பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டமைப்புகள்‌, வேளாண்மை 77

கீழ்ப்பெயர்ச்சிப் பிளவு, இராஜஸ்தானின் பெரும் எல்லைப் பெயர்ச்சிப்பிளவு எனப்படுகிறது. இதன் நீளம் 750 கிலோ மீட்டருக்கும் மேலாகும். கோண்டு வானாப் படிவங்களில் பஞ்சட் பெரு நதிப்பிரிவு களுக்கு இடையே சிலகாலம் படிவங்கள் உருவாவதில் தொடர்ச்சி விடுபட்டுப் படிவுகுறை இடைவெளி உள்ளது. கீழ்க்கோண்டுவானாப் படிவங்களே மிகுதி யான நிலக்கரிப் படிவங்களைக் கொண்டுள்ளன. மேல் டிரையேசிக் மற்றும் கீழ் ஜுராசிக் காலத்தில் தோன்றிய பெயர்ச்சிப் பிளவுகளின் அமைப்பாலேயே நிலக்கரிப் படிவங்கள் இன்றுவரை தாக்கமுற்று வருகின்றன. உள்ளன. காஷ்மீர், இமாலயப் பகுதியில் குறைந்தது மூன்று தள்ளுபெயர்ச்சிப் பிளவுப் பிரிவுகள் சிவாலிக் மற்றும் கீழ்மட்ட இமயப் பாறைப் பிரிவு களில் இவை அமைந்துள்ளன. இதன் தென்கோடித் தள்ளும்பெயர்ச்சிப் பெயர்ச்சிப் பிளவு(main boundary fault) எனப்படு கிறது. இப்பிளவே சிவாலிக் பாறைகளை முந்தைய டெர்ஷரி மற்றும் பழம் பாறைகளில் இருந்து பிரிக் கின்றது. இமய எல்லை, கீழ்மட்ட இமயவளைவு lesscr Himalayan belt), எவரெஸ்ட், கஞ்சன்ஜங்கா உள்ளிட்ட மத்திய இமயப்பகுதி, டெத்திஸ் இமயப் பிரிவு ஆகியவற்றிலும் தள்ளல் கட்டமைப்பு உள்ளது. பிளவு, தலைமை எல்லைப் தென்குமரியில் இருந்து மேற்குக் கத்தியவார் வரை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி யுள்ள கட ற்கரையின் கண்டப்படுகை (continenta) shelf) ஒரே நேர்கோட்டு அமைப்பில் உள்ளதன் காரணமே இப்பகுதியில் ஏற்பட்ட பெயர்ச்சிப் பிளவினாலாகும். இது டெர்ஷரி காலத்தில் ஏற் பட்டிருக்கக் கூடும். கடற்கரையை ஒட்டி இரத்தின கிரி முதல் பம்பாய்க்கும், வடக்கு வரை உள்ள வெந் நீர் ஊற்றுக்கும் நேர்கோட்டு அமைப்பில் உள்ளது கடற்கரைக்கு ணையாகப் பல பெயர்ச்சிப் பிளவு கள் உள்ளமையைக் குறிக்கின்றது எனலாம். இவை கீழ் மையோசின் காலத்தனவாகலாம். முற்காலத்தில் ஆழம் குறைந்த அந்தமான் கிழக்குக் கடற்பகுதிகூடப் பெரும் பெயர்ச்சிப் பிளவுகளுக்கு ஆட்பட்ட பின்பே இப்போது உள்ள மிகுதியான ஆழமான 12.000 அடியைப் பெற்றிருக்கக்கூடும். ம.சிவகுமாரன் நூலோதி. M.P. Billings, Stractural Geology, prentice Hall of India Pvt Ltd, New Delhi, 1984; E.S. Hills, Outlines of structural Geology, Me Thuem, London; M.S. Krishnan, Geology of India and Burma, Higginbothams Pvt. Ltd, Madras. கட்டமைப்புகள், வேளாண்மை 77 கட்டமைப்புகள், வேளாண்மை வேளாண்மையில் பயன்படும் கட்டமைப்புகளை நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை. குடியிருப்புக் கட்டமைப்புகள், பாசனக் கட்டமைப்பு கள், சேமிப்புக் கட்டமைப்புகள், கட்டமைப்புகள் எனப்படும். பலவகைக் குடியிருப்புக் கட்டமைப்புகள். நல வாழ்வுக்கும், மழை. வெயில் போன்றவற்றிலிருந்து விடுபட்டுச் சமநிலையான சூழலில் வாழ்வை நடத்தவும் இருப் பிடம் தேவையாகிறது. வேளாண்மைப் பார்வையில் இதைப் பண்ணை இல்லம் (farm house) என்று குறிப்பிடலாம். ஓர் இல்லத்தில் இருக்கவேண்டிய பகுதிகள் அனைத்தும் பண்ணை இல்லத்தில் இருந் தாலும், இதற்கெனத் தனித்த கூடுதல் வசதிகள் தேவைப்படுகின்றன. ஆகவேதான் து பண்ணை இல்லம் எனப் பெயர் பெற்றது. பண்ணை இல்லம். இந்த இல்லம் பண்ணையில், அதாவது வயல் வெளியில் அமைக்கப்படும் இல்ல மாகும். இதை அமைக்கும்போது சில முக்கியமான கருத்துகளை நினைவில் கொள்ள வேண்டும். அவை, பண்ணை இல்லம் பண்ணையின் மையப் பகுதியில் இருக்க வேண்டும். அதன் மூலம் பண்ணையில் பல் வேறு பகுதிகளில் நடக்கும் வேலைகளைப் பார்வை யிடுவது எளிதாகும். பண்ணை இல்லம் சற்று மேட்டுப் பாங்கான இடத்தில் அமைய வேண்டும். மழை நீர் வழிந்தோடும் வசதியுடன் வேற்று நீரும் தேக்கமுறு வது.இதனால் தடுக்கப்படும். சற்றே ஊட்டம் குறைந்த நிலப்பரப்பையே இதற்கெனத் தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறில்லையெனில் வேளாண்மைக்கு அடிப்படையான ஊட்டமிகு நிலம் வீணாகிவிடும். ல் கிளைச்சாலை அல்லது பொதுச்சாலைகளுக்கு அருகில் இல்லம் இருந்தால் போக்குவரத்து நேரம் குறையும். அதாவது தானியம், காய்கறிகளைக் கடை களுக்குக் கொண்டு செல்லும் நேரம் குறைவாகும். மாட்டுத் தொழுவம், தூற்றுங்களம் போன்றவற்றிற் குச் சற்றுத் தள்ளி இல்லம் அமைக்கப்படுவதோடு, இங்கிருந்து வீசும் காற்றுக்கு எதிர்த்திசையில் இருப்ப தும் முக்கியம். இதன்மூலம் மாட்டுத் தொழுவத்தின் நாற்றமும், தூற்றும் களத்திலிருந்து எழும் தூசியும் தவிர்க்கப்படலாம். படுக்கை அறையைக் கிழக்கு நோக்கி அமைத்தல். அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கழிவறைக்குச் செல்ல வழிவைத்தல், சமையல் அறையும், பண்டங்களின் அறையும் அருகருகே இருத்தல் போன்ற பொது விதிமுறைகள் பண்ணை இல்லத்துக்கும் பொருந்தும். கால்நடைக் கட்டமைப்புகள், பண்ணை இல்லம் போன்றே கால்நடைகளின் இல்லத்திற்கும் சிறப்பளிக்க வேண்டும்.