110 கனிம இயல்புகள்
110 கனிம இயல்புகள் முள் உடைவு (hackly fracture) அல்லது சருச்சரை முறிவு. சொரசொரப்பான முறிவைக் குறிக்கும். எ கா.சர்பென்டீன், செம்பு, வார்ப்பு இரும்பு. களிமண் முறிவு. சில கனிமங்களின்களிமண்ணை உடைத்தால் ஒரு முறிவு தோன்றும். இதற்குக் களிமண் முறிவு (earthy fracture) என்று பெயர். இழுபடுந்தன்மை கனிமங்களுடைய வலிமையையும் அழுத்தம் தாங்கும் பண்பையும் இழுபடுந்தன்மை காட்டும். அவை கனிமங்களின் இழுபடுந் தன்மையைப் பொறுத்துப் பல வகைப்படும். அவையாவன: நொறுங்கும் தன்மை. எளிதில் நொறுங்கக் கூடியது. எ.கா. கந்தகம், ஃபுளோர்ஸ்பார். மென் தகடாகக் கூடியது. இதை அடித்தால் மென் தகடாக மாறும். எ.கா. இயல் தங்கம், வெள்ளி, தாமிரம். கும் வளையக் கூடியது. வளைந்து அப்படியே இருக் எளிதில் வெட்டுப்படக்கூடியது (sectile). கத்தியால் எளிதில் வெட்டலாம். எ.கா. கிராஃபைட், ஜிப்சம். மீட்சித் தன்மை கொண்டது. நீளக்கூடியது. பின்பு தன் இயல்பு நிலைக்கு வந்துவிடும். கம்பியாசு நீட்டக்கூடியது. எ.கா. தாமிரம், காரீயம், துத்தநாகம். கடினத்தன்மை, உராய்வு அல்லது கீறலை எதிர்க்கும் தன்மைக்குக் கடினத்தன்மை என்று பெயர். பளபளப்புடைய புறப்பகுதியின் உராய்வில் ஏற்படும் பாதிப்பை வைத்துக் கனிமத்தின் கடினத் தன்மை அளவிடப்படுகிறது. கடினத்தன்மை தெரிந்த கனிமத்தைக் கொண்டு தெரியாத கனிமத்தின் மீது உராயும்போது தெரியாத கனிமத்தில் கோடு விழுந் தால், தெரியாத கனிமத்தின் கடினத் தன்மை தெரிந்த கனிமத்தின் கடினத் தன்மையைவிடக் குறைவானதாகக் கருதப்படும்.1882 இல் ஆஸ்தி ரேலியா கனிம இயல் அறிஞர் மோ என்பார் இந்த அடிப்படையைக் கொண்டு 1 - 10 வரை உள்ள கடினத் தன்மை எண் வரிசையைத் தயாரித்துள்ளார். மோவின் கடினத் தன்மை எண் வரிசை பின்வரு மாறு அமைந்துள்ளது. டால்க் 1 ஜிப்சம் 2 கால்சைட் 3 ஆர்தோகிளேஸ் 6 குவார்ட்ஸ் 7 டோபாஸ் 8 குருந்தம் 9 புளோரைட் 4 அப்படைட் 5 வைரம் 10 எளிய முறையில் கடினத் தன்மையைப் பின் வருமாறு அறிந்து கொள்ளலாம். விரல் நகத்தால் கீறக்கூடிய கனிமத்தின் கடினத் தன்மை 2 க்கும் குறைவானதாகும். தாமிர நாணயத்தாலோ. பித்தளை ஊசியாலோ கீறக் கூடியதும் விரல் நகத்தால் கீற முடியாததுமான சுனிமத்தின் கடினத் தன்மை 2.5-3க்கும் இடையில் உள்ளது. பேனாக் கத்தியால் கீறக் கூடியதும், தாமிர நாணயத்தால் கீற முடியாததுமான கனிமத்தின் கடினத் தன்மை 3.5 - 4: 5க்குமிடையில் இருக்கும். பேனாக் கத்தியால் எளிதாகக் கீற முடியாததும் கண்ணாடியால் கீறக் கூடியதுமான கனிமத்தின் கடினத் தன்மை 5 - 5.5க்கு மிடையிலிருக்கும் எடுத்துக்காட்டாக எஃகு அரத்தால் கீறக்கூடியதாக ஆனால் கண்ணாடியால் கீறமுடியாத தாக உள்ள கனிமத்தின் கடினத் தன்மை 6-6.5க்கு இடையில் இருக்கும். எஃகு அரத்தால் கீற முடியாத ஆனால் கண்ணாடியைக் கீறும் கனிமத்தின் கடினத் தன்மை 7--10க்கும் இடையிலிருக்கும். கீறலின் ஒலியைக் கொண்டும் கீறலால் பெறப் படும் தூளின் அளவைக் கொண்டும் கடினத் தன் மையை உறுதிப்படுத்தலாம். ஒலியின் அளவு அதிகரிப் பிற்கேற்ப அல்லது தூளின் அளவு குறைவிற்கேற்பக் கனிமத்தின் கடினத் தன்மை மிகுந்திருக்கும்.கனி மத்தின் தனிமங்களின் வலு எண்படி கடினத் தன்மையும் மி மிகுதியாகும். அணுக்களின் பருமன் குறையக் குறைய, கனிமத்தின் கடினத் தன்மை மிகும். ஒப்படர்த்தி. ஒரு கிராம் கனிமத்தின் எடைக்கும், ஒரு கிராம் நீரின் எடைக்கும் உள்ள விகிதமே ஒப்படர்த்தி ஆகும். கனிமங்களின் ஒப்படர்த்தி பல் வேறானது. கனிமங்களைப் பிரித்தெடுப்பதில் இப் பண்பு பயன்படுகிறது. நீரின் அடர்வெண் 1. அடர் வெண்ணைக் கண்டுபிடிக்க வாக்கர் எஃகு துலாக் கோல் அல்லது ஜாலி சுருள் வில்தராசு போன்ற கருவிகள் பயன்படும். கனிமத்தைக் காற்றிலும், நீரிலும் எடைபோட்டு அதன் அடர்வெண் G-ஐப் பின்வருமாறு கணக்கிட வேண்டும். G=a,(01-0q} தில் கூ = காற்றில் எடை w₂ = நீரில் எடை பெரிய அளவுள்ள கனிமத் துண்டுகளுக்கு வாக்கர் கருவியையும், சிறிய துண்டுகளுக்கு ஜாலியின் சுருவி யையும் பயன்படுத்த வேண்டும். சிறு சிறு சுனிமத் துகள்களின் அடர்வெண்ணைக் கனமான் நீர் மங் களைக் கொண்டு கண்டுபிடிக்கலாம். ஒளியைக் கொண்டு கனிம இயல்புகளை அறிதல் நிறம். பல் கனிமங்களை அவற்றின் நிறத்தைக்