பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கனிமம்

136 கனிமம் இயற்கை கனிமங்கள் உசுலியக்கம் (weathering). பாறைகள் யாக உகலியக்கமடைவதால் புதிய தோன்றுகின்றன அல்லது கனிமங்கள் குவிகின்றன. கார்பன் டை ஆக்சைடு கரைந்த நில நீர்ச் சுழற்சி யால் தாமிர, துத்தநாக, ஈயகார்பனேட்டுப் படிவங் கள் தோன்றுகின்றன. மாறி, மாறிவரும் மாரிக்காலங் களினாலும், கோடைக் காலங்களினாலும், இரவு பகலாலும் தனித்தன்மையான ஒருவித பாறையரிப்பு நிகழ்கிறது. இதனால்வெப்பமண்டல நிலப்பகுதிகளில் உள்ள பாறைகள் சிதிலமடைந்து இரும்பு அலுமினிய மாங்கனீஸ் உலோகக் கனிமப்படிவங்களை உண்டாக்கு கின்றன. இப்பகுதிகளில் இரும்பு அலுமினிய ஆக்சைடு கள் தவிரப் பாறைகளில் உள்ள ஏனைய எல்லாக் கனிமங்களும் நீரில் கரைக்கப்படுகின்றன. இந்தியா விலுள்ள இலேட்டரைட் பாறைகள் இரும்புஉலோகக் கனிமப் படிவங்களாகவும், பாக்சைட்டுப் படிவங்கள் அலுமினிய உலோகக் கனிமப் படிவங்களும் தோன்றி யுள்ளன. இவ்வாறு மாங்கனீஸ் ஆக்சைடுபடிங்க ளாகவும் தோன்றியுள்ளன. கனிமக் கொடிகளிலுள்ள அருகியதாமிர உலோகக் கனிமங்கள் முதலில்சிதைந்து கரைக்கப்பட்டுப் பின் வேறோரிடத்தில் இரண்டாம் நிலைத் தாமிர உலோகக் கனிமங்களாக வீழ்படி வுற்றுச் செறிந்து கனிமப்படிவங்களாக மாறுகின்றன. வீழ்படியப்பட்ட கனிமங்கள் நிலநீர் மட்ட வேறு றுபாட் டாலும் மேலுள்ள பாறையரிப்பாலும் காலவட்டத் தில் பெரிய படிகங்களைத் தோற்றுவிக்கின்றன. வினை உகலியக்கம் பாறைகளைச் சிதைக்கும் யாகும். இது இயற்பிய, வேதிய உகலியக்கம் என இருவகைப்படும். முதலில் கூறப்பட்டது வெப்ப நிலை மாறுபாட்டால் உண்டாகும், மாறி, மாறி ஏற்படும் விரிவடைதலாலும் சுருக்கத்தாலும் உண்டாகிறது. பிளவுகளிடையே தேங்கியிருக்கும் நீர் உறைவதால் பிளவுகள் விரிவடைகின்றன. காற்று, மழை, பனியாறு, ஆறு ஆகியவை எடுத்துச் செல்லும் பொருள்களால் ஏற்படும் பாறை உராய்வினாலும் பாறைகள் சிதிலம் அடைகின்றன. குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பொருள்களின் வடிவம் மாறுதலடை வதாலும் பாறைகள் சிதிலமடைகின்றன. ஒரு கனிமம் வேதி முறையில் மாற்றம் அடைந்தாலும் மாற்றமடைந்த கனிமம் முந்தைய கனிமத்தின் உருவைப் பெற்றிருக்கும். இவ்வாறாகக் கனசதுரப் பைரைட் கனிமம் (Fes,) நுண்பரல்தன்மையுள்ள கோயித்ததைட்கனிமமாக மாறும்போது பைரைட்டின் கனசதுர வடிவைப் பெறுகிறது. ஒருபடிகவுருவுடைய கனிமம் பிறிதொரு படிகவுருவுடைய கனிமமாகவும் மாறலாம். இவ்வாறு புரூக்கைட்டுக் கனிமத்திற்குப் பின் ரூட்டைல் கனிமம் தோன்றுகிறது. இவை டைட்டேனிய ஆக்சைடுகளின் இணையுருவங்கள் எனப்படும். உருமாற்றத்திரிநிலை. இவ்வியக்கத்தாலும் புதிய கனிமங்கள் பாறைகளிடையே தோன்றுகின்றன. கலீனாவைத் தோற்றுவித்த