பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன ஹைட்ரஜன் 95

ஹைட்ரஜன்களாகும். சாதாரண ஹைட்ரஜனின் அணு எண்ணும், அணு எடையும் ஒருமை எண்ணிக்கை யுடையன. ஆனால் கன ஹைட்ரஜன்களின் அணு நிறைகள் முறையே இரண்டாகவும், மூன்றாகவும் உள்ளன. ஆ டியூட்டிரியம். . இதன் குறியீடு HT அல்லது D து சாதாரண ஹைட்ரஜனில் 0.0156% உள்ளது. இது 1931 ஆம் ஆண்டில் யூரே, பிரிக்வீட், மர்ஃபி ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. கன ஹைட்ர ஜன் தனித்த நிலையில் சாதாரண ஹைட்ரஜனில் கலந்தும் ஆக்சிஜனுடன் சேர்ந்து நீரில் சுன நீராகவும் உள்ளது. எனவே இதை ஹைட்ரஜனிலிருந்தும் கன நீரிலிருந்தும் பெறலாம். அறைவெப்பநிலையில் ஒரு டியூட்டிரியம் வளிமம். கனநீரை (D,O) மின்னாற்பகுத்து அல்லது துத்தநாகம், இரும்பு, கால்சியம், யுரேனியம் போன்ற உலோகங்களுடன் வினைபுரியச் செய்து இதனைப் பெறலாம். நீர்ம ஹைட்ரஜனைப் பின்னக் காய்ச்சி வடித்தலுக்குட்படுத்தி நேரடியாகப் பெறலாம். டியூட்டிரியத்தில் ஆர்த்தோ,பாரா என்னும் ரு வகை உண்டு. இரண்டு பங்கு ஆர்தோ, ஒரு பங்கு பாரா அமைந்த கலவையாக து உள்ளது. 20 K இல் 97.8% ஆர்த்தோ டியூட்டிரியம் உள்ளது. டியூட்டிரியம் மூலக்கூறுகள் போஸ் - ஐன்ஸ்டின் புள்ளி விவரத்துடன் இணங்கியுள்ளன. ஆர்த்தோ வகை இரட்டைப்படைச் சுழற்சி குவாண்ட்டம் எண்சுளை யும், பாரா ஒற்றைப்படைச் சுழற்சி குவாண்ட்டம் எண்களையும் கொண்டுள்ளன.77K இல் இவ்வளிமத் தின் வெப்பங்கடத்தும் திறனை ஆய்வு செய்து ஆரத்தோ. பாரா இனங்களின் இயைபுகளைக் கண்டறியலாம். ஆர்த்தோ, பாரா டியூட்டிரியத்தின் இயற்பியல், வேதியியல் பண்புகள் ஒன்றை யொன்று ஒத்துள்ளன. பல இயற்பியல், வேதிப் பண்பு களில் டியூட்டிரியம் . புரோட்டியத்தை ஒத்துள்ளது. ஆனால் பல வினைகளில் புரோட்டியத்தை விட டியூட்டிரியம் குறைந்த வினை ஆற்றல் கொண் டுள்ளது. கன ஹைட்ரஜன் 95 கன ஹைட்ரஜனின் உட்கருக்கள் டியூட்ரான்கள் எனப்படும். இவை அணுக்களைத் தாக்கிக் கதிரியக் கம் உண்டாக்கவும், அணு உட்கருவின் இயைபை மாற்றவும் பயன்படுகின்றன. வினைவழிகளைக் கண் டறிய உதவும் சுவடறிவானாக (tracer) டியூட்டிரி யம் பயன்படுகிறது. டியூட்டிரியம் உள்ள நீர் (கன நீர்) அணு உலைகளில் நியூட்ரான்களின் வேகத்தைக் குறைக்கும் கட்டுப்படுத்தியாகவும் (moderator) செய லாற்றுகிறது. ட்ரைட்டியம். இது கனமிகு ஹைட்ரஜன் என்றும் குறிப்பிடப்படுகிறது. இது சுதிரியக்கத் தன்மை கொண்டது. இயற்கையில் மிகக் குறைவாக உள்ளது. பொதுவாக இது தனிம மாற்ற (transmutation) முறை மூலம் பெறப்படுகிறது. வேதியியல், உயிரியல் துறை களில் சுவடறிவானாகவும், ஹைட்ரஜன் குண்டில் ஒரு பகுதியாகவும் உள்ளது; இதன் குறியீடு H அல்லது T. பண்புகள். இது ஒரு வளிமம், அணு நிறையில் சாதாரண ஹைட்ரஜனை விட மிகுதியாக உள்ளமை யால் இதன் பல பண்புகள் டியூட்டிரியத்திலிருந்து வேறுபட்டுள்ளன. டியூட்டிரியத்தைப் போலவே இதுவும் சாதா ரண ஹைட்ரஜனைவிட வினைபுரிதிறன் குறைந்தது. ட்ரைட்டியம் அணுவின் உட்கரு ட்ரைடான் (triton) என்றும், அதன் குறியீடு 't' என்றும் குறிப்பிடப் படுகின்றன. இதில் ஒரு புரோட்டானும் இரண்டு நியூட்ரான்களும் உள்ளன. இதன் நிறை 3.01700 amu ; அணுக்கருச் சுழற்சி : காந்தத் திருப்புதிறன் (magnetic moment) 2.9788 மாக்னட்டான்கள். கதிரியக்கச் சிதைவடைந்து இது காமாக் கதிர்களை வெளியிட்டு ஹீலியம் ஐசோடோப்பைக் கொடுக் கிறது. வெளி இவ்வினையில் காமாக் கதிர்கள் யாவதில்லை. தேவையான அளவு ஆற்றல் கொண்ட டியூட்ரான்களுடன் ட்ரிட்டியத்தின் மீது மோதவிடும் போது அணுப்பிணைவு (nuclear fusion) ஏற்பட்டு, ஆற்றலும் வெளிப்படுகிறது. H + H → He, ' + n 1 + 18MeV பண்புகள் H, T உருகுநிலை °C 259.20 - 252.54 கொதிநிலை, ஒரு வளிமண்டல அழுத்தத்தில், ÖC 252.77 - 248.12 ஆவியாதல் வெப்பம், கலோரி/மோல் 216 333 (heat of vaporisation) பதங்கமாதல் வெப்பம் (கலோரி/மோல்) 247 393 (heat of sublimation)