பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டமைப்புக்‌ கூறுபாடுகள்‌ 71

ஒப்பிட மேல்புறம் எளிய அமைப்பில் இருக்குமாயின் அது தள்ளுபெயர்ச்சிப்பிளவு அல்லது தள்ளல் (thrust) எனப்படுகிறது. இவ்வகைப் பாகுபாட்டுள் அமிழ் கோண அளவு 45 க்கும் மேலாயின் அது தலைகீழ்ப் பெயர்ச்சிப்பிளவு எனப்படுகிறது. வடிவமைப்பு அடிப் படையில் வகுக்கப்பட்ட சில பெயர்ச்சிப் பிளவுகள் தோற்ற மூல அடிப்படையில் வகுக்கப்படும் வற்றோடு ஒப்பிடும்போது வெவ்வேறு வகையின் ஒரே கலைச்சொல்லால் குறிக்கப்பட்டுள்ளமை ஓரளவு குழப்பத்தையே ஏற்படுத்தும். அந்தந்தக் கலைச் சொற்கள் அந்தக் குறிப்பிட்ட பிரிவின் பொருள் தர அடைப்பிற்குள் எவ்வகை இனப்பிரிவு என்பதைக் குறிப்பிடலாம். தள்ளல் வகையில் அமிழ்கோண சில கட்டமைப்புக் கூறுபாடுகள் 71 அளவு 45°க்கும் குறையும். ஆனால் இது 10க்கும் குறைவாக இருந்து, மிகுதியான மொத்த நழுவலை யும் கொண்டிருந்தால் அத்தகைய பெயர்ச்சிப் பிளவு களை மிகுதள்ளல் (over thrust) என்பர். பெயர்ச்சிப் பிளவின் தொங்குசுவர், தாங்கு சுவரைவிடக் கீழிறங்கியிருந்தால் அது இயல்பு பெயர்ச்சிப்பிளவு எனப்படும். இது ஈர்ப்புப் பெயர்ச் சிப் பிளவு (gravity fault) என்றும் குறிப்பிடப்படும். மலைச்சாரல்களில் மேலிருந்து சமதளம் நோக்கிப் பாறைகள் சரியும்போது மிகக்குறைந்த சாய்வுக் கோணமுள்ள இயல்பு பெயர்ச்சிப் பிளவுகள் உண்டா னால் அது இயல்பு பெயர்ச்சிப் பிளவு (detachment fault) எனப்படும். (2) (26)

X the படம் 20 (அ) தொட்டிப்பெயர்ச்சிப் பிளவு, (ஆ) மேடைப் பெயர்ச்சிப் பிளவு, (இ) படிக்கட்டுப் பெயர்ச்சிப் பிளவு (இ)