கனிம இயல்புகள் 105
f கனீறு இயல்புகள் 10.5
படம் 4. ஜிப்சம் படிகங்கள் இதில் அச்சுகள் நேர்க்கோணங்களில் ஒன்றை ஒன்று சந்திக்கும். இரண்டு அச்சுகள் சம அளவிலும், மூன்றா வதான செங்குத்து அச்சு நீண்ட அல்லது குறைந்தஅள் விலும் காணப்படும். எ.கா. ஜிர்கான், ரூட்டைல், கசிட்டரைட், சால்கோபைரைட் செஞ்சாய் சதுரப் படிகத் தொகுதி (orthorhombic system). இத்தொகுதிப்படிகத்தில் மூன்று அச்சுகளும் வெவ்வேறு அளவிலும், நேர்கோணத்திலும் சந்திக் கின்றன. எடுத்துக்காட்டு; புஷ்பராகம், ஆலிவின் பேரைட். ஒற்றைச் சரிவுப் படிகத் தொகுதி (monoclinic system ). இத்தொகுதியிலுள்ள படிகத்தின் மூன்று அச்சுகளும் வெவ்வேறு அளவுடையன. இரண்டு அச்சுகளே நேர்கோணங்களில் சந்திக்கும். எ.கா. ஜிப்சம்,அபிரகம். படம் 5. ஆல்பைட் படிகம் bl 10 முச்சரிவுப் படிகத் தொகுதி (triclinic system). இதில் மூன்று அச்சுகளும் வெவ்வேறு அளவிலும் வெவ்வேறு கோணங்களிலும் சந்திக்கின்றன. எ.கா. காப்பர் சல்ஃபேட், ஆல்பைட், கயனைட் படம் 6. பெரில் படிகம் .. அறுகோணப் படிகத் தொகுதி (hexagonal system). இத்தொகுதியில் உள்ள படிகத்தின் மூன்று கிடை அச்சுகள் சம அளவிலும் ஒன்றை ஒன்று 120° கோணத்திலும் சந்திக்கின்றன. பிற நிலைக்குத்தச்சு கள் நீண்டோ, குறைந்தோ உள்ளன. எ.கா: பெரில், கால்சைட், டூர்மலின், குவார்ட்ஸ், ஹெமடைட் ஆகும். இயற்பியல் பண்பு பெரும்பாலான கனிமங்கள் படிகவயமாக இருப் பதால் படிகங்களைப் பற்றிய இயற்பியல் பண்பு தெரிந்திருக்க வேண்டும். கனிமங்கள் படிகவயப் பொருள்களாக பல வகையில் கிடைக்கின்றன. அவையாவன: படிகம். வேதியியல் கலவையொன்று தக்க சூழ் நிலைகளில் தனது உள்ளாற்றல் இயக்கப்படி நீர்ம நிலையில் இருந்து திண்ம நிலையை அடையும்போது ஏற்படும் வழவழப்பான, தட்டையான, பல பக்கங் களைக் கொண்ட சிறப்புமிகு உருவமே படிகம் எனப்படும்.