பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கனிமக்‌ கட்டமைப்பு

124 கனிமக் கட்டமைப்பு ளன. அயனியும் அறுமுனைப்பிணைவால் கட்டப்பட்டுள் இதனால் அவை வரிசைக் கனிமவேதி மதிப்பி லிருந்து குறிப்பிடத்தக்க அளவு விலகுவதில்லை. வேறுபட்ட வெப்ப அழுத்த நிலைகளில் ஆலிவின் படிகங்கள் ஒழுங்கற்ற படிகத்தன்மையுடனோ, ஒழுங் கான படிகத்தன்மையுடனோ அரைகுறை தன்மையுடனோ மாறி அமைகின்றன. . ஒழுங்கு ஒன்றிற்கு மேற்பட்ட படிகக் கட்டமைப்புகளை உள்ளடக்கிய கனிமத்தினுள் ஆற்றலில் மாறுபட்டு ஒவ்வா நிலையுடைய இடங்கள் காணப்படும். அவ் விடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தனிம அணுக்கள், அயனிகள், காலியிடங்கள் மற்றும் வேற்றுத் துகள்கள் அடங்கியிருந்தால் சுனிமங்களிடையே ஒழுங்குமற்றும் ஒழுங்கற்ற தன்மை உண்டாகிறது. தாழ் உயர் அமையும். வெப்பநிலையில் இக்கனிமங்கள் ஒழுங்கானவையாயும், வெப்பநிலையில் ஒழுங்கற்றனவாயும் பெரும்பாலான கனிமங்கள் ஏறக்குறைய நிறை கொண்டன் படிகக் கட்டமைப்பைக் யுடைய வாயினும் அவை முற்றிலும் குறைபாடில்லாக் கனிமங் களாக, இயற்கையில் வளருவதில்லை. அவை வரிசை வேதியலடக்கத்திலிருந்து சிறிது விலகிய வேதியலடக் கத்தைக் கொண்டிருக்கலாம். இவ்விலக்கம் கனிம மாசுகள் இருப்பதாலும், நடுநிலை வேதியலடக்க மின்மை, அணிக்கோவையிலுள்ள தனிம இடப் பெயர்ச்சி, வளிம மாற்றம். துளைகள் நிரம்பிய தாலுண்டான கட்டமைவு ஆகியவற்றாலும் உண்டா கலாம். ஒரு கனிமத்தின் வேதியலடக்கத்தில் ஒருவகை யான தனிமம் மிகுதியாகவும் மற்றொரு வகையான தனிமம் குறைவாகவும் இருக்கும்போது அக்கனி மத்தை அதன் வரிசைக் கனிமத்தின் வேதியலடக்கத் துடன் ஒப்பிட்டுப் பார்த்து இக்குறைபாட்டைக் கண்டுபிடிக்கலாம். எடுத்துக்காட்டாகப் பிர் ஹோடைட்டுக் கனிமத்தைக் கூறலாம். இதில் பைரைட்டைவிட மிகுதியான கந்தகமும் குறைந்த இரும்பும் அடங்கியுள்ளன. பிர்ஹோடைட்டில் இரும் புள்ள இடங்கள் பல காலியாக இருப்பதால் இத் தன்மை ஏற்படுகிறது. எனவே பிர்ஹோட்டைட் பைரைட்டின் குறைபாடுள்ள கனிமமாகக் கருதப்படு கிறது. படிகங்களிடையே ஒழுங்கு மற்றும் ஒழுங்கற்ற தன்மையை ஆராய்வதால் புவியை உண்டாக்கிய பொருள்களைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள் வதற்கு வாய்ப்புகள் உண்டு. ஒரு கனிமத்தின் வெப்ப வேதி இயக்கத்திற்கும் படிகக்கட்டமைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கனிமங்களை வேதி முறையில் பகுத்தும், வெப்ப வேதியியலியக்கக் கருது கோள்களைக் கொண்டும் கனிமப் பகுதி எல்லைப் படங்களை வரையலாம். கனிமப்பகுதி எல்லைப்படம் குறிப்பிட்ட