள்ளிகள் கொண்ட முட்டைகள் வெளிர் நிறத்தன. கருங்கமுகு காணப் தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், அதை ஒட்டிய பகுதிகளிலும் படும் கருங்கழுகு (Ierinaeus malayensis) கருடனை விடப் பெரியது. உயரப் பறக்குப்போது தன் அகன்ற இறக்கைகள் மேல்நோக்கி உடல்கொண்!-. ாட்டத்தைவிட காணப்படும். உயா வளர்ந்துள்ள கறுத்த உடல் விரிந்து V வடிவில் காட்டு மரங்களி கழுகுத் திருக்கை 865 டையே இணையாகப் பறந்து திரிந்து இரை தேடும். மரங்களில் கூடு வைத்துள்ள பிற பறவைகளின் முட்டைகள். குஞ்சுகள் ஆகியவற்றைக் கவர்ந்து செல்வதோடு சில சமயங்களில் கூட்டை முழுதுமாக அப்படியே கால்களால் பற்றி எடுத்துச் செல்லும். பிற ராஜாளிகளைப் போலத் தரையில் திரியும் சிறு உயிர்களையும் வேட்டையாடுவது உண்டு. எனினும் பறவைக் கூடுகளில் உள்ள முட்டைகளும் குஞ்சுகளுமே இதற்குப் பெரும்பாலும் உணவாகின்றன. நவம்பர்- மார்ச் முடிய இனப்பெருக்கம் செய்யும் இது செம் புள்ளிகளோடு கூடிய வெளிர்நிற முட்டை ஒன்றை மிக உயரமான மரங்களிடையே மறைவாகக் கட்டிய கூட்டில் இடுகின்றன. கூழுகுத் திருக்கை க. ரத்னம் என்று பறவை போல் விரிந்த உடலையும், உடலினின்று நீண்டு தனித்திருக்கும் தலையையும் பெற்றுப் பக்க வாட்டில் பார்ப்பதற்கு ஒரு கழுகைப்போல் தோன்றுவ தாலும், சிலவேளைகளில் நீரினின்று உயரே எழுந்து பறந்து, மீண்டும் நீரில் விழுவதாலும் திருக்கை மீன் கழுகுத் திருக்கை (eagle ray) சிறப்பாகக் கூறப்படுகிறது. துருவப் பகுதிகளைத் தவிர அனைத்து வெப்ப, மிதவெப்பக் கடல்களில் காணப்படும் கொட்டுந்திருக்கைகள், (sting ray) வகையைச் சேர்ந்த இக்கழுகுத் திருக்கைகள் மைலியோபேட்டிடே குடும்பத்தில் மைலியோ பேட்டினே துணைக்குடும்பத்தைச் சார்ந்தவை. இதில் ஏட்டோபேட்டஸ், 'ஏட்டோமைலியஸ், மைலி யோபேடிஸ், டீரோமைலியஸ் எனும் நான்கு பேரினங் களில் அடங்கும் 24 சிற்றின வகைக் கழுகுத் திருக்கை கள் உள்ளன. இவை நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் ஒரே நேரத்தில் கடல் பகுதியில் கூட்டம் கூட்டமாகத் தென்படும். வணிக நோக்கில் இக்கழுகுத் திருக்கைகள் மிகுதியாகப் பிடிக்கப்படு கின்றன. ஏறக்குறைய 2.5 மீட்டர் அகலம் வரை வளரும் இக்கழுகுத்திருக்கையின் உடல் பகுதியைவிட வால் பகுதி மிக நீளமாகவும். சாட்டைபோல் நுனி நீண்டும், அடி பருத்தும் காணப்படும். வாலில் ஒரு முதுகுத் துடுப்பும், இரம்பப் பற்களைப்போல விளிம்பைக் கொண்ட நச்சு முள்களும் காணப்படும். இந்த நச்சு முள்களால் இவை மிகக் கடுமையான காயங்களை உண்டாக்கும் திறன் பெற்றவை. இம் மீனுக்கு வால்துடுப்பு இல்லை. தோல் துடுப்புகள் முகத்தின் நுனிவரை நீண்டிருக்கவில்லையெனினும் முன்முகத்தின் கீழே இவை இரண்டும் இணைந்து தலைத்துடுப்புகள் (cephalic fins) எனப்படும் தசை