பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனிம வேதியியல்‌ 143

களில் ஒரே நேரத்தில் உயர் வெப்பநிலையையும், உயர் அழுத்தத்தையும் பயன்படுத்தலாம். தற்போதுள்ள கருவிகளைப் பயன்படுத்தி ஏறத் தாழ 2500°C வெப்பநிலையையும் 10'mPa அழுத்தத் தையும் ஒரே நேரத்தில் வினையை நிகழ்த்தப் பயன் படுத்த இயலும். இச்சூழ்நிலையில் கார்பனின் சாதாரண வடிவமான கிராஃபைட்டை வைரமாக மாற்ற இயலும். இவ்வியல்பற்ற சூழ்நிலையைப் பயன்படுத்தி ஆர்பிட்டால்களின் வடிவை மாற்ற இயலும். இதன் விளைவாகப் புதிய பொருள்கள் பலவற்றை உருவாக்கலாம். காட்டாக, இத்தகைய சூழ்நிலையில் நீர்ம ஹைட்ரஜனை உலோக வடிவாக மாற்றலாம். குறை மின்கடத்திகள், போட்டோ வோல்ட்டா அமைப்புகள், லேசர் ஃபோட்டோ டையோடுகள் போன்றவற்றில் சீர்மையான படிகங்கள் உள்ளன. படிகமற்ற பொருள்களும் கண்ணாடி போன்ற பொருள்களும் இவ்வகைக் கருவிகளில் பயன்படுத்தப் படலாம் எனத் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. படிக உருவற்ற சிலிகன் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் அமைப்புகளில் பெரிதும் பயன்படும். படிக உருவற்ற சிலிகனும் ஜெர்மானியமும் குறை மின் கடத்திகளில் பயன்படுகின்றன. படிக வ மற்ற மாலிப்டினம் சல்ஃபைடு. வனேடியம் சல்ஃபைடு ஆகியன படிகப் பொருளைவிடப் பெருமளவில் லித்தியம் அயனிகளைச் சேமிப்பன. இப்பண்பின் அடிப்படையில் சிறந்த நீரற்ற லித்தியம் சேமிப்புக் கலன்களைத் தயாரிக்கலாம். படிக வற்றவை ஓரளவே ஆராயப்பட்டுள்ளன. எனவே படிக உருவற்ற திண்மங்கள் அறிவியல், தொழிலியல் ஆராய்ச்சி ஆர்வத்தைத் தூண்டுவனவாக அமைந் துள்ளன. அடுக்கு உரு அமைப்புடைய பல பொருள்கள் கண்ட. றியப்பட்டு அவை பல புதுமையான பண்பு களைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. கிரா ஃபைட் இடைச்செருகல் சேர்மங்களில் (graphite intercalation) (எடுத்துக்காட்டாக, கிராஃபைட்டில் உள்ள கார்பன் அணுக்களுக்கு இடையே ஹாலோஜன் தனிம அணுக்களை இடைச்செருகும்போது) மின் கடத்துந் திறன் மிகவும் அதிகரிக்கிறது. இவ்வகைச் சேர்மங்களின் மின்கடத்துந்திறன் தாமிரத்தின் மின் கடத்துந் திறனுடன் ஒப்பிடத்தக்கதாக அமைகிறது. கிராஃபைட்டுடன் இடைநிலைத் தனிமங்களை இடைச்செருகிப் பெறப்பட்ட சேர்மங்கள் தேர்ந் தெடுத்த வகைக் காரணிகளாகக் (selective agents ) கரிமத் தொகுப்பு வினைகளில் பயன்படுகின்றன. பல் - அடுக்குச் சேர்மங்களில் அயனிகளை அடுக்கடுக் காக இடைச்செருகலாம். இவ்வயனிகள் எளிதில் இயங்கவும் இயலும். இதனால் திண்ம மின்பகுளி களைத் (solid electrolyte) தயாரிக்கலாம். இவற்றைப் கனிம வேதியியல் 143 க