பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனிம இயல்புகள்‌ 113

எ.கா: பிட்சுபிளெண்ட். சுவை, மணம். நீரில் கரையும் தன்மை பெற்ற சில தனிமங்கள் சுவையுடையன. சான்றாகச் சமையல் உப்பு சுவை கொண்டது. எப்சம் உப்பு கசப்புத் தன்மை கொண்டது. படிகாரம் இனிய சுவையும், சோடா, காரத்தன்மையும், சால்ட் பீட்டர்,குளிர்ந்த தன்மையும் உடையது. ஒத்த வடிவுடைமை. வேதிச் சேர்மங்கள் வேதிப் பண்பு வேறுபாடு ஒத்த அமைப்புடைய வேதி இயை புகளையும் மிக நெருங்கிய படிக அமைப்புகளையும் உடையன. இதற்கு ஒத்த வடிவுடைமை (isomorp- hism) எனப் பெயர். இதை முதன் முதலில் 1819 ஆம் ஆண்டு மிட்சர்லிச் என்பார் கண்டுபிடித்தார். இதில் நேரயனி (cation), எதிரயனி (anion) இரண் டும் ஒத்து இருக்கும். இது எக்ஸ் கதிர்களின் மூலம் ஆராயப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அரகோனைட் அரகோனைட் - CaCO3 விதரைட் - BaCO ஸ்டான்ஷியனைட் - SrCO₂ கங்கள் பேரைட் எ.கா. CaSO, - அன்ஹைட்ரைட் BaSO, - பேரைட் SrSO, - செலஸ்டைட் பல்லுருவமாதல் (polymorphism). வேதி மூலக் கூறு படிகமாகும்போது ஒன்றுக்கு மேற்பட்ட படி உண்டாகும். அவை ஒன்றுக்கொன்று மாறு பட்டுக் காணப்படும். சான்றாகக் கார்பன் பல்வேறு சூழ்நிலையில் படிகமாகும்போது வைரமாகவும், கிராஃபைட்டாகவும் கிடைக்கிறது. இது இரு அமைப் புடையது (dimorphism) எனப்படும். CaCO, படிக கனிம இயல்புகள் 113 மாகும்போது கால்சைட்டாகவும், அரகோனைட் டாகவும் உருப்பெறுகிறது. இது மூன்று அமைப்புடை யது (trimorphism). எ.கா. ரூடைல் ஆக்டாஹைட் ரைட், புரூக்கைட். ஒத்த இரு அமைப்பு (isodimorphism). வேதிச் சேர்மங்கள் இரண்டுக்கும் மேற்பட்ட ஒத்த அமைப் புடையனவாக அதே நேரத்தில் இரு அமைப்பு (dimorphism) dire பண்பைக் காட்டும். எ.கா. பைரைட், மார்க்கசைட், ஸ்மால்டைட், சஃப்லோ ரைட். பொய்யுரு அமைப்புடையவை (pseudomorphism). ஒரு கனிமம் இயற்கைச் சூழ்நிலையால் மாறுபட்டு வேறு அமைப்பைப் பொய்யாகப் பெற்று உண்மை யான அமைப்பைப் போல் காட்டும். இது பல வகை யாகப் பிரிக்கப்படும். ஒரு மூலக்கூறுக்குப்பதில் இன் னொரு மூலக்கூறு மாற்றப்படுவது (substitution); படிவதால் உண்டாவது (deposition); கனிமத்தில் உள்ள சிறு சிறு சந்துகளில் படிந்து மாற்றமடைவது incrustation & infiltration); மாறுபடுதல் (altera- tion). இதில் வேதியியல் மூலக்கூறு மாறாமல் இருக்கும். ஒரு மூலக்கூறு இருந்த இடத்தில் புதிய மூலக்கூறு இருக்கும்; பகுதிப் பரிமாற்றம் இருக்கும். எ.கா: புதைபடிவங்கள். எளிய முறை கனிமங்களின் ஒளியியல் பண்பு. களால் ஒரு கனிமத்தை அறிந்து கொள்ள முடியாத போது வேதி முறைகளையும், ஒளியியல் முறைகளை யும் கையாள வேண்டும். ஒளியியல் முறையில் கனிம நுண்ணோக்கி என்னும் கருவி இன்றியமையாதது. சுனிமச்சீவலை நுண்ணோக்கி மூலம் கண்டால் அதன் பண்புகளை மிகச் சிறப்பான முறையில் அறிந்து கொள்ளலாம். கனிமச் சீவலின் கனம் 0.003 மி.மீ. இருக்க வேண்டும். கனடா பால்சம் இது ہے B B B A 4 B 的 A an A B B B A 00 3 B A அ.க.8-8 B B A வரிசை முறை A B B B I 000% வரிசை முறையற்றது. படம் 15. இருமச் சேர்மம் AB - இள் பல்லுருவக் கோட்பாட்டு விளக்கம் B