{rh|||கனற்சி அலை அளவை 91}}
படுகின்றன. வரித்திரும்பும் (line reversal) முறை இதில் ஒரு வகையாகும். இம்முறையில் வெப்பத்தால் கிளர் வுற்ற உலோக அணுக்களிலிருந்து வரும் கதிர்வீச்சுச் செறிவு கட்டுப்படுத்தக்கூடிய, ஒளிர் கறுப்பு விளக் கின் இழையோடு ஒப்பிடப்படுகிறது. இந்த முறை யில் சுடரின் வெப்பத்தைக் கணக்கிடலாம். இம் முறையில் நிற வடிகட்டிகளை மட்டுமே கொண் டுள்ள எளிய கருவி அமைப்புப் பயன்படுகிறது. இவ் வடிகட்டிகள் உலோக அணுக்களிலிருந்து வரும் கதிர்வீச்சைத் தனிமைப்படுத்தப் பயன்படுகின்றன. எ.கா. சோடியம் உப்புகளை வளிம அல்லது நீர்ம எரிபொருள்களோடு சேர்த்தல். கனற்சியில் உண்டாகும் வேக வினை இடை நிலைப்பொருளிலிருந்து நிரலியல் அளவி (spectro- meter) மூலம் பட்டை நிரல் பெறப்படுகிறது. சிலசமயங்களில் அலைக் குறுக்கீட்டு அளவியினால் துல்லிய சரிபகுப்புப்(fine resolution) பெறப்படுகிறது. இவ்வாறு பிரிகையடைந்த கதிர்வீச்சுகளை ஒளிப்பட வியல் முறை அல்லது ஒளிப்பெருக்கியின் உதவியால் கண்டுபிடிக்கலாம். இவற்றில் ஒளிப் படவியலே பெருமளவில் பயன்படுகிறது. இம்முறையில் ஒரே சமயத்தில் பல அலை நீளங்களைக் கொண்ட கதிர் வீச்சுகளை நிரல்களாகப் பதிவு செய்ய முடியும். குறிப்பிட்ட நிரல் வரிகளைப் பதிவு செய்ய ஒளிப் பெருக்கிகள் பயன்படுகின்றன. இவற்றின் மூலம் இரு நிரல் வரிகளின் தொடர் ஒளிர்தலைப் பதிவு செய்ய லாம். நிரல் கதிர்வீச்சுகளின் குவிமையக் கோடு (focus)ஒளிப் பெருக்கியையும், நோக்கியையும் நகர்த்து வதால் ஏற்படும் விளைவை ஓர் அலைவு காட்டியி னால் (oscilloscope) செலுத்தி ஒரு தொடர் நிறநிர லைப் பெற முடியும். . பட்டை நிரல்கள் ஒரு குறிப்பிட்ட ஆற்றல் நிலை களைக் குறிப்பதால் சுடரிலிருந்து பெறப்படும் நிரல் வரிகள் குவாண்ட்டப்படுத்திய ஆற்றல் கொண்டன வாயுள்ளன. சமநிலை வெப்பக் கட்டங்களில் மூலக் கூறுகள் பல ஆற்றல் நிலைகளில் மேக்ஸ் வெல் கோல்ட் மேன் பகிர்வு முறையைப் பின்பற்றுகின்றன. ஆனால் வினைவேகவியல்படி மூலக்கூறுகள் பல ஆற்றல் நிலைகளில் ஒரு குறிப்பிட்ட முறையில் ஆற்றலைப் பகிர்ந்து கொண்டு இயங்கு சமநிலையில் உள்ளன. நிரல் கதிர் வீச்சு என்பது ஆற்றல் நிலை கள் மாறும் நிகழ்ச்சியில் இருக்கும் மூலக்கூறு எண்ணிக்கையின் அளவாகும். இந்த அளவுகளில் இருந்து (பட்டை நிரல்) சுடர் வெப்பநிலை (flame temperature), வினை இடை நிலைப்பொருள் முதலிய வற்றை அறியலாம். நூலோதி. S.P. கி.