பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/896

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

876 கள்ளி

876 கள்ளி முதலிய நோய்களுக்கும் தரலாம். இதன் தண்டைச் சுட்டுச் சாம்பலாக்கிப் புண்களின் மீது தூவினால் அவை உலர்ந்துவிடும். வேருடன் பெருங்காயத்தைச் சேர்த்து அரைத்து வயிற்றுப் பூச்சிகளால் ஏற்படும் கோளாறுகளுக்குக் குழந்தைகளின் வயிற்றின் மீது பூசவேண்டும். வேர்ப்பட்டையைச் சிதைத்து நரம்புச் சிலந்திக்கு வைத்துக் கட்டலாம். சப்பாத்திக்கள்ளி. இதற்கு நாகதாளி, முள்பேரி, விஷதாளிக்கள்ளி, பலகைக்கள்ளி, மஞ்சள் நாக தாளி என்னும் பெயர்களும் உணடு. இதன் தாவரப் பெயர் பென்ஷியா டில்லெனியை (opuntia dillenil) என்பதாகும். இதன் பழங்கள் பேரிவடிவிலும், முள்கள் நிறைந்ததும் இருப்பதால் இதைப் 'பிரிக்ளி பியர்' என்பதுண்டு. கேக்டேசி குடும்பத்தைச் சேர்ந்த இது காடுகளில் காணப்படும் புதர் முள்செடி யாகும் தரிசு நிலம் சாலை ஓரங்களில் வேலியாக இருப்பதைக் காணலாம். இதன் பழத்திலும் முள் பழத்திலுள்ள முள், பழத்தோல் ஆகிய வற்றை நீக்கியபின் உள்ளிருக்கும் சிவப்புச் சதைப் பகுதியுடன் கொட்டையையும் காணலாம். பழச் ளுண்டு சப்பாத்திக் கள்ளி