117 கனிம உப்புத் தயாரிப்பு முறைகள்
முறை என்பதன் முதல்கட்டமாகச் சோடியம் சல்ஃபேட் தயாரிக்கப்படுகிறது. சோடியம் குளோ ரைடை அடர் சல்ஃயூரிக் அமிலத்துடன் வினைப்படுத் திச் சோடியம் சல்ஃபேட் தயாரிக்கலாம். மாறாக, ஹார்க்ரீவ்ஸ் முறையில் சோடியம் குளோரைடு கரை சலில் சல்ஃபர் டை ஆக்சைடையும் காற்றையும் செலுத்தலாம். இரு வழிமுறைகளிலும் HCI அமிலம் உடன் விளை பொருளாகக் கிடைக்கிறது. காகிதத் தயாரிப்புக்குப் பயன்படும் தூய்மை குறைந்த சோடி யம் சல்ஃபேட்டை, சோடியம் கார்பனேட்டுடன் கந்தகத்தைக் கலந்து காற்றில் சூடற்றிப் பெறலாம். சோடியம் பைசல்ஃபைட். (NaHSO,) இது சோடியம் கார்பனேட் (சலவைச் சோடா உப்பு) கரைசலில் வளி மத்தைச் செலுத்தித் தயாரிக்கப்படுகிறது. 2Na,CO + 2H,O + 4SO, → 4NaHSO, + 2CO, 200, → நிறநீக்கம் செய்யப் பயன்படும் இவ்வுப்பைப் பெற, சோடியம் பென்சீன் சல்ஃபனேட்டைச் சோடியம் ஹைட்ராக்சைடுடன் கலந்து உருக்குவதும் எளிய தயாரிப்பு முறையே ஆகும். சோடியம் ஹைட்ரோசல்ஃபைட் (Na,S,O, ), அச்சுத் தொழிலிலும் சாயத் தொழிலிலும் ஆக்சிஜன் ஒடுக்கி யாகப் பயன்படும் இவ்வுப்பைத் தயாரிப்பதற்குச் சோடியம் ஹைட்ரோசல்பைட் கரைசலைத் துத்த நாகம் கொண்டு ஒடுக்குதல் எளிய முறையாகும். தனித்த நிலையிலுள்ள அமிலத்தில் ஒரு நடுநிலை யாக்கச் சுண்ணாம்பைக் கலக்கலாம். இதன் தொடர் விளைவால் உண்டாகும் துத்தநாகம் வடிகட்டிப் பிரிக்க வசதியாக வீழ்படிவாகிறது. 2NaHSO + H,SO, + Zn ZnSO + NagS,O, + 2H,O கருஞ் சாம்பல் (Black ash-Na,S), தோல் பதனிடு தலில் தோலிலிருந்து முடியை அகற்றப் பயன்படும் இப்பொருளைத் தயாரிக்க, சோடியம்சல்ஃபேட்டைத் தூளாக்கப்பட்ட நிலக்கரியுடன் சூடேற்ற வேண்டும். 850°C 2Na,SO, + 4C → 2Na,S + 4CO, - ஹைப்போ (சோடியம் தயோசல்ஃபேட்) (Na,S,O,) புகைப்படத் தொழிலில் சுருளின் ஒளிபடாத பகுதி களிலிருந்து வெள்ளி ஹாலைடு உப்புகளைக் கரைத்துப் பிரிப்பதற்குப் பயனாகும் ஹைப்போவைத் தயாரிப்ப தற்குச் செறிவூட்டிய சோடியம் சல்ஃபைட் சலைச் சல்ஃபருடன் பீங்கான் பூச்சுக் கொண்ட இரும்புத் தொட்டிகளில் சூடேற்றிக் குளிர்விக்க வேண்டும். கரை சோடியம் நைட்ரைட் (NaNO,) அம்மோனி கனிம உப்புத் தயாரிப்பு முறைகள் 117 யாவை அமில வாங்கு முறைப்படி ஆக்சிஜனேற்றம் செய்து பெற நைட்ரிக் ஆக்சைடு வளிமத்தைச் சோடியம் கார்பனேட் கரைச சலில் செலுத்திச் சோடியம் நைட்ரைடைப் பெறலாம். இவ்வுப்பு சாயத் தொழிலின் முதன்மையான மூலப் பொருளா கும். 2Na,CO, + 4N0 + 0, -→ 4NaNO, + 2CO, + + சோடியம் அமைடு (NaNH,). இது வீரியம் மிக்க நீரகற்றல் பொருளாகப் பயன்படும். சோடியம் அமைடைப் பெற 300°C வெப்பநிலையில் சோடி யத்தை நீர்மநிலை அமோனியாவில் கரைக்க வேண்டும். 2NH + 2Na - 2NaNH + H, சோடியம் சிலிகேட் (Na,SiO,). கரையும் கண் ணாடி (water glass) எனப்படும் இவ்வுப்பு, பெருமளவில் ஓட்டுவிப்பியாகப் பயன்படுகிறது. சலவைத்தூள் தயாரிப்பிலும் இடம் பெறும் இதைத் தயாரிப்ப தற்குச் சோடியம் கார்பனேட்டையும் சிலிகாவையும் (மணல்) கலந்து அக்கலவையை 1300°C வெப்ப நிலைக்கு உருக்க வேண்டும். Na,CO, + SiO, Na,SiO + CO, வரை இதன் வாய்பாடு நிலையானதன்று. Na,O.nSiO, எனும் அமைப்பில் இன் மதிப்பு 2 - 3,2 இருக்கக்கூடும். இவ்வினையின் விளைபொருளில் சிறிது பச்சை நிறம் கலந்திருக்கும். ஏனெனில் மூலப் பொருள்களில் இடம் பெறும் இரும்பு உப்புகள் வினை விளைபொருளிலும் தொடர்ந்து இடம் பெறு கின்றன. பொட்டாசியம் குளோரைடு (KCI). கலிபோர்னி யாவிலுள்ள ட்ரோனாவிலும் ஜெர்மனியின் ஸ்ட்ராஸ் ஃபாட்டிலும் உப்பு நீர் ஏரிகள் உள்ளன. அவற்றுள் KCI மலிந்துள்ளது. இத்தயாரிப்பில் பல ஒருமச் செயல் முறைகளும் ஓரிரு ஒரும வினைமுறைகளும் செயல்படுத்தப்படுகின்றன. பொட்டாசியம் நைட்ரேட் (KNO,). வெடி மருந்து, கண்ணாடி உரம் ஆகியவற்றைத் தயாரிக்கப் பயன்படும் இவ்வுப்பு. சோடியம் நைட்ரேட்டைப் பொட்டாசியம் குளோரைருடன் இரட்டைச் சிதைவுக்குட்படுத்திப் பெறப்படுகிறது. NaNO, + KCI -NaCl + KNO, மே.ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. I.P.Mukhloyov, Chemical Technology, Part 2,, Mir Publishers, Moscow. 1979.