74 கட்டமைப்புக் கூறுபாடுகள்
74 கட்டமைப்புக் கூறுபாடுகள் கட்டமைப்பாலும் குறிப்பிட்ட கோணத் திசைகளில் வழவழப்பான தளங்களோடு பெரும்பாலும் முறிவு பெற்று இடப்பெயர்ச்சியின்றி இறுக்கமாகவே இருக்கும் அமைப்பாகும். பெரும்பாலான பெயராப் பிளவுகள் (joints) சமதளப்பகுதி உடையன. எனினும் வளை வுற்ற பிளவுத் தளங்களைக் கொண்ட பாறைகளும் உண்டு. இடம் பெயரா இறுக்கமான முறிவுடைய இப்பாறைகளின் இடைவெளி தட்பவெப்பத் தாக்கத் தால், வேதிமாற்றங்களால் விரிவுற்று அகன்று தோன்றலாம். பெயராப் பிளவுகள் செந்தளம், கிடைத்தளம், அனைத்துச் சாய்கோணத் தளம் இவற்றிலும் அமையலாம். அமிழ்கோணமும் செவ் வமிழ்திசையும் பாறைப் படிவங்களின் பிற தளங் களைக் கணக்கிடுவதைப் போன்றே கணக்கிடப்பட வேண்டும். போக்குத் பெயராப் பெயராப் பிளவுகள் அவற்றின் திசைகளைக் கொண்டு அமிழ்கோணப் பிளவு, செவ்வமிழ்திசைப் பெயராப்பிளவு, பாறைத் தளநெறிப் பெயராப் பிளவு என வகையிடப்படும். இப்பிளவுகள் பெரும்பாலும் ஒன்றிற்கு ஒன்று இணை யாகவே இருக்கும். பேரளவு இணையாகவிருக்கும் சில பெயராப் பிளவுகளைச் சிறுகுழு (set) என்றும், சில குழுக்கள் இணைந்த பெயராப் பிளவுகளைப் பெயராப்பிளவுக்குழுமம் (joint system) என்றும் தொகுப்பர் (படம். 22). பெயராப் பிளவுகளைத் தோற்றமூல அடிப் படையிலும் வகுப்பது உண்டு. பாறைத் தோற்றத் தகைவு (tectonic stresses) பாறை முறிவுறுதற்குப் பலகாலம் முன்னரே இயங்கிய எச்சத்தகைவு (residual stress), வெப்ப ஆற்றல் வெளியேற்றத்தால் ஏற்படும் சுருக்கங்கள் புறநிகழ்ச்சிகளால் (மலைச்சரிவு போன்றன) ஏற்படும் அழுத்த ஆற்றலையும், இழுப்பு ஆற்றலையும் அடிப்படையாகக் கொண்டு பல்வகைப் பெயராப்பிளவுகள் தோன்றுகின்றன. நிலமடிப்புகள் தோன்றியுள்ள பாறைப் படிவங்களில், நிலமடிப்புகள் தோன்றக் காரணமாயிருந்த உள்நோக்கு அழுத்தத் தால் ஒழுங்குடன் அமைந்த பெயராப் பிளவுகளும் தோன்றுகின்றன. நிலமடிப்புகளின் அச்சுத் தளத்திற்குச் செந் தளத்திலும், இணைத் தளத்திலும் தோன்றும் பெயராப்பிளவுகளை முறையே தொடர்விரிவுப் பெயராப்பிளவுகள் என்றும், விடுபட்ட பெயராப் பிளவுகள் என்றும் குறிப்பிடுவர். நிலமடிப்புகள், இணை செந்தளப் பெயராப் பிளவுகளையும் (conju- gate joint system) கொண்டிருக்கும். அவை செந்தரக் குறுக்குப் பெயராப் பிளவு இணைகளாகவோ (vertical diagonal joints) செவ்வமிழ்திசைப் பெயராப்பிளவு இணைகளாகவோ அமையும் தூண் தோற்றமுடைய (columnar joints) அனற்பாறைகளில் பெயராப்பிளவுகள் மிகுதியாக 3 5 8 அ படம் 22. 12) - குறுக்குப் பெயராப்பிளவு 589-படிவுப் பெயராப்பிளவு அஆஇ - செந்திசைப் பெயராப்பிளவு ஊஒஓ-அமிழ்கோணப் பெயராப்பிளவு