பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கட்டமைப்புக்‌ கூறுபாடுகள்‌

72 கட்டமைப்புக் கூறுபாடுகள் பெயர்ச்சிப்பிளவின் இடநகர்வு செவ்வமிழ் திசைக்கு இணையாக அமைந்தால் செல்லமிழ்திசை நழுவல் அமிழ்கோண நழுவலைவிட மிகுதியாகும். அத்தகைய பெயர்ச்சிப்பிளவைச் செவ்வமிழ்திசை நழுவல் பெயர்ச்சிப் பிளவு என்பர். பெயர்ச்சிப்பிள வின் ஒரு பக்கத்தில் நின்று எதிர்ப் பக்கத்தை நோக் கும்போது எதிர்ப்பக்கத்தின் இடமாற்ற நழுவல் இடப் புறமா வலப்புறமா என்பதைக் கொண்டு வலம் நழுவு பெயர்ச்சிப் பிளவு என்றும், இடம் நழுவு பெயர்ச்சிப் பிளவு என்றும் பகுப்பர். நகர்வின் முழுமையை நிலையான ஒப்புநோக்கி யுடன் இணைத்துப் பெயர்ச்சிப் பிளவுகளை வகுப் பதும் உண்டு. சராசரிக் கடல்மட்ட அளவு போன்ற ஒப்பு நோக்கிகள் கொண்டு தொங்கு சுவர், தாங்கு சுவர்களின் கணிக்கப்படுகிறது. இடப்பெயர்ச்சி இயல்பு பெயர்ச்சிப் பிளவில் தாங்குசுவர், இடப் பெயர்ச்சி பெறாமல் தொங்கு சுவர் கீழே நகர்தல், தாங்குசுவர் மேல் உயர்ந்து தொங்கு சுவர் நிலையாக இருத்தல், தொங்கு சுவர் கீழிறங்கித் தாங்குசுவர் மேலேறல், இரு சுவர்களும் இயங்கினும் தொங்குசுவர் மிகுதியாக இறங்குதல், இரு சுவர்களும் மேலே என உயரத் தொங்குசுவர் குறைவாக உயர்தல் ஐவகையாகும். தள்ளுப் பெயர்ச்சிப்பிளவிலும் இணை யான ஐவகை உண்டு. மேலும் மிகு இடைக்கோணங் கொண்ட பெயர்ச்சிப் பிளவுகளின் மேலெழுந்த பகுதி இயக்கம் மிக்கதாக இருக்கும். இவை மேல்தள்ளுப் பெயர்ச்சிப்பிளவுகள் (up thrust fault) எனப்படும். தாங்குசுவர்ப் பகுதி இயக்கம் மிகுந்துள்ள இடைக்கோணத் தள்ளும் பெயர்ச்சிப் பிளவுகளைக் கீழ்தள்ளும் பெயர்ச்சிப் பிளவு (down thrust fault) என்பர். மிகு இரண்டு ணைப்பெயர்ச்சிப் பிளவுகளுக்கு இடையே உள்ள பகுதி கீழ்நோக்கித் தள்ளப்பட்டு நடுவில் பள்ளப்பகுதி உருவாகும் பெயர்ச்சிப் பிளவு தொட்டிப் பெயர்ச்சிப் பிளவு (trough fault) எனப் படும். இதன் பரப்பளவு மிகப்பெரிய அளவு பள்ளத் தாக்குகளை உருவாக்கும் அளவில் அமையும்போது பிளவுப் அவற்றைப் பள்ளத்தாக்குகள் என்பர். இரண்டு ணைப் பெயர்ச்சிப் பிளவுகளுக்கு டையே உள்ள பகுதி மேல் எழுந்து உள்ளதை மேடைப் பெயர்ச்சிப் பிளவு (horst) என்பர். பல இணையான பெயர்ச்சிப் பிளவுகளால் ஒரே திசையில் படிவங்கள் கீழிறங்கிப் பல தளங்களாகத் தோற்றம் அளிப்பின் அவற்றைப் படிக்கட்டுப் பெயர்ச்சிப் பிளவுகள் (step faults) என்பர் (படம் 20). கட்டமைப்புக் கூறுபாடுகளின் அடுத்த பெரும் பகுதி படிவிலா இடைவெளிகள், படிவு குறைந்த இடைவெளிகள் ஆகும். நிலக்கட்டமைப்பியலில் படி விலா இடைவெளிகளின் ஆய்வு பல்வேறு