நீர்மவெப்பக் கனிமக் கொடி அதன் சுண்ணாம்புப் பாறைச் சுவர்களையும் மாற்றமடையச் செய்திருக்கும். அதேசமயம் மாற்ற மடைந்த பாறை முந்தைய சுண்ணாம்புப்பாறையின் அமைப்பை முழுஅளவில் கொண்டிருக்கும். பெக் மடைட்டுப் பாறைகளிடையே நீர்த்துளிமாற்றவியக் கப் நடைபெறுகிறது. இதனால் முதலில் தோன்றிய கனிமங்கள் பின்னர்த் தோன்றிய பெக்மடைட் நீர்மங்களால் மாற்றம் அடைந்து புதிய கனிமங்கள் உண்டாகும். பிரிவுகள். கனிமங்கள் பலவகையான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கனிமங்கள் அவற்றின் வேதிய லமைப்பு இயல்புகள், தொழிற்பயன், கிடைக்கும் விதம், தோற்றம் ஆகிய பல காரணிகளைப் பொறுத்துப்பலவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன, முத னிலைக் கனிமங்கள் பாறைக் குழம்புப் படிகமாதலால் உண்டானவையாகும். அவற்றுடன் பெக்மடைட் மற்றும் நீர்மவெப்பக் கனிமப் படிவங்களும் அடங்கும். பாறைக் கனிமங்கள் அனற்பாறை, படிவுப் பாறை மற்றும் உருமாற்றப் பாறைகளில் காணப்படும் பெரு மளவான கனிமங்களாகும். கிரானைட் பாறையில் குவார்ட்ஸ், ஃபெல்ஸ்பார் ஆகிய கனிமங்கள் பெரு மளவான கனிமங்களாக உள்ளன். கிரானைட்டில் மிகச் சிறிய அளவில் கிடைக்கும் பைரைட், சிர்கான், அபடைட கனிமங்கள் அருக கிய கனிமங்களாகும். மேலும் வேதியலமைப்பைப் பொறுத்துக் கார்ப னேட்டுகள், சல்ஃபேட்டுகள், ஆக்சைடுகள் என்று கனிமங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. ஒத்த படிக வுருவுடைய திண்மக் கரைசல் தொடர்களாக ஆலிவின், கார்வட், பிளஜியோகிளேஸ் போன்ற கனிமங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. நெருங்கிய இயற்பிய, வேதிப் பண்புகளைக் கொன்டிருக்கும் சுனிமங்கள் ஒத்த படிகவுருவைக் கொண்டிராவிட்டாலும் அவை கனிமக் குடும்பமாகச் சேர்க்கப்படுகின்றன. பொருளாதார நோக்கில் பயன் தரும் கனிமங்களைக் கனிமச் செல்வங்களாகக் குறிக் கின்றனர். இவற்றில் உலோகக் கனிமங்களும், அலோகக் கனிமங்களும் அடங்கும். இவ்வாறு பாக் சைட்டுப்படிவம், சுந்தகப் படிலம், மணிக்கற்கள் ஆகி யவை பயன்படு கனிமங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. களிக் கனிமங்களிடையே பொதுவான இயற்பிய. வேதிப்பண்புகள் காணப்படுவதால் அவை தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. களிக்கனிமங்கள் நுண் பரல் தன்மையுடையவை; நனைந்தால் பிசுபிசுப்புடை யவை: ஆனால் உலர்ந்த பின்னும், சுட்டபின்னும் மிகுந்த கடினத்தன்மையைப் பெறுகின்றன. பெரும்பாலும் நீர் சேர்ந்த அலுமினிய சிலிக்கேட்டு களால் ஆனவை. இயற்பிய வேதிச் சிதிலமாதலால் மாற்றமடையாத கனிமங்கள் நிலையான கனிமங்கள் எனப்படுகின்றன. இக்கனிமங்கள் நீரில் சுரையா தன; கடினத்தன்மை மிக்கவை. இத்தகைய நிலை அவை