76 கட்டமைப்புக் கூறுபாடுகள்
76 கட்டமைப்புக் கூறுபாடுகள் காணப் அதன் துணைக்கண்டத்துப் பாறையடுக்குகளில் படுகின்றன. அசாம் பீடபூமி. டெர்சரித் காலத்தில் பெயர்ச்சிப் பிளவை ஏற்றுள்ளது. மேற்கு, தெற்கு எல்லைப் பகுதிகளில் மிகைத் தள்ளல் பெயர்ச்சிப் பிளவுகள் (over thrust) வடக்கில் இருந்து காணப்படுகின்றன. இப்பகுதியில் கிழக்கில் தொடர்ந்து சென்றால் ஒருகோண நிலமடிப்புக் கொண்டு (monoclinal fold) நிலமடிப்பின் தென் பகுதி கிழக்கு வங்கப் பகுதியை நோக்கி மிகுஅமிழ் கோணம் பெற்றுச் சமவெளியுள் சரிந்துவிடுகிறது. அசாம் பீடபூமியின் மேற்கு எல்லைக்கும் இராஜ் மகால் குன்றுக்கும் இடைப்பட்ட பகுதி கிரேபன் பெயர்ச்சிப் பிளவுற்று அவ்விடைவெளி ஜுராசிக் காலத்திற்குப் பிந்தைய படிவங்களால் நிரப்பப் பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் இட்ட துளைக்குழாய்க் கிணறுகளிலிருந்து அறிந்தவாறு 4000 மீட்டர் ஆழத்தில் பல இடங்களில் இராஜ்மகால் எரிமலைப் E பாறைகள் உள்ளன. இவற்றின் படிவ ஆழம் கிழக்குத் திசையை நோக்கிச் செல்லச் செல்ல அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இது படிகட்டுப் பெயர்ச்சிப் பிளவு இருப்பதை உறுதிப்படுத்துகின்றது. அசாம் பீடபூமிக்கும் இமயமலைத் தொடருக்கும் இடையே அமைந்த தொட்டியமைப்பு, பிரம்ம புத்திரா நதியோட்டத்திற்கு வழிசெய்கிறது. இது இமயத்தின் அடிவாரப் பள்ளத்தின் கிழக்குத் திசைத் தொடர்ச்சியாகும். போட்வார் பீடபூமி கிழக்கு- வடகிழக்குக்கும், மேற்கு-தென்மேற்கிற்குமாக அச்சுக் கொண்ட சுவட்டு நிலமடிப்புத் தொட்டியமைப்பைக் (synclinal trough) கொண்டதாகும். அதன் வழி வெல்லையில் அமைந்துள்ள கலாசித்ரா, மார்கலாக் குன்றுகள் நெருங்கியமைந்த சமகோண நிலமடிப்பு களைக் கொண்டுள்ளன. வடஇந்தியப் பெருவிந்தியக் குழிவுச் சாரல் (great vindhyan basin) 60,000 ச.கி.மீ. அளவு டையது. இதன் வட எல்லைப் பகுதியிலுள்ள தலை படம் 24. (அ) களிமண், வறட்சியால் சுருங்க, உண்டாகும் அறுகோண உடைவு (ஆ) தூண் தோற்றப் பெயராப்பிளவு