90 கனற்சி
90 கனற்சி ஒரு தொடர் வினையாக அமையும். ஹைட் ரஜனை மீண்டும் உற்பத்தி செய்து கொள்கிறது. இம்முறையில் கிளைத் தொடர் வினைகளும் நடக் கின்றன. அணுக்களும், இயங்கு உறுப்புகளும், ஒன்றோடொன்று இணைந்து சேர்மங்களையோ மீண்டும் அணுக்களையோ இயங்கு உறுப்புகளையோ காடுக்கின்றன. இவ்வினைகள் வளிம நிலையிலோ ஒரு புறப்பரப்பின் மேல் உறிஞ்சப்பட்ட வளிமங் களிலோ நிகழும் வெப்பநிலையை ஒழுங்குபடுத்து வதன் மூலமாகவும், வினைப்பொருள்களின் சேர்க்கை விகிதத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமாகவும் வினைப் பொருள்களுக்கும், புறப்பரப்புகளுக்கும் உள்ள நெருக்கத்தைக் குறைப்பதன் மூலமாகவும் தொடர் வினைகளைக் கட்டுப்படுத்தலாம். . தொடர்வினைகள் நிகழும்போது சிலசமயங் களில் அவற்றின் வளர்ச்சி வேகம், குறையும் வேகத் தைவிட மிகும்போது அவ்வினைகள் வெடித்தல் (explosion) வினையாக மாறும். அச்சமயத்தில் குறுகிய நேரத்தில் மூலக்கூறுகளும் வினையில் ஈடுபடுகின்றன. இவ்வாறு நிகழும் தொடர் வெடிப்பு வினை, அணு உலையினுள் நிகழும் தொடர் வினைகளை ஒத்த தாகும். இவ்வகை வினைகளில் ஒரு யுரேனியம் அணு ஒரு நியூட்ரானோடு வினையில் ஈடுபடும்போது ஒன்றுக்கு மேற்பட்ட நியூட்ரான்கள் வெளிவிடப்படு கின்றன. இவ்வாறு வெளியிடப்படும் நியூட்ரான்கள் தனித்தனியாக ஒரு யுரேனியம் அணுவோடு சேர்ந்து அணுப்பிளப்பில் ஈடுபட்டுத் தொடர் வினையை நிகழ்த்துகின்றன. கிளைத் தொடர் வினை வெடித்தல் (branched chain explosion) நிகழ்வதற்கு மற்றுமொரு காரணம் உள்ளது. வினையின்போது வெப்பம் உண்டாக்கும் வேகம், வெப்பம் வெளியேறும் வேகத்தைவிட மிகும்போது. உயரும் வெப்பம், வினையின் வேகத்தை அதிகப்படுத்தும். ஒரு நிலையில் அனைத்து வளிம மூலக்கூறுகளும் வினையில் ஈடுபடும்போது வெடித்தல் வினையில் முடிகிறது. இவ்வகை வினைக்கு வெப்ப வெடித்தல் வினை (thermal explosion) என்று பெயர், தொடர் வெடிப்பு வினைகளுக்கும், வெப்ப வெடித்தல் வினைகளுக்கும் இடையிலான வெடித்தல் வினைகளும் உள்ளன. இவை வளிமங்களின் வகைகளைப் பொறுத்தும், கலவையில் அவற்றின் விகிதத்தையும், அடர்த்தியை யும், வெப்பநிலையையும் பொறுத்தும் அமையும். மெதுவாக நடைபெறும் கனற்சியில் இடை நிலைப்பொருளைப் பெறலாம். ஹைட்ரோகார்பனின் கனற்சியில் ஆல்டிஹைடுகள் அமிலங்கள் மேலும் பெராக்சைடுகள் முதலிய இடைநிலைப் பொருள் களும் ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் எரியும்போது ஹைட்ரஜன் பெராக்சைடு