கனிம நீக்கம் 129
லுள்ள H+ அயனிகளும் OH - அயனிகளும் முறையே வன்னீரிலுள்ள கார அயனிகளாலும், அமில அயனி களாலும் பரிமாற்றம் செய்யப்படுவதால், மாற்றிகள் தங்கள் செயல்திறனை இழக்கின்றன. அயனிப் பரிமாற்ற ரெசின்களை மீண்டும் தொடக்க நிலைக்கே கொண்டு வருவதற்கு (புதுப்பித்தல்) நேரயனிப் பரிமாற்ற அறையில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தையும், அமில் அயனிமாற்று அறையில் சோடியம் கார்பனைட் அல்லது சோடியம் ஹைட் ராக்சைடு கரைசலையும் செலுத்திச் சிலமணி நேரம் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது, பின்வரும் வேதி வினைகள் நிகழும். காரஅயனி மாற்று அறையில், HCI H+ + CI- R - SOM + H+ RSO,H + M+ (M+ = Na+, K - போன்ற அயனிகள்) . இது போன்றே H அயனிகள் 2+ M 3+ M அயனி களையும் பரிமாற்றம் அடையச் செய்கின்றன. எதிரயனி மாற்று அறையில், Na,CO, + 2H,O - 2NaOH + H,COs NaOH Na+ + OH- + + RNH,CI- + OH- RNH,OH- + CI-- . 3 துபோன்றே OH - அயனிகள், SO -,PO, போன்ற அயனிகளைப் பரிமாற்றம் அடையச் செய் கின்றன. மேற்கூறிய வினைகள் மூலம் இரண்டு அறை களிலும் உள்ள ரெசின்கள் தொடக்க நிலையை அடை கின்றன. வேதி ஆய்வுக்கூடத்தில் அயனிகளற்ற நீரே தேவைப்படுவதால், தற்காலத்தில் பெரும்பாலும் வாலைவடி நீருக்குப் பதிலாக அயனிப் பரிமாற்று முறையில் கிடைக்கும் நீரையே பயன்படுத்துகின்றனர். சிறப்புகள்.இம்முறையில்பயன்படுத்தப்படும் கரிம ரெசின்களின் விலை சற்று மிகுதியாக இருப்பினும், அவற்றை மீண்டும் மீண்டும் புதுப்பித்துப் பழைய நிலைக்கே கொண்டு வர முடிவதால் இம்முறை சிக்கனமானதாகும். இவற்றைப் பழைய நிலைக்குக் வர ஹைட்ரோகுளோரிக் அமிலம், ஹைட்ராக்சைடு ஆகிய வேதிப் கொண்டு சோடியம் பொருள்கள் தேவைப்படுகின்றன; வை விலை கனிம நீக்கம் 129 குறைந்தவை, வெளிப்படும் நீரில் அயனிகள் யாவும் நீக் கப்படுவதால், இம்முறையில் கிடைக்கும் நீரின் தரம் வாவை வடிநீரின் உள்ளது. தரத்தைவிட மேலானதாக வரம்புகள். அயனி மாற்றிகளினூடே செலுத்தப் படும் நீர் மிக அதிக அயனிகளைக் கொண்டிருந் தாவோ கூழ்மத் துகள்களைப் பெற்றிருந்தாலோ அயனி மாற்றிகளின் செயல்திறன் மிகவிரைவில் பாதிக்கப்படும். நீரில் கரைந்துள்ள வளிமங்களை இம்முறையில் நீக்க இயலாது. கூழ்ம நிலையில் உள்ள சிலிக்காவை நீக்க முடியாது. கடல் நீரில் கனிம நீக்கம். தற்காலத்தில் வேளாண் மை, தொழில்துறை ஆகியவற்றின் குடிநீர்ப் பற்றாக் குறையைத் தீர்ப்பதற்குப் பெருமளவில் அயனிகளைக் கொண்டுள்ள கடல்நீரை மென்னீர் ஆக்கும் முறை தேவைப்படுகிறது. இம்முறை உலகிலுள்ள ஒருசில அரசு, தனியார் நிறுவனங்களால் ஆய்வு செய்யப்பட்டு, அமெரிக்கா, அரேபியா போன்ற நாடுகளில் செயல் பட்டு வருகிறது. இவ்வாறு கடல்நீரில் உள்ள அயனிகளை நீக்குவதற்குப் பெரும்பாலும் வாலை வடித்தல் (distillation) முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. . கடல்நீரில் கனிம நீக்கம் செய்வதற்கு மின் கூழ்மப்பிரிகை (electrodialysis) முறையும் ஆராயப் பட்டு வருகிறது. இம்முறையில், சவ்வுத்தாளின் மூலம் தடுக்கப்பட்ட நீரில் மின்சாரம் செலுத்தப்படும் போது, நீரிலுள்ள நேர்மின் அயனிகள், எதிர்மின் முனையிலும் எதிர்மின் அயனிகள், நேர்மின் முனையிலும் சுவர்ந்து இழுக்கப்பட்டு வன்னீர் மென்னீராக்கப்படுகிறது. குளிர்விக்கும் முறை மூலம் (freezing method ) கடல்நீரைக் கனிம நீக்கம் செய்ய முடியும் என்பது ஆய்வு மூலம் அறியப்பட்டுள்ளது. பெருமளவில் உப்புகள் கரைந்துள்ள கடல்நீரைக் குளிர்வித்தால் உப்புகள் கரைந்திராத பனிக்கட்டிகள் உண்டா கின்றன. இப்பனிக்கட்டிகளை மூலக் கரைசலிலிருந்து (mother liquor) பிரித்தெடுக்கவேண்டும். இம் முறை களில் கடல்நீரை அயனி நீக்கம் செய்து கிடைக்கும் மென்னீர் விலை மிகுந்துள்ளது. எனவே இம்முறை களைக் குறைந்த செலவில் செயல்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காண்க, அயனிப் பரி மாற்றம். -- தி.இராமச்சந்திரமூர்த்தி நூலோதி. William L. Masterton and Emil J, Slowinski, Chemical Principles with Qualitative Analysis, W.B. Saunders, Philadelphia, 1978. அ. க.8 9