பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 கனிசாரோ வினை

102 கனிசாரோ வினை ரன்கனி - நெட்டிலிங்கம் 1 2 3 திரள்களி - 1 அகீன் தொகுப்பு நரவேலியா 2. ரூபஸ் சிற்றினம் J சண்பகம் ஒன்றாக கனி மேல் தண்டு, சனியில் சதைப்பற்றுள்ளதாக மாறிப் பூ இதழ்கள். பூவடிச் செதில்கள் யாவும் இணைந்து உண்ணும் பகுதியாகின்றன. பரப்பில் ஒவ்வொரு பூவையும் குறிக்கும் வண்ணம், பல கோணப் பரப்புகள் உள்ளன. மல்பெர்ரியின் கூட்டுக்கனி பல தனிப்பூக்கள் உருவாக்கிய வறண்ட வெடியா உலர் கனிகளை ஒன்றாகக் கொண்டுள்ளது. சாறும் சதைப்பற்று முள்ள பூவிதழ்கள் அவற்றை மூடிக்கொள்கின்றன. சைகோனியம். ஹைபந்தோடியம் என்னும் மஞ்சரி வகையிலிருந்து இது உருவாகிறது. மஞ்சரித் தண்டு சதைப்பற்றுள்ளதாக மாறி, அதில் பெண்பாலினப் பூக்கள் சிறு வெடியா உலர் கனிகளாக மாறி, ஒரு கூட்டுக்கனியை உண்டாக்குகின்றன. எ.கா. அத்தி, ஆல், அரசு. நுணா அல்லது மஞ்சணத்தி, கீழ்மட்டச் சூல் பையை உடைய பூக்களைத் தாங்கிய சிரமஞ்சரி யிலிருந்து (head inflorescence) வளர்ச்சி பெறுகிறது. பூக்களின் சூல்பைகள் யாவும் ஒருங்கு இணைந்தே ஒரு கூட்டுக் கனியாகின்றன. இக்கனியின் மேற்பரப்பில் காணப்படும் அறுகோணப் பகுதி ஒவ்வொன்றும் ஒரு பூவைக் குறிக்கிறது. இப்பகுதிகளின் மையங்களில் காணப்படும் சிறு வட்டங்கள் பூக்களின் புல்லி வட்டங்கள் விட்டுச் சென்ற தழும்புகளை நினை வுறுத்துகின்றன. இச்சிறுவட்டங்களின் நடுவே உள்ள சிறு புள்ளிகள், பூக்களின் சூலகத் தண்டின் (style) எஞ்சிய பகுதியாகும். அலர்மேலு ராமகிருஷ்ணன் Gor. Jean H. Langenheim, and et. al., Botany-Plant Biology and its relation to Human Affairs, University of California, Santacruz, 1982. சுனிசாரோ வினை ஆல்ஃபா ஹைட்ரஜன் அணுக்களைக் கொண்டிராத ஆல்டிஹைடுகள் தங்களுக்குள் குறுக்கு வினைபுரிந்து ஆல்கஹாலையும் அமிலத்தையும் கொடுக்கின்றன. இவ்வினை 50% நீர்ம அல்லது எத்தனாலில் கரைந்த காரத்தைப் பயன்படுத்தி நிகழ்கிறது. இவ்வினைக்குக் கனிசாரோ வினை (Cannizaro reaction) என்று பெயர். கனிசாரோ வினை முக்கியமாக அரோமாட்டிக் ஆல்டிஹைடுகளுக்கே பொருந்துகிறது. பொதுவாகக் கீட்டோன்கள் இவ்வினையில் ஈடுபடுவதில்லை. ஃபார்மால்டிஹைடும் பிற - ஹைட்ரஜன் அணுக் களும் இல்லாத ஆல்டிஹைடுகளுடன் வீரியமிக்க சோடியம் அல்லது பொட்டாசியம் ஹைட்ராக்சைடு கரைசலைச் சேர்த்து வெப்பப்படுத்தும்போது இரு ஆல்டிஹைடுகளின் மூலக்கூறுகள் ஆக்சிஜனேற்ற இறக்க வினைகளுக்குட்பட்டு ஆல்கஹாலையும் அமிலத்தையும் கொடுக்கின்றன. A 2HCHO + NaOH – CHOH + HCOONa