கனிம நார்ப் பொருள்கள் 127
கனசதுர நெருக்கப் பொதுவிலிருந்து சிறிது மாறு பாடடையும் கட்டமைவு மாதிரிகளை ஆன்டிபுளு ரைட் (M,S), ஸ்பாகலரைட் (MS), கலீனா (MS). ஸ்பீனல் (MS) மற்றும் பைரைட் MS, என்றும் அறுகோண நெருக்கப் பொதிவின் உட்பிரிவுகளை நிக்கோலைட் (Ni As), உர்ட்சைட் (ZnS), மாலிபிடி னைட் (MoS),மெல்னோயிட் (Ni Te ), சால்கோசைட் (Cu S), ஸ்டிபினைட் (Sb,S,), புரூஸ்டைட், பைரார் கைட் ( ( Ag S) (As Sb), S3) என்றும் வகைப்படுத்தி யுள்ளார். இக்கட்டமைப்பு மாதிரிகளில் சல்ஃபைடு, சல்ஃபோ உப்புகள், இயற்கை உலோகங்கள், ஆக் சைடுகளைச் சார்ந்த கனிமங்கள் ஆகியவற்றை மேற் கூறிய கட்டமைப்பு மாதிரிகளுடன் தொடர்புபடுத்தி வகைப்படுத்தலாம். மேற்கூறிய 12 கட்டமைப்பு மாதிரிகளின் அடிப்படையில் மேலும் பலவகையான மரபுக் கட்டமைப்பு மாதிரிகளை உருவாக்கலாம். இரா. ராமசாமி க - நூலோதி. L.G. Berry & B, Mason, Mineralogy. Second Edition, CBS Publishers and Distributors, New Delhi, 1985. கனிம நார்ப் பொருள்கள் யற்கையானவை (எ கா. கல்நார்) செயற்கை யானவை (எ.கா) கண்ணாடிநார் எனக் கனிம நார்ப் பொருள்கள் இருவகைப்படும். கல்நார், கண்ணாடி நார் முதலியவை வெப்ப நிலைப்பு மிக்கவை. இவை உயர் வெப்பநிலையில் இயங்கும் மின்பொறிகளின் கருணைகளைக் (winding) காப்பிடப் பயன்படும். கல்நார், நாரிழை உள்ளமைப்புடைய கனிமம். இதன் மெல்லிய நார் இழைகளை நூலாக நூற்கலாம். கல்நார் மின்காப்புத் தொழிலில் சுருணைகளுக்குக் காப்பிடப் பயன்படுகிறது. இது சுருணைகளுக்கு மின்காப்பிட ஏற்றவாறு தாள், அட்டை, நாடாக் களாகக் கிடைக்கிறது. கல்நார், மின்காப்புப் பிணை பொருள்களிலும் (bonding materials), நெகிழிகளிலும் (plastics) நிரப்பியாகப் (fillers) பயன்படுகிறது. கல்நார்த் தாள். இது 0.2.-0.5 மி.மீ. கனத்தில் உருளைகளாகக் கிடைக்கிறது. இத்தாள் பிட்டூமன் அல்லது பிற குழைவணத்தால் அகஊட்டம் செய்யப் படுகிறது. சட்டப் புலச் சுருளின் (field coil) சுற்றிடையில் அமையும் மின்காப்பீடாகப் பயன்படு கிறது. கல்நார் அட்டை. பலகைகளாகக் கனிம நார்ப் பொருள்கள் 127 இயக்க, வேதியியல் முறைகளால் பதப்படுத்திக் கல் நார் மூலப் பொருளைப் பெறலாம். கல்நார் மூலப் பொருள் தாள், அட்டை, நாடாக்கள் செய்யப்பயன் படும். இது சுருணையின் முக்கிளைக் கல்நார் மின் காப்பீட்டிற்குப் பயன்படும். பருத்தி இழையைக் கல்நார் இழையுடன் கலந்தால் கல்நாரின் இயக்க வலிமை கூடுகிறது. கல்நார் நாடா. இது மின்பொறிகளில் சுருள் அல்லது சுருள் பிரிவுகளின் மேல், மேல்புற அடுக்கு மின்காப்பாகப் பயன்படுகிறது. இது 0.25-0.6 மி.மீ. கனத்திலும், 13-38 மி.மீ. அகலத்திலும் கிடைக் கிறது. உயர் மின்னழுத்தப் பொறிச் சுருணை களின் மின்புலம் சீராக அமைய இரும்பு ஆக்சைடு கலந்த கல்நார் நாடா பயன்படுகிறது. கண்ணாடி நார். இது மின்காப்பீடாகப் பரவ லாகப் பயன்படுகிறது. புரி நூல், துணிகள் செய்ய இருவகைக் கண்ணாடி நார்கள் பயன்படுகின்றன. அவை முடிவிலா 20 கி.மீ நீள இழைகள், 25-50 செ.மீ. நீள நிலை நார்கள் என்பனவாகும். தொடர் இழைகள் உருகு கண்ணாடியிலிருந்தும். நார்கள் வார்ப்படத் தட்டிலிருந்து, நிலை உருகு கண்ணாடி பாயும்போது நீராவியையும் காற்றையும் ஊதிச் செய்யப்படுகின்றன. மின்காப்புக்குக் காரம் இல்லாத கண்ணாடி யிலிருந்து நாரிழைகள் செய்யப்படுகின்றன. உயர் வெப்ப நிலைப்பு, மெல்லிய கனம், தாழ் நீர் உறிஞ்சுமியல்பு ஆகியன கண்ணாடி நார் மின்காப்பின் சிறப்பியல்புகளாகும். 250°C வெப்பநிலை வரை இவை தம் புறப் பண்புகளை மாறாமல் பெற்றுள்ளன. ஆனால் இவ்லெப்பநிலையில் கரிம நார்களோ கரிந்து எரிவன. கல்நார்கள் கூடச் சிதறத் தொடங்கி விடுகின்றன. கண்ணாடி நார் பிற அனைத்து நார்களிலும் மெல்லியது. மிகுவலிமை மிகுந்தது. இது பட்டு, கேப்பிரான் போல ஐந்து மடங்கு இழு வலிமை அல்லது மிகுவலிமை உடையது. இதன் மிகுவலிமை யைக் குழைவணம், பிசின் மூலம் அசும்ஊட்டி மேலும் கூட்டலாம். துணி, நாடா, உறைகள் செய்யக் கண்ணாடி நார் பயன்படுகிறது. கண்ணாடித் துணி. து குழைவணத் துணி, கண்ணாடி நார்ப் பலகைகள், அபிரக மின் காப் பீடுகள் ஆகியவற்றின் அடிப்பொருளாகப் பயன்படு கிறது இது 0.025 -0.25 கனத்திலும், 8.50 மி.மீ. அகலத்திலும் கிடைக்கிறது. கண்ணாடி நார் உறை. இது கண்ணாடி நெய்யப்பட்ட குழாய் வடிவப் இது 2-12 கிடைக்கிறது. மி.மீ. கனப் இது புற உறை மி.மீ, உள்விட்டம் அடைப்புகளுக்குப் பயன்படும். பண்படாத கல்நாரை உடையது நாரில் பொருள்.1-8 உலோ. செந்தமிழ்க்கோதை