868 கழுத்துத் தமனித் தடங்கல் நோய்
868 கழுத்துத் தமனித் தடங்கல் நோய் உள்கழுத்துத் தமனியிலும், வெளிக் கழுத்துத் தமனி யிலும், உண்டாகலாம். . இரத்த அழுத்தம் கூடும்போது, அதிரோஸ்கிலி ரோசிஸ் தாக்கத்தால் கழுத்து, பெயரற்ற (innomi- nate) தமனி நீண்டு, வளைந்து, சுருண்டு காணப் படும். இதனால் தமனி S போன்ற வளைவுடன் இரத்தக்குடா போல் தோற்றமளிக்கும். இதைப் பிரித்து உணர்வது இன்றியமையாதது. பொதுக் கழுத்துத் தமனி பிரியும் இடத்தில் உண்டாகும். கட்டிகள் குருதிக்குடா போலவே தோற்றமளிக்கும். நோயாளி மூச்சை உள்ளிழுத்து, நிறுத்திப் பிடிக்க மடங்கிய கழுத்துத் தமனியில் துடிப்புக் குறையும் என்றாலும் இரத்தக் குடாவில் மாற்றம் காணப் படுவதில்லை. அறிகுறிகள். கழுத்துத் தமனி உள்ள இடத்தில் துடிப்புடன் கூடிய மென்மையான கட்டியின் ஒவ் வொரு துடிப்பும் விரிவதால், இத்துடிப்பைக் கண் ணால் காணவும் கையால் தொட்டு உணரவும் முடி யும். இக்கட்டிக்குக் கீழ்ப்புறத்தில் அழுத்தி இரத்த ஓட்டத்தைக் குறைக்க, கட்டியில் துடிப்பு மறைவ துடன் அளவும் குறையும். இந்த இரத்தக் குடாவுள் இரத்தம் உறைந்து கால்சியம் படிவதால் துடிப்புக் குறைவாகவும் தொடும்போது கடினமாகவும் தோன் றும். அரிதாக இந்த இரத்தக் குடாவின் நரம்பைக் கழுத்தில் அமுத்துவதால் ஹார்னரின் கூட்டியம் (Horner's syndrone) தோன்றும். அதாவது முகத்தில் தாக்கமுற்ற பகுதியில் வியர்வையின்மை, கருவிழிச் சுருக்கம் முதலியவை காணப்படும். ல் பரிவு தமனி இரத்தக்குடா அடுத்துள்ள முக்கியமான உறுப்புகளை அழுத்த எடுத்துக்காட்டாகப் புய நரம்புத் தொகுப்பை (brucheal plevus) அழுத்த கை, தோள்பட்டைகளில் வலியும், உணவுக்குழல் அழுத்தப் பட்ட விழுங்குதலில் கடினமும் உண்டாகும். கைகளாலும் செவியாலும் இந்த இரத்தக் குடாவில் ஏற்படும் புரு புரு ஒலியைக் கேட்டுணரலாம். தமனி இரத்தம் குடாவில் ஏற்படும் மாற்றங்கள். அளவில் பெரியதாகவும் துடிப்புடனும் காணப்படும் இரத்தக் குடாவுள் இரத்தம் உறைய வாய்ப்புண்டு. இதன் சுவரில் கால்சியம் படிய, அரிதாக வெடித்து மரணமும் நேரலாம். இரத்தம் உறைதல் ஏற்பட்ட இரத்தக் குடாவில் நாட்பட இரத்த ஓட்டம் நடை பெறப் புதிய வழி ஒன்றும் அரிதாசு உண்டாக்கப் படலாம். மருத்துவம். இரத்தக் குடாக்கள், தக்கையுரு (emboli) அல்லது சிறு சிறு இரத்தக் குழாயால் உண்டாகும் இரத்தக் கட்டிகள் (thrombosis) உள்ளுறை படிமம் மூளையில் அடைப்பு நோய் உண் டாக்கி வாத நோய் உண்டாக்குவதாலும், வெடித்து மரணத்தை உண்டாக்கக்கூடிய வாய்ப்பு இருப்ப தாலும், உடனடியாக அறுவை மூலம் தாக்கமுற்ற பகுதியை வெட்டி எடுத்துவிட்டு ஒட்டு உறுப்பு அறுவை மருத்துவம் செய்யலாம். செயற்கை இழை கொண்டு பின்னிய குழாய்கள், டெக்ரான், டெஃப் லான் போன்ற பொருள்களால் உண்டாக்கிய குழாய் களையும் பயன்படுத்தலாம். இவ்வறுவை மருத்துவம் செய்யப்படும்போது மூளை பாதிக்கப்படா வண்ணம் நோயாளியின் வெப்பநிலையை மிகக்குறைந்த அள விற்குக் கொண்டு வருவதன் மூலம் அல்லது இரத்த ஓட்டத்திற்கு மாற்று வழி செய்வதன் மூலம் அறுவை செய்யலாம். -மா.ஜெ. ஃபிரெடரிக் ஜோசப் கழுத்துத் தமனித் தடங்கல் நோய் மூளை தொடர்ந்து வேலை செய்ய குளுக்கோஸ், ஆக்சிஜன் ஆகியவை தொடர்ந்து இரத்தம் மூலம் கிடைக்க வேண்டும். இரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடை காட்டாக, குறை இரத்த அழுத்தம், இரத்தக் குழாய்களில் ஏற்படும் தடை போன்றவை சுற்றுப் புற அழுத்தம், இரத்தத்தின் அடர்த்தி போன்ற வற்றைப் பொறுத்தே அமையும். இவற்றில் ஏதாவது ஒன்றில் ஏற்படும் மாற்றத்தை மற்றொன்று இயல் பாகவே ஈடு செய்துவிடும். ஆனால் இரத்தக் குழாய் அடைப்பு நோய்களில் ஏதாவது ஒன்று மூளைக்கு இரத்த ஓட்டத்தைக் குறைப்பதுடன், மூளையில் இரத்த ஓட்டத் தடையால் சிதைவும் உண்டாக லாம். பொதுவாகக் கழுத்துத் தமனியில் தடங்கல் நோய் உண்டாக அதிரோஸ்கிலிரோஸிஸ் (atheroscle roses) காரணம் ஆகும். இந்நோயில் இரத்தக் குழாயுள் ஒரு வகைக் கொழுப்புப்பொருள், மாவுப் பொருள் போன்றவை படிவதால் தமனியின் உட் சுற்றளவு குறைந்து இரத்த ஓட்டத்திற்குத் தடை ஏற்படும். இதனால் தக்கையுரு (embolism) தமனி இவற்றில் இரத்தம் உறைதல் ஏற்பட ஏதுவாகும். மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டமும் குறையத் தொடங்கும். அறிகுறிகள். கழுத்துத் தமனித் தடங்கல் நோயில், தடையின் தன்மையைப் பொறுத்து நோய்க் குறிகள் மாறும். எதிர்பாராமல் தோன்றும் நிலை யில்லா மயக்கம், கண் இருண்டு போதல், சில நிமிடங் களுக்குத் தன் நினைவு அற்றுப்போதல் முதலியவை தொடக்கநிலைக் குறிகளாகும். முகத்தின் ஒரு பக்கம் கைகால் இவற்றின் தற்காலிகமான தொய் வும், மதமதப்பும் தோன்றும், இடப்பக்கக் கழுத்துத் தமனித் தடை தற்காலிகமாகப் பேச்சின்மையை