கனிமத்தின் வெப்ப அழுத்தநிலை. வேதிப் பொருள்களின் தன்மை, உடனமையும் வேற்றுக் கனிமங்கள், ஆக்சிஜன் அழுத்தம், நீராவி அழுத்தம் போன்ற பல இயல்புகளின் தன்மைகளைக் காட்டும். மேலும் குறிப்பிட்ட வெப்ப அழுத்தவளிம நிலைகளில் அக்களிமம்நிலையான தன்மையுடையதா என்றும் அறியலாம். மேலும் அக்கனிமத்தின் திண்மக் கரைசல் தொடரின் வேதி மாறுபாட்டையும் தெளி வாக வரையறுக்கலாம். உடனமையும் கனிமங்களின் எல்லை வரைகளை அறிவதால் கனிமக்கூட்டங் களையும் பாறைத் தோற்றச் சிக்கல்களையும் தீர்க் கலாம். சிலிக்கேட் அமைப்புகளைப் பற்றியும் அறிய லாம். சிலிக்கேட் அமைப்புகளைப் பற்றி அறிவதால் பாறைத் தோற்றநிலைகளைப் பற்றி அறிய முடியும். வெப்ப வேதியியலியக்க வரையறைகளால் குறிப் பிட்ட வேதி இயல்பு உடைய பொருள் சூழ்நிலைகள் மாறும்போது ஒன்றுக்கு மேற்பட்ட பல கட்டமைப்பு மாதிரிகளையுடைய பொருள்களாக மாறலாம்.இவ் வாறு போர்சுட்ரைட் உயர்ந்த அழுத்த நிலைகளில் ஸ்பீனல் கட்டமைப்பு மாதிரியாகத் தனக்கேற்ற வெப்ப அழுத்தச் சூழ்நிலைகளில் மாறுகிறது. இவை யிரண்டும் மக்னீசிய சிலிக்கேட்டுகளே(Mg,SiO,) ஆனாலும் ஆலிவின் அறுகோண நெருக்கப் பொதி வினாலான ஆக்சிஜன் அயனிகளால் ஆகியுள்ளன. பினல் கனசதுர நெருக்கப் பொதிவினாலாகிய ஆக்சிஜன் அயனிகளால் ஆகியுள்ளன. ஒரே வேதியியல மைப்பைக் கனிமங்கள் வெவ்வேறு வகையான படிகக் கட்டமைப்பைக் கொண்டிருந்தால் அவை வேறு பட்ட கனிமங்களாகவும் ஒரே கனிமத்தின் வேற்றுப் பல்லுருவக் கனிமமாகவும் கருதப்படும். எதிரெதிர் மின்னேற்றமுடைய அயனிகள் மின்னி யக்கத்தால் பிணைந்து அயனிப் பிணைவுப் பொருள் களை உண்டாக்குகின்றன. இதனால் உருவான படி சுங்கள் உயர்ந்த அச்சுருவநிலைகளைக் கொண்டி ருக்கும். அவை நீரில் ஓரளவு கரையும். நடுத்தரமான கடினத்தன்மையையும், உருகுநிலையையும் உடையன. மேலும் அவை வெப்பமின் அரிதில் கடத்திகளாகும். ஈரிணை திறப்பிணைப்பால் அணுக்களிடையேயுள்ள எலெக்ட்ரான்கள் ஒன்றுடன் ஒன்று பங்கு கொண்டு கட்டப்படுகின்றன. இதனால் மிகவும் உறுதியடைந்த பிணைப்பு உருவாகிறது. இத்தகைய ஈரிணை திறப்பு இணைப்புடைய கனிமங்கள் உயர்ந்த உருகு நிலை, கொதிநிலை, கடினத்தன்மை உடையனவா யிருக்கும். ஒப்புநோக்கில் இக்கனிமங்கள் நீரில் கரை யாதன. அரிதில் வெப்பத்தையும் மின்னாற்றலையும் கடத்தும் இவை குறைந்த அச்சுருவநிலைகளைக் கொண்டிருக்கும். உலோகப்பிணைப்பில் கருவுக்கும் எலெக்ட்ரானுக்குமிடையே தக்க பிடிப்பு இல்லாமல் காணப்படும். இதனால் எலெக்ட்ரான் காடை அல்லது எலெக்ட்ரான் கூட்டுப் பங்கேற்பு நிகழாது. அதற்குப் பதிலாக எலெக்ட்ரான் நகரக் கூடியதாயிருக்கும். அணுக்