பயன்படுத்தி எடை குறைவான மின் வலிமைமிக்க மின் சேமிப்புக் கலன்களை உருவாக்கலாம். மற்றொரு வகை மின்னணுக் கடத்திகளில் உலோக அணுக்கள் சங்கிலித் தொடர்களாகவும், கொத்துக்களாகவும் உள்ள அமைப்பு இடம் பெறு கிறது. நேரான சங்கிலித் தொடர் அமைப்பைப் பெற்ற இடைநிலைத் தனிம உலோகங்கள் சிறந்த ஒற்றைப் - பரிமாண (one-dimensional) எலெக்ட்ரான் கடத்திகள் ஆகும். உலோகக் கொத்துச் சேர்மங்கள் பல பண்புகளைக் கொண்டுள்ளன. ஏறத்தாழ 28 பிளாட்டினம் அணுக்களையும் 44 கார்போனைல் ஈந்தணைவிகளையும் கொண்டுள்ள கரிம உலோகச் சேர்மங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் உலோக அணுக்கள் ஒன்றுடன் ஒன்று நேராக பிணைக்கப்பட்டுத் திண்ம உலோக வினைவேக மாற்றிகளின் பண்புகளைக் கொண்டுள்ளன. இக் கொத்துச் சேர்மங்கள் உயர் வெப்பநிலையில் மிகு மின்கடத்துந் திறன் பெற்றவை. எனவே இவ்வகை புதிய உயர் ஆற்றல் வாய்ந்த மின்கடத்திகளைத் தயாரிக்கும் ஆராய்ச்சியைத் தூண்டுகிறது. உலோகக் கொத்துச் சேர்மங்கள் வேதியியலில் புதிய வினை யூக்கிகளைத் தோற்றுவிப்பனவாக அமைகின்றன. புவி வேதியியல் சார்ந்த சேர்மங்கள். உயர் வெப்ப நிலையிலும், உயர் அழுத்தத்திலும் நடைபெறும் பல கனிம வேதிவினைகள் புவிவேதியியல் ஆய்வாளர் களுக்கு மிகவும் பயன் தருபவை. மிகப் பழைய சுனிம வேதிவினைக் குறிப்புகள் தாதுக்களின் ஆய்வைச் சார்ந்தே அமைந்திருந்தன. தாதுக்களைத் தொகுத்தல் அல்லது தாதுக்களைப் போன்று செயற் கையில் உருவாக்குதல் புவிவேதி வல்லுநர்களுக்குப் பல செய்திகளை அறியப் பயன்படும். கனிமங்கள் எவ்வாறு தோன்றின என்பதைக் குறிப்பிடுவதற்காக மட்டும் அல்லாமல், இவ்வினைகள் வைரம், பவளம், குவார்ட்ஸ், குருந்தம் (corundum) போன்ற முக்கியத் துவம் வாய்ந்த செயற்கைப் பொருள்களைத் தயாரிக்கவும் பயன்படுகின்றன. இவற்றின் தயாரிப் பில் உயர் வெப்பநிலையும், உயர் அழுத்தமுமே பெரிதும் பயன்படுகின்றன. இப்பிரிவு, வேதியியல் மூலமாகப் புவிவேதி நிகழ்ச்சிகளை அறிய உதவுகிறது. அணுக்கரு வேதியியலும் ஆற்றலும். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்திலிருந்து அணுக் கரு ஆற்றல் கனிம வேதியியலில் முக்கியத்துவம் பெற்றது. யுரேனிய வரிசைத் தனிமங்களின் சேர்மக் கண்டுபிடிப்பு, கனிம வேதியியல் துறையில் முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். 55 வரிசைத் தனிமங்களான ஆக்ட்டினைடு வரிசைத் தனிமங்களைக் கண்டுபிடித்த வுடன், வேதியியலில் கண்டுபிடிப்புகள் மிகப் பெருமள வில் விரிவடைந்துள்ளன என்றாலும், மேலும் கண்டறியப்பட வேண்டியவை பல இருந்தன என்பதை அது விளக்குவதாக அமைந்தது. கரைப்