134 கனிமம்
34 கனிமம் களான பிர்கோடைட் (Fes), ஹேமடைட் (Fe,0,), மாக்னடைட் (FeFe,0, கனிமங்களுடன் வகைப் படுத்தாமல் கால்சைட் (CaCO,) கனிமத்துடன் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஹேமடைட்டை (Fe,0,} குருந்தத்துடனும் (Al,O) மாக்னடைட்டை (FeFe, O₁) ஸ்பினலுடனும் (MgAl₂O₁) வகைப்படுத்தி யுள்ளனர்:- இயற்கைத் தனிமங்கள் சல்ஃபைடு, சல்ஃபோஉப்புகள் சிலிக்கேட்டுகள் சல்ஃபேட் மாதிரி ஆக்சைடுகள்,நீர்ம ஆக்சைடுகள் உப்புக் கனிமங்கள் குரோமேட்டுகள் மாலிபிடேட்டுகள் நைட்ரேட்டுகள் டங்ஸ்டேட்டுகள் பாஸ்பேட்டுகள் ஆர்செனேட்டுகள் வனேடேட்டுகள் கார்பனேட்டுகள் போரேட்டுகள் என்று கனிமங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தோற்றம், கனிமங்கள் வளிமங்களிலிருந்து, பதங்க இயல்பாலும் மாதல் (Sublimation நீர்மங்களி லிருந்தும், பாறைக் குழம்பிலிருந்தும், திண்ம நிலை உருமாற்றத்தாலும் நான்குவித இயக்கங்களில் உண்டாகின்றன. இயற்கையில் இந்த நான்கு இயக் கங்களும் ஒன்றுடன் ஒன்று மிகுந்த தொடர் புடையன. நீராவிக் பதங்கமாதம். எரிமலை வாயினின்றும் குழாய்களிலிருந்தும் எரிமலையியக்கத்தின்போது வெளியேறும் வளிமங்கள் குளிர்ந்து சால் அம்மோனி யாக் (HN,CI) கந்தகம் (S), போரிக் அமிலம் ஆகிய கனிமங்கள் உருவாகின்றன. ஹேமடைட் ஏடுகள், FeCl +H,OF.0 +HC1 2 . என்ற வினையால் வளிமம்,நீராவி உண்டாகின்றன. காற்று மண்டலத்தில் பனிமழை இவ்வாறு பெய்கிறது. நீர்மக் கரைசல். கரைக்கப்பட்ட பொருள்கள் கரைசலிலிருந்து வீழ்படிவுற்றுக் கனிமங்களை உருவாக்கும். கரைசலிலுள்ள கரைப்பான் ஆவியா தலாலும், வெப்ப அழுத்தநிலை குறைவதாலும், கார்பன் டை ஆக்சைடு இழப்பினாலும், சுரிமப் பொருள்களின் வினையியக்கத்தாலும் கனிமங்கள் படிகின்றன. நில இயக்க வரலாற்றுக் காலத்தில் கடலின் ஒருபகுதி துண்டிக்கப்படுவதால் கடல்நீரில் கரைந்துள்ள உப்புகள் ஆவியாதலால் படிந்து, காலைட், ஜிப்சம் (CaSO, 2H,O) போன்ற கனிமப் படிவுகளை உண்டாக்குகின்றன. கடல்நீர் ஆவியாதல் தீவிரமடையும்பொழுது மிகுதியாக மிகுதியாக நீரில் கரையு மியல்புடைய மக்னீசிய, பொட்டாசிய உப்புகளும் படிவுறுகின்றன. பாலைவனங்களில் திடீரெனப் பெய்யும் மழையால் உருவாகும் தற்காலிக பிளேயா ஏரிகள் காய்ந்து உப்புப் படிவங்களை உண்டாக்கு கின்றன. இவற்றில் காலைட், ஜிப்சம் ஆகிய சுனிமங் களுடன் சோடியம் சல்பேட்டுகள், கார்பனேட்டுகள் மற்றும் போரேட்டுக் கனிமங்களும் உடன் காணப் படும். நீராவி ஊற்றுகள் மற்றும் வெந்நீரூற்றுப் பகுதிகளில் வெந்நீர் ஆவியுடன் மிகுதியான அழுத்தத் துடனிருப்பதால் கீழேயுள்ள பாறையிலுள்ள கனிமப் பொருள்களைக் கரைத்துக் கொண்டு மேலே வருகிறது. இதனால் நீராவி ஊற்றுகள் ஒப்பலையும், வெந்நீரூற்றுகள் டிராவர்ட்டைன் (travertine), கால் சைட் கனிமத்தையும் தோற்றுவிக்கின்றன. கார்பன் டைஆக்சைடு வேதி வினையால் பெரு மளவில் சுண்ணாம்புப் பாறைகள் (கால்சைட்) தோன்றுகின்றன. கால்சைட் தூயநீரில் கரையாத தாகும். ஆனால் நீரில் சிறிதளவு கார்பன் டை ஆக்சைடு கரைந்திருந்தால் கால்சைட் சிறிதளவு அந்நீரில் கரையும். இவ்வினையால் கால்சியம் பை கார்பனேட் உண்டாகும். அது நீரில் கரையுமியல் புடையது. உலக முழுதிலுமுள்ள சுண்ணாம்புப் பாறைகளில் குகைகள் இவ்விதமாக உண்டானவையாகும். எனினும் இவை மீண்டும் நிகழும் மீட்சி வினையாகும். கார்பன் டைஆக்சைடு இழப்பால் கால்சியம் கார்பனேட் மீண்டும் படிந்து சுண்ணத் தோரணங்களாகவும், சுண்ணப் புற்று களாகவும், சுண்ணாம்புப் பாறைக் குகைகளாகவும் வளரும். நீருற்றுகளிலும், ஆற்றோடைகளிலும் சுண்ணப்புரை இவ்வாறு உண்டாகிறது. உள்ள கால்சியம் கார்பனேட்டுகள் அல்லது சிலிக்கா போன்ற பொருள்கள் நேரடியாகப் படிந்து இப் பொருள்களை உண்டாக்கும் அளவிற்குக் கடல்நீரில் இப்பொருள்கள் இல்லையென்றாலும் பலவகையான கட ல்வாழ் உயிரினங்கள் கடல்நீரில் மிகச்சிறிய அளவிலுள்ள இப்பொருள்களைக் கவர்ந்து தம் உடலின் கடினப் பகுதிகளை உருவாக்கிக்கொள் கின்றன. இவ்வாறு பவளங்கள், கிரைனாய்டுகள். பொராமினிபெராக்கள், சங்கு மற்றும் கிளிஞ்சல் பூச்சிகள் கால்சியம் கார்பனேட்டைச் சுரந்து வளர் கின்றன. இரட்டையணுவுயிரினம். கடற்பஞ்சுகள், ரேடியோலேரியன்கள் சிலிக்காவை (SiO;xH,O) சுரக்கின்றன. இவ்வுயிரினங்களின் எச்சங்கள் படிந்து சுண்ணாம்புப் பாறை, சாக்கட்டிப் பாறை, இரட்டை அணுப் படிவுப் பாறை ஆகியபாறைகளைப் பெருமள வில் தோற்றுவிக்கின்றன. . பாறைக் குழம்பினின்றும் படிகமாதல். குறிப்பிடத் தக்க ஆழமுடைய புவியோட்டுப் பகுதிகளில் முன்னரே உள்ள பாறைகள் புவியியக்க மாற்றங்