கனிம வேதியியல் 139
கனிம வேதியியல் 139 பையும், கனிமப் படிவைச் சுற்றியுள்ள புவியியல் அமைப்பையும், படிவு முறையையும். படிவுத் தளத்தையும், மடிப்பு மற்றும் பிளவுத் தளங்களை ஆராய்தலையும் உள்ளடக்கும். பாறைக் குழம்பில் தொடரான கனிமங்கள் படிகமாகி, கனிமக் கொடி களில் தொடரான கனிமங்கள் அமைதல் இவ்வியல் விளக்கும். பற்றி கனிமக் கூட்டங்களில் (உடனமைவு கனிமங்கள்) காணப்படும் பழைய மற்றும் புதிய கனிமங்களிடையே காணப்படும் ஒப்பிடு காலஇடைவெளியைக் கண்டு பிடிப்பது கடினம். சில சமயங்களில் அந்தக் கால இடைவெளிகள் தக்க அறிவியல் முறைகளின் மூலம் வரையறுக்கப்படுகின்றன. பெரும்பாலும் ஈய ஐசோ டோப்புகள் அல்லது பிற ஐசோடோப்புகள் மூலம் வயதைக் கணக்கிடுகின்றனர். களை சிறந்த பயிற்சியும், அறிவும் கொண்டு கனிமங் னம் காணலாம். கனிமங்களின் நிறம். உருவம், கடினத்தன்மை, அடர்த்தி ஆகியவற்றின் வேறுபாட்டைக் கொண்டு ஒரு கனிமம் மற்றொரு கனிமத்திலிருந்து இனம் காணப்படும். பெரும்பாலான கனிமங்களின் இயல்புகள் அளந்தறியப்பட்டு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. பெயர் தெரியாத கனிமத்தின் இயல்புகளை இந்த அட்டவணையுடன் ஒப்பிட்டு இனம் காணலாம். ஒளிவியல்பு, எக்ஸ்- கதிர் சிதறல் நுண்கருவிகளைக் கொண்டு செய்யும் வேதிப்பகுப்பு முறை ஆகியவற்றால் கனிமங்களின் இயல்புகள் அறியப்படுகின்றன. சிறந்த நுட்பமான ஆய்வுக் கருவிகள் நடைமுறையில் உள்ளமையால் பண்டைய முறைகளான ஊதுகுழல் சுவாலையில் கனிம உருக்கம், கனிம ஆய்வு ஆகியவை தற்காலத் தில் பெருமளவு பயன்படுவதில்லை. ஏறத்தாழ மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கனிமங் கள் இயற்கையில் காணப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் அறுபதுக்கும் மேற்பட்ட புதிய கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. வேதிப் பகுப்பு, படிகக்கட்டமைவு, கனிம நுண்ணறையணுவடக்கம், அதன் படிக இடைவெளிக் குழு, படிகஉருவவியல், எக்ஸ்-கதிர் சிதறல், ஒளிவிளைவுப் பண்புகள், படிகப் புறவியல்புகள், உடனமையும் கனிமக் கூட்டங்களின் இயல்புகள் ஆகியவற்றுடன் புதிய கனிமம் விவரிக்கப் பட வேண்டும். இக்குறிப்புகள் மூலம் கனிமத்தை வகைப்படுத்தலாம். புதிய இரா. இராமசாமி நூலோதி. W.E. Ford, Dana's Text Book of Mineralogy, fourth Edition, Wiley Eastern Ltd.,. New Delhi, 1985; L.G. Berry, & B. Mason, Mineralogy, Second Edition, CBS Publishers & Distributers, New Delhi. 1985. கனிம வேதியியல் தனிம வரிசை அட்டவணையில் காணப்படும் பல் வேறு தனிமங்களில் கார்பன் தவிர ஏனைய தனிமங் களின் பண்புகள், வேதி வினைகள், அமைப்பு ஆகிய வற்றைப் பற்றி விளக்கும் வேதியியல் பிரிவு கனிம வேதியியல் (inorganic chemistry) ஆகும். ஆயினும் இப்பிரிவில் கார்பனின் பண்புகள், அதன் சேர்மங்கள் பற்றியும் (கார்பன் மோனாக்சைடு, கார்பன் டை ஆக்சைடு. கார்பனேட்டுகள், கார்பைடுகள்) விளக்கப்படுகிறது. கார்பனையும் அதன் வழிச்சேர்மங் களையும் விளக்கும் வேறு பிரிவிற்குக் கரிம வேதி யியல் (organic chemistry) என்று பெயர். கனிம வேதியியலை நுட்பமாக ஓர் எல்லைக்குள் வரை யறை செய்தல் யலாது. கனிம வேதியியல் பல உட் பிரிவுகளைக் கொண்டது. தனிமங்களின் தொகுப்பு. கண்டறியப்பட்ட தனி மங்கள் அனைத்தையும் முறையாகத் தொகுக்கும் பணி, வேதியியலின் தொடக்க காலத்திலேயே மேற் கொள்ளப்பட்டது. 1829ஆம் ஆண்டு டொபரீனர் முதலாக, 1864இல் நியூலாண்டின் எண்மவிதி (Law of octaves) வழியாசு. 1869இல் மெண்டலிவ் லோதர் மேயர் மூலமாகப் பல்வேறு தனிம வரிசை அட்டவணைகள் (periodic tables) தோன்றலாயின. ஆயினும் 1869இல் அணு எடையை அடிப்படையாகக் கொண்டு மெண்டலீவினால் உருவாக்கப்பட்ட தனிம வரிசை அட்டவணையே கனிம வேதியியல் துறை யின் தனிமங்களை வகையீடு செய்வதில் குறிப்பிடத் தக்கதாக அமைந்தது. மெண்டலீவ் அணு எண் கண்டறியப்பட்டவுடன், மெண்ட லீவ் தனிம வரிசை அட்டவணையில் பொருத்தமான திருத்தங்கள் செய்யப்பட்டு, திருத்திய தனிம வரிசை அட்டவணை பெறப்பட்டது. அடுத்து, தனிமங்களின் எலெக்ட்ரான் அமைப்புகளின் அடிப் படையில் நீள்வடிவத் தனிம வரிசை அட்டவனை long form of periodic table) தொகுக்கப்பட்டது. இவ்வாறு கனிம வேதியியலில் உள்ள தனிமங்கள் ஆராயப்படுவதற்கு எளிதான வகையில் முறையாக வகைப்படுத்தப்பட்டன. இதன் விளைவாகத்தான் கார உலோகத்தனிமங்கள் என்றும், காரமண் உலோகத் தனிமங்கள் என்றும், ஹாலோஜன் குடும்பம் என்றும், மந்த வளிமங்கள் என்றும், லாந்தனைடு, ஆக்ட்டி னைடு வரிசை என்றும் தனிமங்கள் பிரித்தறியப்பட் டுள்ளன. S- தொகுதித் தனிமங்கள். கார உலோகங்களான லித்தியம், சோடியம், பொட்டாசியம், ருபீடியம், சீசியம், ஃபிரான்சியம் ஆகியவையும், காரமண் லோகங்களான பெரில்லியம், மக்னீசியம், கால்சியம், ஸ்ட்ரான்சியம், பேரியம், ரேடியம் ஆகியவையும் இணைந்து -தொகுதித் தனிமங்களாக வகைப்