கனிமம் 135
களால் உருகும். இவ்வாறு உருகிய பாறைக் குழம்பு மேற்புறமாக அழுத்தம் குறைந்த பகுதியை நோக்கிச் செல்லும். இக்குழம்பு தரை மட்டத்தை வந்தடைந்து எரிமலை வெடிப்பாகவும் எரிமலைக் குழம்போட்ட மாகவும் நிகழுகிறது. விரைவாகக் குளிரும் இக் குழம்பு படிசுத்தன்மையற்ற அல்லது நுண்பரல் தன்மையுடைய பிதுக்கப் பாறைகளை உண்டாக்கு கிறது. இவற்றில் மிக அரிதாகவே பயனுள்ள சுனிமங் கள் கிடைக்கின்றன. பாறைக்குழம்பு தரைப்பகுதியை வந்தடையாமல் ஆழப்பகுதிகளில் மெதுவாகக் குளிர்ச்சியடைந்தால் சிக்கல்மிகு வேதி வினை களாலும் படிக வளர்ச்சியாலும் கனிமங்கள் நன்றாக வளர்கின்றன. பலவகையான பாறைக்குழம்பில் சிலிக்கான், அலுமினியம். இரும்பு, கால்சியம், மக்னீசியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய தனிமங்களின் ஆக்சைடுகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. இந்த ஆக்சைடுகளில் சிலிக்கா பெரும்பான்மையாக உள்ளது. இவற்றுடன் நீராவி, குளோரின், புளூரின், கார்பன் டைஆக்சைடு, போரான், கந்தகவளிமங்கள் முதலியவை அதிகவெப்ப அழுத்தநிலைகளில் இருக்கும். இவ்வளிமங்களினடக் கத்தால் பாறைக் குழம்பு உயர்ந்த நீர்மத்தன்மையை உடையதாய் ஓடுகிறது. மேலும் இவ்வளிமங்கள் முதலில் படிகமாகும் கனிமங்களின் வேதியலமைப்பில் இடம்பெறுவதில்லையாதலால் வளிமங்கள் திரண்டு இறுதிநிலைகளில் குவிகின்றன. அந்நிலையில் அந் நீர்மம் பாறைக் குழம்பு என்று கூறமுடியாத அளவில் செறிவுமிக்க சூடான கரைசலாகக் காணப்படும். இதனைப் பாறைக்குழம்பு வெப்பநீர் எனலாம். பாறைக் குழம்பிலிருந்து படிகமாகும் கனிமங் களை வரிசைப்படுத்தினால் முதலில் குறைந்த சிலிக்கா அடக்கமுடைய மூலத்தன்மையுடைய கனிமங்கள் உண்டாகும். அவற்றில் ஆவிவின், பிள ஜியோகிளேஸ் மற்றும் சிலிக்கேட்டல்லாத பிற கனிமங்களும் அடங்கும், சிலிக்கேட்டல்லாத கனிமங் களில் இரும்பு, தாமிர, நிக்கல், குரோமிய, பிளாட்டின. டைட்டானிய ஆக்சைடுகளுடன் வைரம் மற்றும் பலவகையான சுனிமச் சல்ஃபைட்டுகளும் ம். அடங்கும். ரண்டாவதாக நடுத்தரச் சிலிக்கா அடக்கமுடைய கனிமங்கள் உண்டாகும். இறுதியாக சிலிக்காமிகு கனிமங்கள் அமிலத்தன்மையுடைய பாறைக் குழம்பிலிருந்து படிகமாகும். இவ்வாறு, தொடர்ச்சியாகப் பாறைக் குழம்பு குளிர்ந்து பலளித மான கனிமங்களையும் பாறைகளையும் உண்டாக்கு மியல்பிற்குப் பாறைக் குழம்பின் குளிர்வின் கூர்தலற வேறுபாடு என்று பெயர். பாறைக் குழம்பு மேல்நோக்கி ஓடிச் செல்வதால் முதலில் உண்டான படிசுங்கள் ஆழத்திலும் பின்னுள்ள நிலைகளில் உண் டான