மு. மோகன் Sharma & Chander Mohan. Fuels and Combustion, Tata McGraw-Hill Publishing Company Limited, New Delhi, 1987. கனற்சி அலை அளவை கனற்சி அலை அளவை 91 கனற்சியின்போது ஏற்படும் மாறுகின்ற - இயல்பான நிகழ்ச்சிகளை உற்று நோக்குவதே கனற்சி கனற்சி அலை அளவை (combustion wave measurement) ஆகும். ஒரு வெடிக்கக்கூடிய கலவை எரிக்கப்படும்போது, மாறுதல் அடையும் பொருளின் தொகுப்பு, கலவையின் ஊடே பரவுகிறது. எரியும் இடத்திலிருந்து அருகிலுள்ள கலவையின் அடுக்குகளுக்குள் பாயும் வெப்பமும், வேதி வினைப் பொருள்களும் தாமாகவே நீடிக்கும் செயலை ஏற்படுத்துவதன் மூலம், வெப்பச் சுடரை உருவாக்கு கின்றன. இந்நிகழ்ச்சியே களற்சி அலை எனப்படும். கனற்சி மாறுபட்ட நிலைகளில் உண்டாகக் கூடியதாக இருப்பதால், கனற்சி அலையை அளப்பதற்குப் பல வகை அளவை முறைகள் உள்ளன. கலவையின் ஊடு எந்த வேகத்தில் நகர்கிறதோ. அதுதான் தீச்சுடரின் வேகமாகும். கனற்சி அலை களை நீடிக்கச் செய்யும் வேதி மாற்றங்களை அறிந்து கொள்ள இடைப்பட்ட வினைப்பொருள்களையும். கனற்சியின் விளைவுகளையும் அளப்பது தேவை யாகும். எடுத்துக்காட்டாக ஒரு கலவையில் உள்ள ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்து கனற்சி அலையை உண்டாக்கும்போது தோன்றுவதுதான் நீராகும். இந்த இடைப்பட்ட வினைப்பொருள்களில் ஆக்சிஜன், ஹைட்ரஜன் அணுக்களும்,ஹைட்ராக்சில் தொகுதிகளும் அடங்குகின்றன. ஹைட்ராக்சில் தொகுதிகள் இருப்பதை நிறமாலை இயல் அளவை களால் கண்டுகொள்ளலாம். கனற்சி அலையுடன் ஏற்படும் வெப்ப அதிகரிப்பை அளக்கப் பல உத்திகள் உள்ளன. அவை பின்வரும் செயல்களின் அடிப் படையில் அமைந்துள்ளன. வளிமங்களின் ஊடு செல்லும் ஒலியின் திசை வேகம் (velocity) வளிமங்களின் மாறுநிலைப் பாய்வுத் திசைவேகங்கள், சில வளிமங்களின் இனம் பிரிக்கும் (dissociation) மாறுதல்கள் ஆகியன வளிமங்களின் கதிர்வீச்சு உட்கவர்தலை (absorption) ஆய்வு செய்ய உதவுகின்றன. பொதுவான வரையறை மூலம் ஒரு வளிமத்தின் வெப்பம் என்பது வெப்ப இயக்கச் சம நிலையில் உள்ள மூலக்கூறுகளையே குறிக்கிறது. விரைவாகக் கனற்சி ஏற்படும் ஓர் அமைப்பு முறையில், மூலக்கூறுகள் தன்னிச்சையாக அதிர்வதாலும் சுழல் வதாலும் உயர் ஆற்றலைப் பெறுகின்றன. இந்தச் சமநிலையற்ற கட்டங்களில், சீரான வெப்பத்தை வரையறுக்க முடியாது. பட்டை நிறமாலையை. நிறமாலை இயல் மூலம் அளக்கும்போது, அதிர்வுகள் சுழற்சிகள் ஆகியவற்றால் உண்டான வெப்பத்தை அறியலாம். பிற கோடு மாற்றம் (line reversal) மற்றும் இரு வண்ணக் கதிர்வீச்சு வெப்பஅளவி முறை என்பன பிற நிறமாலை இயல் முறைகள் ஆகும்.