880 கள்ளி மந்தாரை
880 கள்ளி மந்தாரை தலைகீழ் முட்டை வடிவானது. 20-30-X7-10 செ.மீ அளவானது; நுனி கூரானது; காம்புப் பகுதி ஓரம் ஆப்பு வடிவான கிளை நரம்புகள் 30-40 ஜோடி இருக்கும். பூக்கள் கிளை நுனியில் தோன்றும். தடித்த மஞ்சரிக் காம்பு இருக்கும். புல்லிவட்டம் 3 மி.மீ. அளவிலும் கிண்ணம் போன்றும் 5 சமமான கதுப்புகளுடனும் இருக்கும். இவை வட்டமானவை முனை மழுங்கியவை. அல்லிவட்டம் மஞ்சள் நிற முடையது. இதன் குறுக்களவு 4 மி.மீ. புனல் வடிவமானது. அல்லிக்குழல் 2 செ.மீ நீளமுடையது. இதில் தலைகீழ் முட்டை வடிவான 5 கதுப்புகளைக் காணலாம். இவை முனை மழுங்கியும் 3×2 செ.மீ. அளவிலும் உள்ளன. மகரந்தத்தாள்கள் 5. அல்லிக் குழலின் அடிப் பகுதியில் ஒட்டிக்கொண்டிருக்கும். சூல்பையில் பாதி கீழ்மட்டச் சூழ் பை அமைப்புடன் 2 மி. மீ அளவில் உருண்டையாயிருக்கும். சூல்கள் பல விளிம்புச் சூல மைப்பில் (marginal placentation) உள்ளன. சூலகமுடி இரண்டாகப் பிரிந்திருக்கும். பழுப்புக் கலந்த கறுப்பு நிற ஒரு புற வெடிகனி (follicle) இணையானது. 25 X 4 செ.மீ. அளவானது. விதைகள் தட்டை யாகவும் இறக்கையுடனும் காணப்படும். இந்திய நாட்டில் விதைகள் அரிதாகவே கிடைக்கின்றன. இம்மரத்தின் இலைகள் ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் உதிர்கின்றன. புதிய இலைகள் மார்ச் மாதத்தில் தோன்றுகின்றன, ஏப்ரல்-ஜுன் மாதங்களில் பூக்கள் உண்டாகின்றன். இம்மரத்தின் பூக்கள் மணமுடன் இருக்கும். வெள்ளை நிறத்தில் மஞ்சள் நிற மையம் கொண்ட பூக்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன இளஞ்சிவப்பு நிறம் உள்ள மரங்களையும் சில இடங் களில் காணலாம். பொருளாதாரப் பயன்கள். பூங்காக்களில் அழகான பூக்களுக்காக இதை வளர்ப்பதுண்டு. மரத்தின் தோற்றமும் இலையமைப்பும் அழகாக இருக்கும். வழிபாட்டிற்கு உதவும் இதன் மலர்களைக் கொண்டு மாலைகள், மணப்பொருள்கள் தயாரிக்கலாம். மரத் தின் வகைக்கேற்றவாறு பூவின் மணம் மாறுபடும். நீராவி வடிமுறை மூலமாகப் பூக்களிலிருந்து 0.04- 0.07% ஆவியாகும் எண்ணெயைத் தயாரிக்கலாம். ஆவியாகும் எண்ணெயில் ஜெரானியோல், சிட்ரோ ஃபார்னி சோல், நெல்லோல், ஃபீனைல் எத்தில் ஆல்கஹால் முதலியன அடங்கியுள்ளன. மணமுடைய இந்த எண்ணெய்க்குப் பூசணங்களைக் கொல்லும் தன்மை உண்டு. சாறு பூக்களில் குவர்செட்டிலும் கேம்ஃபெராலும் உள்ளன. பூமொட்டுகளை வெற்றிலையுடன்சேர்த்துத் தரக் காய்ச்சல் குணமாகும். பட்டையின் பேதியை உண்டாக்கும், காய்ச்சலைக் குணப்படுத்தும் பட்டையில் கசப்பான புஜம்யெரைட் (plumieride) என்னும் குளூகோசைடும் ஃபிளேவோபுளூமி யெரினும் (flavoplumierin), அமிரின் அசெட்டேட் என்னும் உப்பும் உள்ளன. பட்டைச் சாறு, ஹெல் மிந்தோல் போரியம் சட்டைவம் (helminthosporium sativum) என்னும் பூசணத்தைக் கொல்லும் தன்மை கொண்டது. பட்டையைக் கொண்டு மேகநோயைக் குணப்படுத்தலாம். பட்டையைச் சிதைத்து வைத்துக் கட்ட வீக்கம் கரையும். வேர்ப்பட்டை சிறுநீர் சார்ந்த நோய்களுக்கும் மேகப்புண்களுக்கும் வாத வலிகளுக்கும் மருந்தா கிறது. வேர் விலங்குகளுக்கு நச்சாக விளங்குகிறது. இம்மரத்திலிருந்து வடியும் பால் வாதநோயைக் ணமாக்கும். பால், சந்தனத் தைலம், கற்பூரம் ஆகியவற்றைச் சேர்த்துக் குழைத்துச் சிரங்குகளுக்குப் பூசலாம். பாலுக்கு வாதவலி, புரை, விரணம், வாய்ப் புற்று, தொடைவாழை முதலியவற்றைப் போக்கும் ணங்களுண்டு. மரப்பால் பேதியை உண்டாக்கும்: இது மேல் பூச்சு மருந்தாக உடலில் உண்டாகும் அரிப்பு ஈறு நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும். இப்பாலைப் பெருமளவில் பயன்படுத்தினால் நஞ்சாக அமைகிறது. இப்பாலில் புளுமிமெரிக் அமிலத்தின் உப்பு உள்ளது. இதில் செரோட்டிக் அமிலம், அசெட் டைல் லூபியோல் முதலியவையும் உள்ளன. கோ. அர்சுணன்