இடைநிலைப் பொருளும் உண்டாகின்றன. புரோப்பேன், பியூட்டேன், ஈதர் போன்ற ஹைட்ரோகார்பன்கள் குறைந்த வெப்ப நிலையில் எரியும்போது உண்டாகும் ஃபார்மால்டி ஹைடு நீல ஒளியுடன் எரிகிறது. இந்த ஒளிக்குக் குளிர் சுடர் (cool flame) என்று பெயர். வளிமக் கனற்சி வளிமங்களில் நடைபெறும் கனற்சியிலும் வெடித் தல் வினைகளிலும் எரிதல் ஒரே சமயத்தில் வினை முழுவதிலும் நடைபெறுகிறது. மாறாக கலவையை ஒளிச்சுடரால் எரியூட்டும்போது அலை குறுகிய வேக வினை மண்டலமாகி, மொத்த வளிமத்தையும் வெடித்தல் கலவையாக மாற்றுகிறது. இந்த முறையில்தான் பெட்ரோல் எந்திரங்கள் வேவை செய்கின்றன. இவ்வகை வினையில் கனற்சி அலை, ஹைட்ரோகார்பன் காற்றுக் கலவை யில் 0.3மீ செ மீ. வேகத்திலும் ஹைட்ரஜன்-காற்றுக் கலவையில் 6 - 9 மீ/செ.மீ வேகத்திலும் பரவுகிறது. 4 வளிமக் கலவையை வேகமாகக் குலுக்குவதன் மூலம் சுனற்சி அலையின் வேகம் மிகும்போது, அவை அழுத்த அலையை வெளியே அனுப்பும். இந்த அழுத்த அலைகள் வினைக்கலன்களினுள் முன்னும் பின்னுமாக எதிர்பவிக்கின்றன. சில சமயங்களில் மெதுவான கனற்சி அலைகள் ஒன்று சேர்ந்து உயர் வேகமுள்ள வெடிப்பலைகளாக மாறுகின்றன. ஹைட்ரஜன் ஆக்சிஐன் கலவையில் வெடிப்பலையின் வேகம் 3.2.கி மீ/நொடி அளவில் உள்ளது. வெடிப் பால் உண்டாகும் அழுத்தம் மிகவும் அதிகமானது. தனி குறைந்த வெப்பநிலையில், வினையூக்கிகளைப் பயன்படுத்திக் கனற்சிக் கலவைகளை வினையில் ஈடு படுத்த முடியும். கலவையிலுள்ள மூலக்கூறுகள் வினை யூக்கியால் உறிஞ்சப்படுகின்றன. இவ்வாறு உறிஞ்சப் பட்ட வளிம மூலக்கூறுகள் அணுக்களாகவோ, உறுப்புகளாகவோ பிரிந்து வினைபுரிய ஆயத்தமாகின்றன. சான்றாக, பிளாட்டினம் வினை யூக்கியின் புறப்பரப்பின் மீது சாதாரண வெப்பநிலை யில் ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் இணைவதால் வெடித்தல் நிகழ்கிறது. இவ்வாறு பிளாட்டினத்தின் புறப்பரப்பின் மேல் நடைபெறும் கனற்சியின் விளை வால் உண்டாகும் வெப்பத்தால் பிளாட்டினம் ஒளிர்கிறது. நிரலியல (spectroscopy). நிரலியல் என்பது ஒரு வகைச் செயல்முறை அறிவியல் ஆகும். இம்முறை யில் கனற்சி நிகழ்ச்சியில் தலையீடு இல்லாமல் சுடரை ஆய்வு செய்து பயனுள்ள பல விவரங்களைப் பெற முடியும். ஒரு சுடரில் வெளியிடப்படும் அல்லது உட் கொள்ளப்படும் ஒளி நிரல் அச்சுடரில் உள்ள பொருள்களின் இயற்பியல் பண்பாகும். சுடர் நிரல் (flame spectra) மூலம் கனற்சி நடைபெறும் முறையையும் சுடரின் வெப்ப நிலை யையும் கணக்கிடலாம். தேவைப்படும் அளவுகளுக் கேற்ப பல் நிறநிரலியல் முறைகள் கையாளப்