80 கன சதுரத் தொகுதி
30 கன சதுரத் தொகுதி 15 2 அல்லி 6 கனகுப் பூண்டு (Exacum pedumculatum) 1. மலர் 2சூல்பையின் நீள்வெட்டு 1. புல்லி இதழ்கள் 4. மகரந்தத்தூள் 5. சூலகம் 8. குல்பையின் குறுக்குவெட்டு மலர்கள். பூக்காம்புச் செதில் இலை போன்றது. ஏறத்தாழ 2 மி.மீ. நீளமுடையது. பூக்காம்பு நாற் கோணமுடையது. கோணங்கள் இறகுபோல் அகன்று 1 செ.மீ. நீளத்திற்குக் குறைவானவை. பூவடிச் செதில்களற்றவை. ஆரச்சமச்சீர், இருபால் மலர்கள், மேல் மட்டச்சூற்பை, நான்கங்க மலர்கள். புல்லி வட்டம். 4. இணைந்த புல்லி இதழ்கள் மேற்பகுதி பிரிந்தவை. முதுகுப்புறம் இறக்கை உடையன, நீள் கூர் நுனியும் மெல்லிய இரம்பப்பல் விளிம்புமுடையது. இறகு அரை வட்டமானது, ஒவ் வோர் இதழும் உட்புறமாக மூன்று நரம்புடையது. சுரப்பி இழைகளுடையது. 40x3.0 மி.மீ. நீளத்தில் வெளிர்பச்சை நிறம் கொண்டது, அல்லி வட்டம், நான்கு, இணைந்த அல்லி இதழ் கள், அல்லிக்குழல் வெளிர் பச்சையானது, குட் யானது. 2-3 மி.மீ அல்லி இதழ்கள் ஈட்டி வடிவில் உள்ளன. கூர்மையானவை. கீழ்ப்புறமாக வளைந் தவை. ஊதா நிறமுடையவை. அல்லி வட்டம் 1.5 செ.மீ. விட்டமுடையது, வட்ட வடிவமானது. அல்லி இதழ் 80×4, 9 மி.மீ. அகலம் 8.மி.மீ. நீளம் கொண்டது. திருகிதழ் அமைவு, திருகு வலப்புற மானது. மொட்டில் அல்லி இதழ்கள் நிறம், மணமற் றவை. மகரந்தத்தாள் வட்டம். மகரந்தத்தாள்கள் 4 தனித்தவை, அல்லி ஒட்டியவை: அல்லி இதழ்களுக்கு இடையில் அமைந்தவை. மகரந்தத்தாள் குட்டை யானது. மகரந்தப்பை அம்பு வடிவானது, துளை மூலம் வெடிப்பது. மஞ்சள் வண்ணமுடையது. மகரந் தத்துகள்கள் உருண்டையானவை; மகரந்தபபை ஏறத்தாழ 4 மி.மீட்டரும் மகரந்தத்தூள் ஏறக் குறைய 1 மி.மீட்டரும் அளவுடையன. சூலக வட்டம். மேல் மட்டச் சூற்பை: இரண்டு ணைந்த சூலக இலைகளால் ஆனது; ஈரறை உடை யது. 2.2 மி.மீ; சூல்கள் அச்சுச் சூல்ஒட்டு முறையில் அமைந்தவை; எண்ணற்றவை. சூலகத்தண்டு 6 மி.மீ. நீளமுடையது. மழமழப்பானது. சூலகமுடி இரண்டாகக் கிளைத்தது; கிளைகள் மழுங்கிய நுனி களுடன் குட்டையானவை. ஏறத்தாழ் 0.5 மி.மீ. அளவுடையன. கனி. உலர் வெடிகனி. அல்லி, புல்லிகள் நிலைத் தவை: கனி இரண்டு இடங்களில் பக்கவாட்டில் வெடிக்கும். விதைகள் பல கோணங்கள் கொண்டவை. ஏறத்தாழ 0.2 மி.மீ. அளவுடையன. இத்தாவரம் ஜென்சியானா மருத்துவத்தில் பயன் படுவது போன்ற பயன்களைத் தருவதாகும். மேலும் இது ஒரு (deobstruent) வீக்கமுருக்கியாகவும் வாதத்தைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது. க. இராஜசேகரன் கன சதுரத் தொகுதி இந்தப் படிகத் தொகுதியில் உள்ள மூன்று அச்சுகளும் சம நீளங்களைக் கொண்டு, ஒன்றையொன்று செங் கோணத்தில் வெட்டிக் கொள்ளும். இத்தொகுதியில் மொத்தம் இயல் வகுப்பு, பன்னிரு முகவடிவு, எண் முக வடிவு, அறு நான்முக வடிவு, மூவெண்முகவடிவு என ஐந்து வகுப்புகள் உள்ளன.