படிகங்கள் தொடர்ச்சியான மேல்நிலைகளி லும் பிரிந்தமைகின்றன. இவ்வாறு பலவகையான கனிமங்களைத் தோற்றுவித்தபின் எஞ்சி நிற்கும் கனிமம் 135 பாறைக் குழம்பு நீர்மம் இன்னும் அதிகவெப்பத் துடனும் வேதியலடக்கம் செறிந்தும் அதிக அழுத்த நிலையில் இருக்கும். ஆனால் நீர்மம் பாறைக் குழம்பைவிட மிகக் குறைந்த பாகுநிலையில் இருக்கும். அதனால் அந்நீர்மம் பாறைக்குழம்புக் கிடங்கிலிருந்து பெக்மடைட் பாறைகளை வெளி யேற்றும். இப்பாறைகளில் பெருமளவில் குவார்ட்ஸ், மைக்ரோகிளைன், மைக்கா கனிமங்கள் காணப்படும். அப்பாறைகளிடையே பெரில் (பெரிலியம்), ஸ்போடு மினைட், (லித்தியம்), யுரானினைட் (யுரேனியம்), உல் ஃபுரமைட் (டங்ஸ்டன்), கொலம்பைட் (நியோ பியம்) போன்ற அரிய தனிமங்களையுடைய மங்கள் காணப்படும். கனி பாறைக் குழம்புக் குளிர்வு கூர்தலற வேறு பாட்டின் இறுதிக் கட்டத்தில் நீர்ம வெப்ப இயக்கம் தோன்றுகிறது. அதனால் உயர்ந்த, இடைத்தர மற் றும் தாழ் வெப்பநிலைகளில் படிகமாகும் நீர்ம வெப்பக் சுனிமங்கள் தோன்றுகின்றன. இவை பாறைக் குழம்புக் கிடங்கிலிருந்து கனிமக் கொடி களாக வெகு தொலைவு ஓடிச்சென்று படிகமாகின் றன. இக்கொடிகளில் வெள்ளீயம், டங்ஸ்டன், மாலி பிடினம், பொன், தாமிரம், துத்தநாகம், பாதரசம் மற்றும் ஆன்ட்டிமனி உலோகக் கனிமங்களுடன் பைரைட், மார்க்சைட், குவார்ட்ஸ், கால்சைட், புளூ ரைட், பேரைட், ஒப்பல் போன்ற கனிமங்களும் காணப்படுகின்றன. தொடுகை உருமாற்றம். மேல்நோக்கிச் செல்லும் பாறைக்குழம்பைச் சுற்றிலுமுள்ள பெரும்பாங்குப் பாறை, பாறைக்குழம்பின் வெப்பத்தாலும் வேதி உருமாற்றமடைகிறது. வினையியக்கத்தாலும் இதற்குத் தொடுகை உருமாற்றம் என்று பெயர். இத னால் பல புதிய கனிமங்கள் உண்டாகின்றன. பாறைக் குழம்பு, சுண்ணப்பாறைகளில் ஊடுருவும் போது பெருமளவான தொடுகை உருமாற்றம் ஏற்படுகிறது. உரு வளாக உருமாற்றம். மலைத்தோற்றவியக்க காலங்களில் ஏற்படும் வெப்ப அழுத்தநிவை மாற்றங் களால் பாறைக் கனிமங்கள் நீருடன் சேர்ந்து மாறி மீண்டும் படிகமாகிப் புதிய கனிமங்களைத் தோற்றுவிக்கின்றன. இவ்வாறு சுண்ணாம்புப்பாறை உருமாற்றமடைந்து கற்பாறையை உண்டாக்குகிறது. மணற்பாறைகள் குவார்ட் ஸைட்டாக மாறுகின்றன. மைக்கா, டால்க், குளோ ரைட், ஹார்ன்பிளண்டுக் கனிமங்களைக் குறிப்பிடத் தக்க அளவில் உண்டாக்கும் பாறைகள் படலப்பாறை களாகின்றன. சலவைக் மாற்றமடைதல். களிமங்கள் தோன்றியபின் அவை வேதியலியக்கங்களினால் தாக்கப்பட்டால் அவை மாற்றமடைகின்றன. இம்மாற்றங்கள் மெது வாகவோ விரைவாகவோ பாறைகளிடையே நடை பெறும்.