கனல் குழாய்க் கொதிகலன் 87
வினை நைட்ரைடுகளுடனும், கார்பைடுகளுடனும் புரிந்து கன அம்மோனியர்வையும் (heavy ammonia) சன ஹைட்ரோகார்பன்களையும் கொடுக்கிறது. Mg,N6D,O 3Mg(OD), + 2ND, AI,C, + 12D,0 -- 4A1 (OD), + 3CD, பயன்கள். அணுக்கரு உலைகளில் பெருமளவில் இது நியூட்ரான்கள் மட்டுப்படுத்தியாகப் (moderator) பயன்படுகிறது. கனஹைட்ரஜன் தயாரிக்கக் கனநீர் பயன்படுகிறது. டியூட்டீரியம் அணுப் பிணைப்பாய் முடிவிலா ஆற்றல் வெளியாகிறது. எனவே ஆற்றல் H, + H -→ H, + H, + 4.0 MeV ஹைட்ரஜனைக் உற்பத்திக்குத் தேவையான கன கனநீரிலிருந்து பெறலாம். ஆய்வுக்கூடங்களில் உயிர் வாழ்வனவற்றில் நிகழும் வினைகளை ஆய்வு செய்ய வும், சில வேதி வினைகளின் வினைவழிமுறைகளைக் (mechanisms) கண்டறியவும் இது சுவடறிவானாகப் (tracer) பயன்படுகிறது பகுப்பாய்வு. கனநீரில் டியூட்டீரியத்தின் அளவை அளந்தறிய, பெரும்பாலும் அடர்த்திக் சுண்டுபிடிப்பு களும், ~3/m பகுதியில் அகச்சிவப்பு நிரலியலும் பயன்படுகின்றன. அ. சண்முகசுந்தரம் நூலோதி. C.N.R. Rao, University General Chemistry, Macmillan India Ltd., New Delhi, 1973. கனல் குழாய்க் கொதிகலன் எஃகு அல்லது செம்புத் தகடு தறையாணிகளால் (rivet) ஆன ணைப்புகளுடன் உருளை வடிவப் பாத்திரமாக (shelli அக்காலக் கொதிகலன் (boiler) இருந்தது. பாத்திரத்துக்கு வெளிப்புறம் தீச் செங்கற் களால் (fire bricks) அடுப்புக் கட்டப்பட்டிருந்தது. அறிவியல் வளர்ச்சியின் காரணமாகப் பின்வரும் மாற்றங்கள் ஏற்படலாயின: பாத்திரத்தின் அடிப்பகுதி யில் அடுப்பு அமைக்கப்பட்டது; பல சிறு குழாய்கள் பாத்திரத்திற்குள் அமைக்கப்பட்டு அவற்றின் வழி யாகப் புகை வளிமம் (flue gas) செ செலுத்தப்படுகிறது. பெரிய உருளை வடிவப் பாத்திரம் நீரையும் நீராவியையும் உள்ளடக்கி, கனற் குழாய்கள் நீரை ஊடுருவிச் செல்லுமாறு கனல் குழாய்க் கொதிகலன் fire tube boiler) அமைக்கப்படும். எரிபொருள் எரிக் கப்படுவதால் கிடைக்கும் உயர் வெப்பப் புகை இக் குழாய்களின் வழியே செல்லும்போது தன்னிடமுள்ள கனல் குழாய்க் கொதிகலன் 87 வெப்பத்தைக் குழாய்களைச் சுற்றியுள்ள நீருக்குக் கொடுத்துவிட்டுப் புகைபோக்கி மூலம் வெளியில் செல்கிறது. உருளைப் பாத்திரத்தின் அச்சு, கிடை மட்டமாகவோ செங்குத்தாகவோ இருக்கும். இதில் முக்கிய பகுதி உருளைப் பாத்திரமாக இருப்பதால் இது கூடு கொதிகலன் (shell boiler) என்றும் குறிக் கப்படும். உருளையின் விட்டம் 5 மீட்டர் வரை இருக்கக் கூடும். ஏறத்தாழ 60 செ.மீ விட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு புகைக் குழாய்களோ, 7.5- 10 செ.மீ விட்டமுள்ள மிகு எண்ணிக்கையுள்ள குழாய்களோ பொருத்தப்படுகின்றன. பாத்திரத் திற்குள் அடுப்பு இருப்பதால் எஃகு தகட்டிலான அடுப்புச் சுவர்கள் நீரால் சூழப்பட்டு அத்தகட்டின் மூலமும் வெப்பம் நீருக்குச் செல்கிறது. இவ்வகைக் கொதிகலனில் குழாய்களைத் தாங்கி நிற்கம் உருளையின் முனைகள் சமதளத் தகடுகளால் ஆனவை. உருளை வடிவத் தகட்டைப் போன்று சமதளத் தகடுகள் மிகு அழுத்தத்தைத் தாங்கி நிற்க முடியாமையால் அவற்றிற்கு வலிமை தரக் கம்பி களோ. பட்டைகளோ பொருத்தப்படுகின்றன. சில புகைக் குழாய்கள் வலிமைப்படுத்தும் அமைப்பாகப் பயன்படுத்தப்படுவதுமுண்டு, பாத்திரத்தின் உள்ளே மனிதன் சென்று பாத்திரத்தையும், குழாய்களையும் தூய்மைப்படுத்தவும் அடுப்புக்குள் எரிபொருளைச் செலுத்தவும் தேவையான இறுக்கமான சுதவுகள் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருக்கும். குறைபாடுகள். நீர், பாயாமல் நிலைத்து நிற்பதால் புகையிலிருந்து நீருக்கு ஏற்படும் வெப்ப ஓட்டத்தின் வேகம் குறையும். இதனால் நீராவி உற்பத்தியின் அளவும் குறையும்,உயர் அழுத்தமுள்ள நீராவி தேவைப்படின், அந்த அழுத்தத்தைத் தாங்கும் அளவுக்கு உருளைப் பாத்திர எஃகு தகட்டில் ன் தடிமன் மிகுதியாகும். அதனால் கொதிகலனின் எடை யும் மிகும். அதனால் சதுர சென்டிமீட்டருக்கு 20 கி.கி வரை அழுத்தமுள்ள நீராவி உற்பத்தி செய்யவே இவ்வகைக் கொதிகலன் பயன்படுகிறது. சிறப்புகள். உள்ளடக்கியுள்ள நீரின் அளவு மிகுதியாதலால் இந்நீரின் மட்டம் குறைவதால் விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்புக் குறைவு: இடம் விட்டு இடம் பெயரக்கூடிய கொதிகலன்கள் வ்வகையினவாகவே இருக்கமுடியும். எ.கா: புகை வண்டிகளில் பயன்படும் தொடர் வண்டிக் கொதிகலன். சில முக்கியமான புகைக்குழாய்க் கொதிகலன்கள்: தொடர் வண்டிக் கொதிகலன், இலங்காஷயர் கொதிகலன், கார்னிஷ் கொதிகலன், கோக்ரன் கொதி கலன், ஸ்காட்ச் கடற் கொதிகலன், கிடைமட்டத் திரும்பு குழாய்க் கொதிகலன். படம் 1 இல் கார்னிஷ் கொதிகலன் காட்டப்பட்டுள்ளது. இதன் அச்சு கிடைமட்டமாக உள்ளது. இது செங்கற்களாலும் தீச் செங்கற்களாலும் கட்டப்பட்ட சுவர்களின்