கட்டமைப்புகள், வேளாண்மை 79
னேயே கட்டப்படுகின்றன. அவற்றுக்கென்று தொழு வத்தைத் தனியே அமைத்தல் சிறந்ததாகும். இதைக் கன்றுத் தொழுவம் என்பர். கூரையுடன் கூடிய சிறுபகுதியும், அதையொட்டி வேலியிட்ட திறந்த வெளி அமைப்பும் போதுமானவை. திறந்த வெளி யிலேயே தண்ணீர்த் தொட்டியையும் அமைக்கலாம். கன்றுகள் மேய்வதற்குத் திறந்தவெளி மிகவும் தேவை. நோயுற்ற மாடுகளுக்கெனத் தனிப்பகுதி அமைக்க வேண்டும். முதன்மைக் சுட்டடத்திற்குச் சற்றுத் தள்ளி இதை அமைத்தல் நலம், அதன்மூலம் நோய் பரவாமல் தடுக்க வழியேற்படும். கோழிப்பண்ணைக் கட்டமைப்புகள். இந்த அமைப்பு களில் பல்வேறு புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றுள் அடுக்கு அமைப்பு குறிப்பிடத்தக்கதாகும். இம்முறை பறவைகளுக்கு முறையான பாதுகாப்பு அளிப்பதோடு, தேவையான இடப்பரப்பில் பெரும் பகுதி எஞ்சுகிறது. இம்முறையில் ஒவ்வொரு பறவை யும் தனித்தனியான கூண்டில் அடைக்கப்படும். கம்பி வலையாலான இக்கூண்டின் பின்புறம் ணைக்கப் பட்டுள்ள சிறு குழிபோன்ற வடிவத்தில் முட்டைகள் சேர்க்கப்படுகின்றன. எச்சம் கீழே விழுந்து அங்குள்ள பள்ளத்தில் தேக்கப்படும். ஒவ்வொரு கூண்டுடனும், தீவனத்திற்சென ஒரு பகுதியும், நீருக்கென ஒரு பகுதியும் இணைக்கப் படுகின்றன. இம்முறையால் கோழிகள் கூண்டில் இருந்தபடியே எல்லாவற்றையும் பெறமுடியும். பறவைகள் தம் விருப்பம் போல் பறக்க, போதுமான உயரத்துடன் கட்டமைப்பு இருத்தல் வேண்டும். மேலும் அவை ஓய்வு கொள்ளச் சிறுசிறு கூம்புகளை நீளவாக்கில் அமைக்க வேண்டும். இங்கேயும் இளம் பறவைகளை வளர்ப்பதற்குத் தனியான பகுதி தேவையாகும். இதை அடைகரப்பகம் என்பர். பன்றிகளுக்கான கட்டமைப்புகள். இதில் வெள் ளைப் பன்றிகளே கணக்கில் கொள்ளப்படுகின்றன. சரியாகப் பாதுகாத்து விற்கும்போது இவற்றால் பெரு மளவில் வருவாய் பெற வாய்ப்புள்ளது. பன்றிகளின் இல்லம் மிக எளிதாக அமைக்கப்படலாம். மாடுகளுக் உள்ள மூன்று பகுதிகளே போதுமானவை. ஆனால் அவற்றுடன் ஒவ்வொரு பகுதியும் பூட்ட வல்ல தடுப்புடன் இருக்க வேண்டும். இதனால் பன்றிகள் தாவிக் குதித்து வெளியேறுவதைத் தடுக்க லாம். கென் பாசனக் கட்டமைப்புகள். நீரின் பயனைப் பெருக்க வும், மிகுதியான நிலத்திற்கு அதைப் பாய்ச்சவும் கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன. நிலப்பரப்புக் கட்டமைப்புகள், நிலத்தடிக் கட்டமைப்புகள் என்று இருபெரும் பிரிவுகள் உள்ளன. வடிவமைக்கப்பட்ட வாய்க்கால், பிரிப்புப் பெட்டி, மடைதிருப்புக் கட்ட மைப்பு, இறக்கக் கட்டமைப்புகள் ஆகியவை மேற் பரப்புப் பாசனத்திற்கு உரியவை. இவற்றைச் கட்டமைப்புகள், வேளாண்மை 79 சரியான முறையில் மேலாண்மை செய்யும்போது 30%நீரைத் தேக்க முடியும். எக்கிக் கட்டமைப்பு, காற்றுப் போக்கி. அல்ஃ பால்ஃபா கட்டுப்பாட்டிதழ் போன்றவை நிலத்தடிக் கட்டமைப்புக்களாகும். இவற்றை அமைத்துக் கொள்வ தன் மூலம் வாய்க்கால்களால் விளைநிலம் வீணாவ தைத் தடுக்கலாம். ஆனால் இதை நிறுவ முதலில் கூடுதலான தொகை செலவாகும். சேமிப்புக் கட்டமைப்புகள். தானியங்களை முறை யாகச் சேர்த்து வைக்கும்களிமண்ணால் ஆன மண் குதிர் சிற்றூர்களில் சிறப்பானதாகும். இருப்பினும் அடிக்கடிப் பழுதுபார்க்க வேண்டியிருத்தலும். நிரப்புதல், வெளியேற்றுதல் போன்ற தொல்லை களும் இதில் உள்ளன. மரத்தாலான குதிர்களும். தார் டப்பாக்களால் ஆன குதிர்களும், பாலீதீன் குதிர்களும் தற்போது பயன்படுகின்றன. இவற்றை விட நவீன கிடங்கு மேலானது. எலிகளின் தால்லை சிறிதளவும் இல்லையென்ற காரணத்தால் இது எலித்தொல்லையற்ற கிடங்கு எனப்படுகிறது. தானியங்கள் பெரும்பாலும் சாக்கு மூட்டைகளில் வைக்கப்படுகின்றன. கட்டமைப்பின் அளவு, சேமிப் பின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும், தரை மட்டத்திலிருந்து சற்று உயரே அடித்தளம் அமைக்கப் படுவதோடு மூட்டைகளை ஏற்றும் சாய்தளத்திற்கும் கட்டடத்திற்கும் சிறி டைவெளி இருக்க வேண்டும். தானியங்களின் முறையான உயிரோட்டத் திற்குப் போதுமான காற்றுக் கிடைக்கும் வை கையில் XXX து சாய்தளம் அடித்தள மட்டம் படம் 3. புதிய கிடங்கு