பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 கனிமப்‌ பூச்சு

130 கனிமப் பூச்சு கனிமப் பூச்சு நிறப் பொருள் கலந்த மெருகுவணங்கள் (pigmented varnishes), உயர் வகைப் புறப்பரப்புப் பூச்சுகள், மெருகுவணங்களில் இடம் பெறும் உலர் எண்ணெய், ரெசின், உலர் இயக்கத்தூண்டு பொருள்கள், மெரு கூட்டிகள் ஆகியன கனிமப் பூச்சுகளிலும் இடம் பெறுகின்றன. இவை தவிர கனிம வகை நிறப் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. இந்நிறமிகளுள் டைட்டேனியம் டைஆக்சைடு, கால்சியம் சல்ஃபேட் கலவை குறிப்பிடத்தகும். வெண்மை தவிர, பிற நிறப் பொருள்கள்' கலக்கப்பட்டால், அப்பூச்சுக்கள் ஜப்பான்கள் (japans) எனப்படுகின்றன. ஆளிவிதை எண்ணெயில் நிலக்கீல் (asphalt) கரைக்கப்பட்டு அக்கரைசல் டர்பன்டைனால் விளாவப்பட்டால் கரிய ஜப்பான் (black japans எனும் கலவை கிடைக்கும். இதை மிதிவண்டி, மின் கருவிகள் ஆகிய வற்றிற்குப் பூச்சு அளிப்பதற்குப் பயன்படுத்தலாம். உலோகப் பரப்பின்போது இவ்வகைக் கனிமப் பூ பூச்சைப் பூசி 200°C இல் 3 - 4 மணி நேரத்திற்குச் சூடுபடுத்தினால் பூச்சு, கடினத்தன்மை மிக்கதாகவும் தேய்மானமற்றதாகவும் ஒளிர்வு மிக்கதாகவும் அமை கிறது. - மே. ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. Robert D. Brown, Introduction to Chemical Analysis, International Student Edition, McGraw-Hill International Book company, 1983. கனிமம் வகை ஓரளவு திட்டமான வேதி இயைபும், இயற்பியல் பண்புகளும் கொண்ட பெரும்பாலும் படிகத்தன்மை யுடன் கூடிய இயற்கையில் தோன்றும் கரிம யல்லாத பொருள் கனிமம் (mineral) எனப்படும். சில கரிமப்பொருள்கள் மிகவும் பயன்மிக்க இயற்கை வளமாகத் தோன்றும்போது, அவற்றையும் கனிமம் எனக் குறிப்பிடுவதுண்டு. எடுத்துக்காட்டாக, பெட் ரோலிய எண்ணெய், கனிம எண்ணெய் என்றே குறிப்பிடப்படுகிறது. கற்கால மனிதர்கள் கனிமங்களை ஆயுதங்க ளாகப் பயன்படுத்தி வந்தனர். பின்பு, கனிமத்தி லுள்ள பொருள்கள் தம் தேவைகளை நிரப்பவல்லன என்று தாமாகவே சிந்தித்தும், சில நேரங்களில் தடுமாற்றத்திலிருந்து மீண்ட நிலையிலும் தெரிந்து கொண்டனர். சில கனிமங்களின் வனப்பு மனிதரின் கவனத்தை ஈர்த்து, அவற்றை அணிகலன்களாகப் பயன்படுத்தும் நோக்கத்திற்கு அடிப்படையானது. புவியின் பரப்பில் தங்கம், வெள்ளி போன்ற ஓரிரு உலோகங்களையும் கார்பன், கந்தகம் போன்ற ஓரிரு அலோகத் தனிமங்களையும் தவிரப், பிற தனி மங்கள் யாவுமே சேர்ம வடிவில் மட்டுமே தோன்று கின்றன. கனிமங்களை அவற்றின் வேதி நிலையைக் கொண்டு ஆக்சைடுகள், ஹாலைடுகள், கார்பனேட் டுகள், சல்ஃபேட்டுகள், சல்ஃபைடுகள் என வகை யிடலாம். அட்டவணை 1 போரேட்டுகள் ஆக்சைடுகள் போராக்ஸ் Na,B,O,10 H,O காசிடரைட் SnOz கோல்மனைட் 6 Ca,B.O11. SH,O பூனைக்கண் SiO, கார்பனேட்டுகள் குரோமைட் FеO, Cr₂O. அரகோனைட் CaCO₂ கொரண்டம், டாலமைட் CaCO₂.MgCO, எமரி, நீலக்கல் குப்ரைட் Al₂03 cu,O சுண்ணாம்புக்கல், கால்சைட் CaCO, ஹேமட்டைட் Fe,O, செருசைட் PbCO, இல்மனைட் Feo, TiO, சிடரைட் FeCO₂ மாக்னடைட் Fe,0, மாக்னசைட் MgCO, லிமோனை! அசுரை: CuCO, 2Cu(OH), ஹாஸ்மனைட் Mn¸O+ மாலகைட் CUCO, Cu(OH), பெராவ்ஸ்கைட் Cao. Tio,