சூழ்நிலை களில் இன்றியமையாதது ஆகும். பாறைப்புடைப்பு வகை மாற்றங்களின் செயல்முறைகள் (tectonic pro- cesses) பாறைச் சிதைவுறல், பாறைப்பொருள் படி வுறல் (depositional) போன்றவற்றைத் தோற்றக் காரணங்களாகக் கொண்ட படிவிலா இடைவெளி அமைப்பு, சில சமயங்களில் பெயர்ச்சிப் பிளவு எனக் கருதவைக்கும் தன்மையுடையது. படிவுப்பாறை களோடு பிற இனப் பாறைகளின் சிதைவுறல், படி வுறல் நிகழ்ச்சிகளுக்குச் சான்றாக நிற்கவல்லது. பாறை அடுக்கியல், படிவுப் பாறை இயல், லாற்றியல் துறைகளில் படிவிலா இடைவெளி பற்றிய அறிவு மிகவும் பயன்தரும். பாறைப் படிவங்கள் சிதைவுற்ற தளம், படிவங்கள் சில காலத்தில் படியாத தளம் ஆகிய இரண்டுமே படிவிலா இடைவெளி களைத் தோற்றுவிக்கும். படிவிலா இடைவெளியைக் கண்டறியப் பல படிவுகள் கொண்ட பாறையடுக்கை ஆய்வு செய்யலாம். நிலவர பலவகைப் பாறைகள் ஒன்றின் மேல் ஒன்றாகப் படியும் காலத்தில் படிவப் பாறை மேலும் படிவங் களைத் தன்னகத்தே ஏற்கவியலாமல் அப்படிவுச் சூழலில் இருந்து மேல் எழ, மேல் எழுந்த தளம் சிதைவுற்றுப் பாறைப் பொருள்கள் பிறவிடத்திற்குக் கடத்தப்பட்ட பின்பு, மீண்டும் வாய்ப்பான சூழவில் அதே தளத்தின் மேலே பிற இளைய பாறைப் படி வங்கள் படர்ந்துள்ள படிவப் பாறையில் படிவிலா டைவெளியைக் காணலாம். பாறைகள் தொடர் பாகப் படிய வேண்டிய நிலையில், படியாத படிவம் ஒன்றோ பலவோ படிந்த படிவங்களில் சிலவேர் ஒன்றோ சிதைவுற்றுத் தோன்றும் அமைப்பைப் படிவிலா இடைவெளி எனலாம். பாறைப் படிவச் சிதைவுறல் தோன்றும் முன்பும் பின்பும் படிவுப் கட்ட பாறைகளே உண்டான ஒரு படிவப் பாறைக் மைப்பால் சிதைவுற்ற புறப்பரப்புப் பகுதியைப் படி விலா இடைவெளி என்பர். எரிமலைப் பாறை தோன்றிச் சிலகாலம் அதன் புறப்பரப்புச் சிதைவுற்று, மீண்டும் அதன்மேல் படிவுப் பாறைகள் தோன்றினால் எரிமலைப் பாறையின் மேல்தளமும் படிவுப் பாறையின் கீழ்த்தளமும் இணையும் ஒழுங்கற்ற புறப்பரப்பைப் படிவிலா இடை வெளி எனலாம். எரிமலைப் பாறைகள், படிவுப் பாறைகள், அனற் பாறைகள் போன்றவை ஒன்றின் மேல் ஒன்றாகவோ, பிற இனப்பாறைகளின் மீது ஒன்றின்மேல் ஒன்றாகவோ படிவுறும்போது திசை வுற்ற பரப்பின் மேல் ஒன்றோ பல படிவங்கள் படியாத சூழ்நிலையிலோ, ஒரு படிவத்தின் சிதை வுற்ற பரப்பின் மேல் படிந்த படிவங்களின் தொகுப் பில் சிதைவற்ற பரப்பு அமையும் பாறையமைப்பைப் படிவிலா இடைவெளி கொண்டது என்று கூறலாம். படிவிலா இடைவெளி என்னும் பகுப்பின் உள்ளேயே சாய்வுப் படிவிலா இடைவெளி, படிவு குறை இடை வெளி, சிற்றிடப் படிவிலா இடைவெளி, இனமிலா இடைவெளி என்னும் பெரும் பிரிவுகளும் அடங்கும். எவ்வகையாயினும் படிவிலா இடைவெளித் தோற்றத்