பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனிமக்‌ கட்டமைப்பு 125

அணுக்கரு பிணைக்கப்பட்டு, ஒவ்வோர் அணுக் கருவைச் சுற்றிலும் மின்னேற்றம் பெற்று விளங்கும். இதனால் உண்டாகும் உ உலோகப் பிணைப்பால் பொருள்கள் சிறந்த வெப்ப மற்றும் மின்கடத்திகளா கின்றன. மேலும் அவை உயர்ந்த தகைவுத்தன்மை, குறைந்த கடினத் தன்மை, உருகுநிலை ஆகிய வற்றைப் பெறுகின்றன. வான்டர்வால் பிணைப் புடனும் கனிமங்கள் அமைந்துள்ளன. இது ஒரு வலிவற்ற பிணைப்பாகும். இப்பிணைப்பு மிக அரி தாகவே கனிமங்களிடையே காணப்படும். கனிமங்கள் குறைந்த கடினத்தன்மையையும் தாகப் பிளக்கும் கனிமப் பிரிவுத் தளங்களையும் கொண்டிருக்கும். சில வகையான கனிமங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பலவகையான பிணைப்புகளும் காணப்படுகின்றன. ஸ்பாகலரைட்டுக் கனிமத்தில் அயனிப்பிணைப்பும் ஈரிணை திறப்பிணைப்புடன் பிணைப்புடன் வாறு கலவையான தனால் எளி சேர்ந்து காணப்படுகிறது. கலீனாவில் அயனிப் உலோகப் பிணைப்பும் உள்ளது. இவ் கனிமங் பிணைப்புகளையுடைய களில் உள்ள வெவ்வேறு வகையான பிணைப்புகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட படிகத்தளங்களில் வளர்வ தால் இக்கனிமங்கள் திசைப் புலனுடைய கனிமங்களா கின்றன. கிராஃபைட்டும் மைக்காவும் நன்றாக அமைந்த திசைப்புலனுடைய கனிமங்களாகும். சிலிக்கேட்டுகளின் பல்லுருவ அலகுகளைக் கொண்டு திட்டுச் சிலிக்கேட்டுகள், இருபிணையுறவுச் சிலிக்கேட்டுகள், வளையச் சிலிக்கேட்டுகள், சங்கிலித் தொடர்ச் சிலிக்கேட்டுகள், கட்டடச் சிலிக்கேட்டுகள் என வகைப்படுத்தப்படுகின்றன. சிலிக்கானின் நான் முக மையங்களைக் (SiO,) கொண்ட அயனிவினைவின் கூட்டுப் பங்கேற்பால் திட்டுச் சிலிக்கேட்டுகள் உரு வாகும். இச்சிலிக்கேட்டுக்கு எடுத்துக்காட்டாக ஆலி வினைக் குறிப்பிடலாம். இரு சிலிக்கா நான்முக மையங்கள் ஓர் ஆக்சிஜன் அயனியால் பிணைக்கப் படுவதால் இருபிணைப்பு உறவுச் சிலிக்கேட்டுகள் உண்டாகின்றன. இதில் Si:0 வீதம் 2:7 ஆகும். மெல்லிலைட் இச்சிலிக்கேட் வகையைச் சாரும், வளையச் சிலிக்கேட்டுகளில் SI0, நான்முக மையங்கள் வளையத் தொடர்வாகப் பிணைந்திருக்கும். இதில் Si:0 வீதம் 1:3 ஆகும். பெரில் ஒருவளையச் சிலிக் கேட்டாகும். சங்கிலித்தொடர் சிலிக்கேட்டுகள் இரு வகைப்படும். இச்சிலிக்கேட்டுகளில் சிலிக்கா நான் முக மையங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இணை யான நீண்ட சங்கிலிபோல அமைந்து காணப்படும். பைராக்சின் கனிமங்கள் எளிய சங்கிலித் தொட ராகவும் ஆம்பிபோல் கனிமங்கள் இரட்டைவடச் சங்கிலித்தொடராகவும் அமைகின்றன. எளிய சங்கி லித் தொடர் Si:01:3 என்னும் விகிதத்திலும் இரட்டைவடச் சங்கிலித்தொடர் Si:0 4:11, என்னும் வீதத்திலும் அமைந்திருக்கும். ஏட்டுச்சிலிக் கேட்டுகளில் உள்ள சிலிக்காலின் நான்முகமையத்தி கனிமக் கட்டமைப்பு 125 லுள்ள மூன்று ஆக்சிஜன் அயனிகள் அருகிலுள்ள நான்முக மையத்துடன் இணைந்துகொள்வதால் தட்டையான ஏடுகள் போன்ற இருபரிமாணச் சிலிக் கேட்டுகள் வளருகின்றன. இதில் Sio வீதம் 2:5 ஆகும்.மைக்காக் கனிமங்கள் ஏட்டுச் சிலிக்கேட்டைச் சார்ந்தன கட்டடச் சிலிக்கேட்டில் உள்ள சிலிக்கா நான்முக மையங்களின் அனைத்து ஆக்சிஜன் அயனி களும் அண்மையிலுள்ள சிலிக்கா நான்முக மையங் களில் உள்ள ஆக்சிஜன் அயனிகளுடன் பிணை கின்றன. இதனால் முப்பரிமாணக் கட்டமைப்புடைய சிலிக்கேட்டுகள் உருவாகின்றன. இக்கூட்டுச் சிலிக் கேட்டில் Si:0 1:2 ஆகும். குவார்ட்ஸ், பெல்ஸ்பார் கனிமங்கள் கட்டடச் சிலிக்கேட் வகையைச் சார்ந்தன வாகும். கூட்டுப் பங்கேற்கும் அயனி, உருவளவில் சிறிய தாயிருந்தால் அவ்வயனியைச் சுற்றிக் குறைந்த அளவு எண்ணிக்கையுள்ள எதிரயனிகளே சூழ்ந் திருக்கும். அதனால் கூட்டுப் எதிர பங்கேற்கும் யனிகளின் எண்ணிக்கை குறையும். அவ்வயனியின் உரு வளவு பெரியதாயிருந்தால் உயர்ந்த எண்ணிக்கை யுடைய எதிரயனிகள் சூழ்ந்திருக்கும். எனவே அயனி யைச் எதிரயனிகளின் சூழ்ந்திருக்கும் எண்ணிக் கையைக் கண்டுபிடிக்க அயனிகளின் ஆரத்தை அளக்க வேண்டும். இந்த ஆரவீதத் தொடர்பைRA/Rx என்னும் வாய்பாட்டின் மூலம் ஓர் இரட்டை அயனிகளிடையே உள்ள உறவைக் கண்டுபிடிக்கலாம். இதில் RA என்பது நேரயனியின் ஆரத்தைக் குறிக்கும். Rx என்பது (A) படம் 3. ஒத்த ஆரங்களையுடைய கோளங்களின் நெருக்கப் பொதிவு.(அ) ஒற்றை தெருக்கப் பொதிவடுக்கு (ஆ)இருவிதமான மாற்ற அமைப்புடன் கூடிய ஒற்றை நெருக்கப்பொதிவடுக்கு. இதன் மீது இரண்டாம் ரெருக்கப் பொதிவுப்பிணைவடுக்கு பொருத்த இயலும். (இ) அறுகோண நெருக்கப் பொதிவில் ABABA என்ற கொடரமைப்பு அடித்தளத்திற்கிணையான அறுகோண அலகுறை டைவெளியிட்ட கோட்டினால் காட்டப்பட்டுள்ளது. (ஈ) கனசதுர நெருக்கப்பொல்ல.