பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 கனற்சி உதைப்பு

92 கனற்சி உதைப்பு வெப்ப உணர்வு ஆய்வுகளில் வெப்ப இரட்டை (thermo. couple) முக்கியமானதாகும். தேவையான பாதுகாப்பையும் திருத்தங்களையும் செய்து குறைந்த திசைவேகச் சுடரின் வெப்பத்தை நுட்பமாக அளக் கலாம்; ஆயினும் இக்கருவிகள், உயர் வெப்பப் பகிர்வு கொண்ட, சிக்கலான வெப்பச் சுடர்களை அளக்க முற்றிலும் நிறைவற்றவை. கனற்சி முடிவுற்ற பகுதி களில், ஒளிபுகவல்ல சுடர்களுடன் ஈடு செய்யப்பட்ட சூட்டுக் கம்பிகளும் பயன்படுகின்றன. கனற்சி அலையின் வடிவத்தையும், அமைப்பையும் அறிந்து கொள்ளக் கனற்சி அலையின் ஊடே செல்லும் வளிமங்களின் பாய்வு மிகவும் உதவியாக உள்ளது. சுடரின் ஊடே செல்லும் மக்னீசியம் ஆக்சைடின் சிறு துகள்கள் மீது உண்டாக்கப்படும் ஒளிர்வினால் வளிமப் பாய்வின் திசைவேகம் முதலிய விவரங்கள் கிடைக்கின்றன. டி.இந்திரன் நூலோதி, S. P. Sharma & Chander Mohan, Fuels and Combustion, Tata McGraw-Hill Publishing Company Limited, New Delhi, 1987. கனற்சி உதைப்பு உட்கனற் பொறியில், எரிபொருள் காற்றுடன கலந்து எரிகலனை அடைகிறது. அங்கு மின் எரியூட்டி மூலம் எரியூட்டப்படுகிறது. இதனால் எரிபொருள் கலந்த கலவை உயர் ஆற்றலுடன் வெடிக்கிறது. இவ் வாற்றல், உந்தின் தலைப்பகுதியைத் தாக்குகிறது. இதனால் உந்து கீழ் நோக்கித் தள்ளப்படுகிறது. எரியூட்டும்போது எரி அலை குறித்த வேகத்தில் எரியூட்டியிலிருந்து தொடங்கி எரிகலனின் இறுதிப் பகுதியை அடைகிறது. இதனால் எரியாத கவவை ஒரே சீராகத் தீப்பிடிக்க அழுத்தம் சீராக உயரும். பொறியும் சீராகச் செயல்படும். ஆனால், சில சமயம் எரியாத கலவை அனைத்தும் ஒரே சமயத்தில் தீப் பிடித்து உயர் அழுத்தம் ஏற்படும். திடீரென்று உயர் அழுத்தம் ஏற்படும்போது அழுத்த அலைகள், எரி கலனின் சுவர்களில் அங்குமிங்கும் மோதி ஒருவித உலோக ஒலியை உண்டாக்குகின்றன. இந்த உ உலோக ஒலியைக் கனற்சி உதைப்பு என்பர். (combustion knock) (18) (ஆ) (அ) கனற்சி உதைப்பு இல்லாமல் எரிகலனில் எரிபொருள் எரிதல் (ஆ) கனற்சி உதைப்புடன் எரிகவனில் எரிபொருள் எரிதல்