118 கனிம உரங்கள்
1/8 கனிம உரங்கள் கனிம உரங்கள் தாவரங்களின் வளர்ச்சிக்கு 16 தனிமங்கள் தேவைப் படுகின்றன. கார்பன் ஹைட்ரஜன். ஆக்சிஜன், நைட்ரஜன், பாஸ்ஃபரஸ், பொட்டாசியம், கால்சியம் மக்னீசியம், சல்ஃபர், இரும்பு, மாங்கனீஸ், துத்த நாகம், செம்பு, போரான், மாலிப்டினம், குளோரின் ஆகிய தனிமங்களைக் குறை மற்றும்நிறை அளவில் அளிக்கக் கூடிய பொருள்களுக்கு உரங்கள் என்று பெயர். இயற்கையாகக் கிடைக்கக்கூடிய சிலபொருள் கள் எந்த நிலையில் கிடைக்கின்றனவோ அதேநிலை யையும் அப்பொருள்களைச் சில மாற்றங்களுக்கு உட் படுத்திய பிறகு கிடைக்கும் பொருள்களையும் உழவர் உரமாகப் பயன்படுத்துகின்றனர். எடுத்துக்காட் டாக நார்ச்செடி (hemp), தக்கைப்பூண்டு (daincha). கொளுஞ்சி,பில்லிப் பயறு (pilli pesera) ஆகிய தாவரங்களை நிலத்தில் பயிர் செய்து, அச்செடிகள் பூக்கும் போது அவற்றை அந்நிலத்திலேயே மடக்கி உழுது உரமாகப் பயன்படுத்துகின்றனர். இத்தாவரங் களுக்குப் பசுந்தாளுரப் பயிர் என்று பெயர். மேலும் கிளைரிசீடியா, புங்கை, பூவரசு போன்ற மரங்களின் தழைகளை வெட்டி நிலத்திற்கு உரமாகப் பயன் படுத்துவர். இத்தகைய உரங்களுக்குத் தழையுரம் என்று பெயர். தழையுரங்களைத் தவிர, பழங்காலத்திலிருந்தே உழவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த பிறிதோர் உரம் தொழு உரம் ஆகும். மாட்டுச் சாணம், சிறுநீர் தொழுவங்களில் கிடைக்கும் கழிவுத் தீவனங்கள் வீட்டிலும் அதன் சுற்றுப் புறங்களிலுமிருந்து நாளும் கூட்டித் தொகுக்கப்படும் குப்பை கூளங்கள் ஆகிய வற்றை ஓரிடத்தில் தேக்கி வைக்க, நாள் பல கழிந்த பின் இப்பொருள்கள் பல மாற்றங்கள் அடைந்து அளவில் குறைந்து இருக்கும். அதாவது இப்பொருள் கள் யாவும் மட்கி விடும். இப்பொருளைத் தொழுஉரம் என்பர். பண்ணையில் கிடைக்கும் தாவரக் கழிவுப் பொருள்களாகிய கருக்காய். (discolped grains) கரும்புத் தோகை, கரும்புச் சக்கை, உலர்ந்து உதிர்ந்த இலைகள் முதலியவற்றில் கார்பன் மிகுந்த அளவில் இருக்கும். இப்பொருள்களைக் குழிகளில் இட்டுச் சில நாள் வைத்திருந்தால் அவை மட்கிய நிலையை அடைகின்றன. இப் பொருளுக்கு, கம்போஸ்ட் (compost) என்று பெயர். எண்ணெய் வித்துகளாகிய நிலக்கடலை, எள், தேங்காய், ஆமணக்கு முதலியவற்றின் விதைகளி லிருந்து எண்ணெயை நீக்கிய பிறகு கிடைக்கும் பொருளுக்குப் பிண்ணாக்கு என்று பெயர். இதில் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சில தனிமங்கள் உள்ளன. தழையுரம், தொழுஉரம், கம்போஸ்ட், பிண்ணாக்கு ஆகிய பொருள்களில் கார்பன் நிறைந்து இருக்கும். அத்துடன் பயிரின் வளர்ச்சிக்கு வேண்டிய பல தனிமங்களும் பல்வேறு