பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கட்டமைப்புகள்‌, வேளாண்மை

78 கட்டமைப்புகள், வேளாண்மை பால்பண்ணைக் கட்டமைப்புகள் (diary buildings). பால்வளத்தைப் பெருக்கும் பல்வேறு திட்டங்களைத் தேவை கருதி அரசு உருவாக்கிவரும் இந்நாளில் பசுக்கள் நலமான சூழ்நிலையில் பாதுகாக்கப்படுவது இன்றியமையாததாகும். பசுக்களுக்கு மட்டுமன்றி உழவு மாடுகளுக்கும் இப்பாதுகாப்புத் தேவையாகும். இக்கண்ணோட்டத்தில் கால்நடைக் சுட்டமைப்பு களுக்கு மூன்று பகுதிகள் இன்றியமையாதவையாகும். மாடு நிற்கும் பகுதி. மாடு நின்று அசைபோடுதல், ஓய்வெடுத்தல் போன்ற அனைத்துச் செயல்களும் இப்பகுதியிலேயே நடைபெறுகின்றன. இப்பகுதியின் அளவுகள் மாட்டின் அளவைப் பொறுத்து மாறுபடும். சாதாரணமாக, 2. 8 மீட்டர் × 1.2 மீட்டர் அளவு வண்ணம் இது போதும். கழிவுநீர் வழிந்தோடும் சற்றே சாய்வுடன் அமைக்கப்பட வேண்டும். இரை போடும் பகுதி. சற்றே அகலமாகவும், மாடு நிற்கும் பகுதிக்கு முன்புறம் சிறு தடுப்பின் மூலம் பிரிக்கப்படுமாறும் இது அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான், மாடு புல்லை மிதித்து வீணாக்கு வதைத் தவிர்க்கலாம். 0.5 அகலமும், 0.3 உயரமும் இருந்தால் போதும். கொட்டில் தொட்டி மாடு நிற்கும் பகுதி நீர்வழிப் பகுதி. மாட்டின் கழிவு நீர், தொழுவத் தைக் கழுவித் தூய்மை செய்யும்போது ஊற்றப்படும் நீர் ஆகியவை முறையாக வெளியேற்றப்பட,மாடு நிற்கும் பகுதியின் கீழ்ப்பகுதியில் சிறு பள்ளம் அமைக்கப்பட வேண்டும். இது வடிநீர்க்கால் அல்லது சால்வரி எனப்படுகிறது. இது இல்லாத நிலையில் நீர்த்தேக்கம் ஏற்பட்டு அதில் கொசு முதலியவை பெருகி நலவாழ்வைக் கெடுக்கும். 5 செ. ஆழமும். 10- 15 செ. மீ அகலமும் உடையு வாய்க்கால் போன்ற அமைப்பு இதற்குப் போதும். முதல் வகையில் இரு வரிசைகளுக்கும் சால்வரிப் பகுதி பொதுவாயிருக்கும். இரண்டாம் வகை யில் கொட்டில் தொட்டிப் பகுதி பொதுவா யிருக்கும். சரியான பாதுகாப்புக்கு இம்மூன்று பகுதி களும் கற்காரைக் கலவை கொண்டு பூசப்படவேண் டும். மேலும் நீர்த் தொட்டியை இந்த அமைப்புக்கு அருகில் வைக்க வேண்டும். பிண்ணாக்குப் போன்ற தீவனங்களைச் சேர்த்து வைக்க ஒரு கிடங்கு தனியே இருக்க வேண்டும். நீர்த் தொட்டியின் உயரம் 0.5 மீட்டருக்குள் இருக்க வேண்டும். கன்றுகள் பெரும்பாலும் வளர்ந்த மாடுகளுட கொட்டில் தொட்டி மாடு நிற்கும் பகுதி சால்வரி சால்வரி படம் 1 தலைகள் வெளிப்புறமாக உள்ள அமைப்பு மாடு நிற்கும் பகுதி கொட்டில் தொட்டி மாடுநிற்கும் பகுதி. படம் 2. தலைகள் உட்புறமாக உள்ள அமைப்பு சால்வரி