108 கனிம இயல்புகள்
படம் 11. சீரான கனிமப்பிளவு (அபிரகம்) சீரான கனிமப் பிளவு (perfect cleavage). கனிமத் தைத் தட்டினால் குறிப்பிட்ட தளங்களில் எளிதில் உடைகிறது. (எ.கா: கால்சைட், ஹாலைட்) நடுத்தரக் கனிமப் பிளவு (medium cleavage). கனி மத்தைத் தட்டினால், அடிக்கடி பிளவுத் தளங்கள் உண்டாவதுடன் சீரற்ற முறிவுகளும் அதே அளவுக்கு உண்டாகின்றன. எ.கா. ஃபெல்ஸ்பார். சீரற்ற பிளவு (imperfect cleavage). சீரற்ற முறிவு தளத்தின் பின்னணியில் சிறு சிறு பட்டைப் பரப்புகள் காணப்படும். எ.கா. அப்பட்டைட், இயல் தனிமச் கந்தகம். மிகச் சீரற்ற களிமப் பிளவு. பிளவே இல்லை. முறிவு மட்டுமே உள்ளது. முறிவுப் பக்கத்தில் தட்டை யான பரப்புகளையே காண முடியாது. எ.கா. குவார்ட்ஸ். பிளவுத் தன்மையை அளப்பதுடன், இவை எந்தெந்தப் பிளவுத் தளங்களில் ஏற்படுகின்றன என்பதையும் குறிக்க வேண்டும். அபிரகம் போன்ற சில கனிமங்கள் ஒரு தளத்தில் மட்டுமே பிளக்கின்றன. பிற கனிமங்கள் இரண்டு தளங்களில் பிளக்கின்றன. பிளவின் தரம் மாறுபடக்கூடும். சான்றாக ஃபெல்ஸ் பாரின் ஒரு தளத்தில் சீரான பிளவும் பிற தளத்தில் நடுத்தரப் பிளவும் உள்ளன. சில கனிமங்கள் மூன்று தள முறிவுகளை உடையன. எ.கா. ஹாலைட், கால்சைட் படிகப் படிக முகங்களைப் பிளவுத் தளங்களெனத் தவறாகக் கருதக்கூடும். இவற்றைப் பிரித்தறியதற்கு, படிக முகங்களில் உள்ள மிளிர்வைவிடப் பிளவுகளில் மிகு மிளிர்வு உண்டு என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும். கனிமப் பிளவு எந்தப் படிக முகத்துக்கு இணையாக இருக்கிறதோ அதை யொட்டி பட்டக அது அடித்தளவய (basal), வய (prismatic), சாய்சதுரவய (rhombohedral), சுனசதுரவய, பட்டைக் கூம்புவய, எண்முகவய - பன்னிருமுகவயமாக இருப்பதாகக் கூறுவர். அடித்தள வயப்பிளவு ஒரு திசையையும், இரண்டு திசைகளையும், சாய் பட்டகவயப்பிளவு சதுரவயப்பிளவும். .