அளவில் இருக்கும். இத் தகைய பொருள்களே கனிம உரங்கள் எனப்படு கின் ஏறன. உழு தழையுரம். உரமாகப் பயன்படுத்துவதற்கென்றே ஒரு தாவரத்தைப் பயிரிட்டு நிலத்தில் மடக்கி தால் அப்பயிருக்குப் பசுந்தாள் உரப் பயிர் என்று பெயர். பசுந்தாளுரப் பயிர் குறைந்த காலத்தில் நன்கு வளர்ந்து நிறைந்த தழைகளைக் கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். மேலும், அப்பயிர் அவரை இனத்தைச் சேர்ந்ததாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால் அவரை இனத் தாவரங் களின் வேர் முண்டுகளில் ரைசோபியம் எனப்படும் பாக்ட்டீரியா உள்ளன. அவை காற்றில் தனிம நிலையிலுள்ள நைட்ரஜனை உட்கவர்ந்து வேர் முண்டுகளில் நிலைப்படுத்துகின்றன. ஆகவே அவரை இனத் தாவரங்கள் பயிரிடப்படும் நிலத்தில் நைட் ரஜன் சத்து அதிகரிக்கும். தழையுரத்தால் மண்ணிற்கு ஏற்படும் நன்மைகள். வெப்பநாடுகளில் உள்ள மண்ணில் நைட்ரஜன் சத்துக் குறைவாக உள்ளது. இக்குறையைச் சீர் செய்ய அவரை இனத் தாவரத்தைச் சேர்ந்த பசுந்தாள் உரப் பயிர்களைப் பயிர் செய்தால் மண்ணில் தழைச் சத்து அதிகரிக்கும். சணப்பு, தக்கைப்பூண்டு, பில்லிப் பயறு கொளுஞ்சி முதலியவை தமிழ்நாட்டில் பயிரிடப்படும் சில முக்கிய தழையுரப் பயிர்களாகும். தொழு உரம். நீண்ட காலமாக உழவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் உரம், தொழு உரம் ஆகும். மானாவாரி நிலங்களுக்குப் பெரும்பாலும் இடப்பட்டு வரும் உரம் தொழு உரம் ஆகும். மாட்டுச் சாணம், சிறுநீர், கழிவுத் தீவனங்கள். குப்பை, கூளங்கள் ஆகியவற்றைக் குழிகளில் இட்டு மட்கும்படிச் செய்து தொழு உரம் தயாரிக்கப் படுகிறது. நிலத்திற்குத் தொழு உரம் இடும்போது பின் வரும் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். பயிர் விதைப்பு அல்லது நடவுக்குச் சில நாள் முன்னரே தொழு உரத்தை நிலத்தில் இடவேண்டும். இட்ட பின் உடனடியாக உழுது மூட வேண்டும். தொழு உரத்தில் பொதுவாக பாஸ்ஃபரஸ் சத்து மிகவும் குறைவாக இருக்கும். ஆகையால் தொழு உரம் இடும்போது சூப்பர் பாஸ்ஃபேட் என்னும் செயற்கை உரத்தையும் நிலத்திற்கு இட வேண்டும். கம்போஸ்ட், மட்கிய கரிமச் சேர்க்கைப் பொருள் களுக்குக் கம்போஸ்ட் என்று பெயர். கம்போஸ்ட் தயார் செய்வதற்கு முதன் முதலில் பயன்படுத்தப் பட்ட முறை இந்தூர் முறையாகும். தற்போது இய முறைக்குப் பதிலாகப் பெங்களூர் முறை நடைமுறை யில் உள்ளது. இந்தூர் முறையில் பெரும்பாலும் வளி வேண்டும் பாக்டீரியாக்கள் (aerobic bacteria) குப்பையை மட்கும்படிச் செய்கின்றன. ஆனால் பெங்களூர் முறை, குப்பையை மட்கச் செய்து. தொடக்கத்தில் வளிவேண்டும் பாக்டீரியாவும்