பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனிம இயல்புகள்‌ 109

கன சதுரவயப்பிளவும் மூன்று திசைகளையும்,கூம்பு வயப்பிளவும், எண்முகவயப்பிளவும் ஆறு திசை களையும் கொண்டுள்ளன. கனிமத்தைத் தெரிந்து கொள்வதற்குக் கனிமப் பிளவு பயன்படும். கனிம இயல்புகள் 109 நட்சத்திரம் போன்ற வடிவம் அதன் மேல் தோன்றும். இதைத் தட்டுருவம் (percussion figure) என்பர். தட்டுருவின் ஆறு கதிர்களும் பட்டகத்தின் முகங் களுக்கு ணையாக உள்ளன. முறிவுத்தன்மை. களிமப்பிளவுத் திசையல்லாத வேறு ஏதேனும் ஒரு திசையில் கனிமத்தை உடைத் தால் கிடைக்கும் உடைந்த பக்கத்தின் தன்மைக்கு முறிவுத்தன்மை (fracture) என்று பெயர். அது பல வகைப்படும்.அவை சங்கு முறிவு (conchoidal fracture). உடைந்த பக்கத்தின் தன்மை சங்கு போல் வழவழப்பாக வளைந்து இருக்கும். எ.கா. ஃபிளிண்ட் படம் 12. சீரான சாய்சதுரப் படிகப் பிளவு (கால்சைட்) பிரிவுத்தளம் (parting). இது முறிவு, வழுக்கம், பின்னுறு (secondary), இரட்டிப்பு ஆகியவற்றால் ஏற்படும் போலிப்பிளவு ஆகும். இரட்டை ஓட மைப்புகள் (twinning lamellae) போனற குறிப்பிட்ட தளங்களில் கனிமப் பிரிவு ஏற்படும். ஆனால் கனிமப் பிளவோ குறிப்பிட்ட திசையில் கனிமப் படிகத் தின் எந்தப் பகுதியிலும் ஏற்படும். அரியுருவம். ஒரு குறிப்பிட்ட அமியும், அழுத்த மிகு கொதி நீராவி, காரக் கரைசல்கள் முதலிய வற்றைச் சில தாதுக்களின் மேற்பரப்பில் படுமாறு விட்டால்,பரப்பில் முகடுகளோ, சிறிய குழிகளோ உண்டாகின்றன. இவற்றின் வடிவத்தை அரியுருவம் (etch figure) என்பர். அரியுருவத்திலிருந்து சில வகைத் தாதுக்களைப் பற்றியும், அவற்றின் மூலக் கூறுகளைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். தட்டுருவம். கூர்மழுங்கிய கருவியால் ஓர் அபிரகத் தகட்டைத் தட்டினால், ஆறு கதிர்களை உடைய படம் 13. குவார்ட்ஸ் படிகத்தில் சங்கு முறிவு பகுதிச் சங்கு முறிவு (sub-conchoidal fracture). சங்கு முறிவைப் போல் சீராக இல்லாமல் சங்கு முறிவை ஒத்து இருக்கும். ஒழுங்கான அல்லது சீரான முறிவு. இத்தகைய கனிமங்கள் சீரான பரப்புடைய முறிவுத்தளத்தை (even fracture) உடையன. எ.கா.செர்ட், ஹார்ன்ஸ் டோன். ஒழுங்கற்ற அல்லது சீரற்ற முறிவு. இத்தகைய கனிமங்கள் சீரற்ற பரப்புடைய முறிவுத்தளத்தை உடையன. எ.கா. குவார்ட்ஸ். சுள்ளி முறிவு (splintery fracture). இத்தகைய கனிமங்களில், முறிவுத் தளத்தில் சிறு சிறு குச்சிகள் பொத்துக் கொண்டு உள்ளது போல் இருக்கும். இது நார்வயமான, நீள் தண்டு போன்ற அமைப்புடைய கனிமங்களில் காணப்படும். எ.கா.முரைமோலைட்