பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனிமவியல்‌ 137

கனிமவியல் 137 யான கனிமங்களில் கனமான கனிமங்கள் கொழிவுப் படிவுகளாக ஆற்று வண்டலிலும், கடற்கரை மணலி லும், காற்றடி மணல் மேடுகளிலும் குவிகின்றன. அவை உயர்ந்த அடர்த்தி கொண்டவை. பெரும் பாலான இக்கனிமங்கள் எளிதில் சிதிலமடையாதன. இவற்றில் சில, தாம் தோன்றிய பாறைகளுக்கருகி லேயே குவிந்து செறிவடைகின்றன. வேறுசில தாம் தோன்றியவிடத்திலிருந்து வெகுதொலைவிற்கப்பால் டுத்துச் செல்லப்பட்டுக் குவிகின்றன. ஒரேவித இயக்கத்தாலுண்டான கனிமங்கள் தம்மிடையே தொடர்ச்சியான வேறுபாட்டைக் கொண்டிருக்கும். முதலில் தோன்றிய தோன்றிய கனிமங்கள். பின்னர் படிப்படியாகத் கனிமங்கள் என்று காலவேறுபாட்டாலும், வேதிய லடக்க வேறுபாட்டாலும், பாறை அமைப்பு வேறு பாட்டாலும் பலவேறுபட்ட தொடர்நிலைகளை யுடைய சனிமங்களை வகைப்படுத்தலாம். ஒரே பாறைக் குழம்பிலிருந்து பலவேறு காலக் கட்டத்தில் தோன்றிய கனிமத்தொகுதிகள் தம் மிடையே இவ்வாறு தொடர்ச்சியான வேறுபாடு களைக் கொண்டிருக்கும். இப்பாறைத் தொடர் களைப் பாறைத்தொகுதி என்றும் இப்பாறைகளில் உடனமையும் கனிமங்களைக் கனிமத்தொகுதி என்றும் கூறலாம். இப்பாறைகளில் காணப்படும் கனிமங்கள் கனிமத் தோற்றத்தையும், பாறைத் தோற்றநிலை களையும் எடுத்துக்காட்டும் கனிமக் காட்டிகளாகும். பாறையில் உடனமைந்த இக்கனிமங்களை ஆராய்ந்து பாறைகளின் தோற்ற வெப்ப அழுத்த நிலைகளைக் கண்டுபிடிக்கலாம். மே.ரா.பாலசுப்ரமணியன் ரா. ராமசாமி நூலோதி. W.E. Ford, Dand's Text Book of Mineralogy. Fourth Edition, Wiley Eastern Ltd., New Delhi, 1985; G.S. Manku, Inorganic Chemistry, Tata McGraw-Hill, New Delhi, 1984. கனிமவியல் கனிமத் இவ்வியல் கனிமம் உண்டாகும் விதம், தின் இயல்புகளைப் பற்றிய விளக்கம், கனிமத்தை வகைப்படுத்தல் ஆகியவற்றைச் சார்ந்தது. எனவே கனிமவியலைப் படிகவேதியல், கனிமக்கூட்டவியல், கனிம விளக்கவியல், கனிம வகையியல் என நான்கு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். படிக வேதியியல் கனிமங்களின் வேதியலமைப்பு, அணுவமைப்பு ஆகிய வற்றை விளக்கும். கனிமக்கூட்டவியல் கனிமங்கள் கிடைக்கும் விதத்தையும் அதனுடன் அமையும் கனிமங்களின் தன்மையையும் விளக்கும். கனிமவியக்க வியல் கனிமங்களின் வேதியியல் மற்றும் புறவியல்பு களைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டு அவற்றை இனம் காணும் விதத்தைக் குறிப்பிடும். கனிமங்கள் அறிவியல் முறைப்படி வகைப்படுத்தப்பட்டுள்ள முறையையும், அவற்றை அவற்றின் இனத்துடன் தொகுப்பதையும். கனிமங்கள் பெயர் பெற் றுள்ளமையையும், அவற்றிற்குப் பெயரிடும் முறை களையும் சுனிம வகையியல் விளக்கும். படிகவேதியியல், கனிம வேதியியல் கனிமவியலில் மிகவும் இன்றியமையாத பகுதியாகும். இதில் படிவுரு. வஇயல், கனிமப் பொருளின் வேதியியல், புவிவேதி யியல், வெப்பவியக்கவியல் ஆகியவை சாரும் (படம்-1). 1ஆக ஒரு கனிமம் குறிப்பிட்ட வேதியலமைப்புடனும். அதற்குரிய படிகவுருவுடனும் (அணுவமைப்பு) அமைந் திருக்கும் போது, அக்கனிமம் ஒரு குறிப்பிட்ட கனிம வகையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது. அக் கனிமத்தின் ஏனைய கனிமவியல்புகள் அனைத்தும், இவ்விருபண்புகளின் அடிப்படையில் வந்தமையால் இவ்விரு பண்புகளும் அக்கனிமத்தை இனம் சுட்டிக் காட்டப் போதுமானவையாக உள்ளன. ஒரு திண்மப் பொருள் ஓரச்சில் சுழலும்போது மீண்டும். மீண்டும் முதலில் தோன்றிய முகங்கள் ஒழுங்கு முறையில் தோன்றியமைந்திருந்தால் அப்பொருள் படிகத் தன்மையுடையதாகக் கருதப்படுகிறது. படிகத் தன்மையுடைய பொருள்கள் ஓரச்சு, முச்சமச் செங்குத்தச்சு, இருசமச்செங்குத்தச்சு, அறுகோணச் செங்குத்தச்சு. ஓரச்சுச் சாய்வு, மூவச்சுச் சாய்வு என ஆறு வகையான படிகவகைகளில் அடங்கும். படிகங் களின் மிகச் சிறிய பகுதிகளான ஒவ்வொரு கட்ட மைவு நுண்ணறையும் ஏதேனும் ஒரு படிகவகையில் அடங்கும். ஒவ்வொரு நுண்ணறையும் முழு எண்ணிக்கையுள்ள குறிப்பிட்ட கனிம அணுக்களைக் கொண்டிருக்கும். இந்த நுண்ணறையமைப்பைக் கொண்டு ஒரு கனிமத்தை மற்றொரு கனிமத்தி லிருந்து ணம் காணலாம். படிகத்தன்மையுள்ள ஒவ்வொரு பொருளும் அதன் வேதியியல் வாய்பாட்டைப் பொறுத்துக் குறிப் பிட்ட கனிமங்களின் முழு எண்ணிக்கையுள்ள அணுத் திரட்சிகளை அதன் குறிப்பிட்ட கட்டமைப்பில் கொண்டிருக்கும். எனவே ஒரு பொருளிலுள்ள அனைத்து நுண்ணறைகளும் ஒரேவகையான அணு வமைப்பைத் தம் கட்டமைப்பில் கொண்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட கனிமத்தின் வாய்பாடு (2 MgOSiO ) என்றிருந்தால், அதன் வாய்பாடு அடைப்புக் குறியில் ஒரே வகையான தனிம அணுக்கள் ஒரே வீதத்தில் அமைந்திருக்கும் என்பதைக் காட்டும். பெரியஎழுத்து. தனிம அணுக்களையும், சிறிய எழுத்து அதன் நுண்ணறையில் அந்த அணு எத்தனை முறை உள்ளது என்பதையும் காட்டும். ஒரு வாய்பாட்டில் சிறிய எழுத்துகளின் எண்கள் தம்மிடையே ஒரு பொதுக்