104 கனிம இயல்புகள்
104 கனிம இயல்புகள் (sedimentary), உருமாற்ற (metamorphic) முறை ஆகிய மூன்று முறைகளில் கனிமங்கள் உண்டாகின்றன. கனிமங்களை இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்க லாம். அவை பயன்படு கனிமங்கள். பயன்படாப் பாறைக் கனிமங்கள் என்பன. கனிமப் பண்புகளை நான்கு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை, உருவப் பண்பு (morphological character), இயற்பியல் பண்பு, வேதிப் பண்பு,ஒளிப் பண்பு (optical character) எனப்படும். உருவப் பண்பியல். படிக இயல் படிகங்கள் படிகக் கொவ்வைகள் படிகமில்லாத கனிமங்களின் ஒப்பு வமை உருவங்கள் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வு உருவப் பண்பியல் எனப்படும். உயிரினங்கள் ஒரு செல்லிலிருந்து படிப்படியாக வளர்வதைப் போல உப்பு, சர்க்கரை, பனிக்கட்டி, கனிமங்கள் முதலி யவையும் படிப்படியாக வளர்ச்சி அடைகின்றன. ஒழுங்கான சமதள முகங்களையும் (plane faces), அவை ஒன்றோடு ஒன்று சேர்வதால்ஏற்படும் விளிம்பு களையும், மூலைகளையும் உடையதிண்மப் பொருள் கள் படிகம் (crystal) எனப்படும். இப்படிகங்களின் வடிவம், அமைப்பு, வகை, பண்பு, பாகுபாடு முதலிய வற்றை விளக்கும் அறிவியற் பிரிவு படிகவியல் (crystallography) எனப்படும். படிகங்கள் வளர வளர அவற்றின் முகங்களின் பரப்பளவும், கன அளவும் மாறுமேயன்றி அதன் வடிவம் மட்டும் மாறாது. படிக முகங்களின் அமைப்பில் சீர்மை (symmetry) உள்ளது. இவ்வமைப்பு கள் தாதுக்கள் ஒவ்வொன்றிலும் வேறுபட்டிருக்கும். எனவே கனிமங்களின் படிக அமைப்பைக் கொண்டு அவற்றை எளிதில் பிரித்து ஒன்றிலிருந்து மற் றொன்றை வேறுபடுத்திக் கண்டு கொள்ள முடிகிறது. அறுவகைப் படிக் முறைகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன. கன சதுரப் படிக இனம் (cubic system). இங்கு மூன்று சம அச்சுகள் நேர்கோணங்களில் ஒன்றை ஒன்று சந்திக்கும். எடுத்துக்காட்டு; கலீனா, சோடியம் குளோரைடு உப்பு, தங்கம், வெள்ளி பைரைட், நாற்கோணப் படிக இனம் (tetragonal system). 物 படம் 1. பைரைட் படிகம் படம் 2. நாற்கோணப் படிகமைப்பு E படம் 3. பேரைட் படிகங்கள்