144 கனிம வேதியியல்
144 கனிம வேதியியல் பான்களைப் பயன்படுத்திப் பிரித்தெடுத்தலும் (solvent extraction) அயனிப் பரிமாற்ற முறை களும் ஆக்ட்டினைகெளைப் பிரித்தெடுக்கப் பயன் படுத்தப்பட்டதோடு அல்லாமல் கனிம வேதியியலின் பிற பிரிவுகளுக்கும் பரவலாயின. அணுக்கரு ஆய்வு பகுப்பாய்விற்குப் பெரிதும்பயனுள்ளதாக அமைந்தது. காட்டாக, சிர்கோனியம், ஹாஃப்னியம் போன்றவற் றைப் பிரிக்க அணுக்கரு வேதியியல் பெரிதும் பயன் படுகிறது. ஆய்வின் பயனாகப் பாதுகாப்பான முறையில் அணுக்கரு வினைகளை நடத்தும் முறைகள் தோன்றலாயின. அணு வேதியலால் பயன்கள் பெரு கின எனினும், அணுக்கரு வினைகளின் விளைவால் தோன்றும் கழிவுகளை எவ்வாறு அழிப்பது என்பது கனிம வேதியியலார்களின் தற்காலப் பிரச்சினையாக உள்ளது. கரிம வேதியியலின் பயன்கள். 1900 ஆம் ஆண்டிற் குப் பின் கரிம வேதியியலில் ஏற்பட்ட பல முக்கிய மாற்றங்கள் கனிம காரணிகளைப் பயன்படுத்திய தால் தோன்றியவை ஆகும். மக்னீசியம் உலோகத்தை அடிப்படையாகக்கொண்டு தோன்றியதே கிரிக்னார்டு வினைப்பொருள்கள் தொகுப்பாகும். உலோகக் கார் போனைல் சுண்டுபிடிக்கப்பட்டதாலேயே அசெட்டி லின் வேதியியல் விரிவடைந்தது. ஹைட்ரோபோரான் ஏற்ற வினையின் மூலமாகவே கரிம போரான் சேர்மங்கள் கண்டறியப்பட்டன. ஹைட்ரோபோரான் ஏற்ற வினைகள் மூலமாக, சீர்மையற்ற தொகுப்பு களையும் (asymmetric synthesis) மாற்றியங்களையும் (isomerisation) எளிதில் உருவாக்கமுடியும். ஹைட் ரோபோரான் ஏற்ற வினை கரிம வேதியியல்துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்குப் பெரிதும் உதவியது. ஹைட்ரஜன் நீக்க வினையில் செலினியமும், தேர்ந் தெடுத்து ஆக்சிஜனேற்றம் செய்யும் வினையில் காரீய அசெட்டேட்டும் தாலியச் சேர்மங்களும், அல்க்கைல் அல்லது அசைல் ஏற்றத்தில் நீரற்ற அலுமினியம் குளோரைடும், ஒடுக்கவினையில் லித்தியம் அலு மினியம் ஹைட்ரைடும் கரிம வேதியியலில் பெரிதும் பயன்படும் கனிமச் சேர்மங்களகும். கரிம வினை விளைவேகமும் வினை வழிமுறைகளும். வினைகள் மூலக்கூறின் அடிப்படை அமைப்புச்சிதறாம லேயே நிகழ்கின்றன. ஆனால் கனிம வளிமநிலை வினைகளில் மூலக்கூறுகள் முற்றிலும் சிதைவடைந்து பின்பு ஒன்றுகூடிப் புதிய விளைபொருள்களைத் தரு கின்றன. இவ்வாறு அடிப்படையில் கரிம களைவிடக் கனிம வினைகளே மிகவும் சிக்கலானவை யாக உள்ளன. டை நிலைத் தனிம அயனிகளின் ஆக்சிஜனேற்ற ஒடுக்க வினைகளில் உள்ள எலெக்ட் ரான் இடப் பெயர்ச்சியும், அவற்றில் சேர்மங்களின் கரைசல் நிலையும் ஆய்வாளர்களுக்கு ஆர்வமூட்டும் பகுதிகள் ஆகும். மிகை மின்னேற்றம் பெற்றுள்ள அயனிகள் நீராற் பகுக்கப்படும் வினைகள், வினை வழிமுறையை அறியும் வளை கையில் முக்கியத்துவம் வாய்ந்தவை. உயிர் கனிம வேதியியல். உயிரியல் துறையில் கரிம வேதிச் சேர்மங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளமை போல், கனிமச் சேர்மங்களும் முக்கியத்துவம் பெற் றுள்ளன. உயிர்வேதித் துறையின் தற்கால ஆய்வுப் பகுதிகள் கனிம வேதியியலின் ஒரு பகுதியாகவே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு உயிர் வேதி வினைகளில் உலோக அயனிகள் பங்கேற்பது சாதாரண நிகழ்ச்சியாகும். சில மூலக்கூறுகளே தேவைப்படும் அடிப்படை ஊட்டப் பொருள்களி லிருந்து (essential nutrients) மூச்சுவிடுதல், ஒளிச் சேர்க்கை போன்ற பல்வேறு நிலைவரை கனிமச் சேர்மங்கள் உயிர் வேதியியலில் பங்கேற்கின்றன. உலோக அயனிகளைப் பகுதி உறுப்பாகக் கொண் டுள்ள நொதிகள், சவ்வுகளுக்கு இடையில் உலோக அயனிகளின் பரிமாற்றம் போன்றவை உயிர்வேதி யியலின் பிரிக்க இயலாப் பகுதிகளாக அமைகின்றன பிளாட்டினம் மற்றும்பல உலோகங்களின் அணைவுச் சேர்மங்கள் புற்றுநோய்க்கு மருந்தாகப் பயன்படும் வகையில் ஆராயப்படுகின்றன. மன நோய்களுக்கு லித்தியம் அயனி பயன்படும் வழிமுறை மேலும் ஆராயப்படவேண்டிய ஒன்றாகும். மூலக்கூறுகளின் மாதிரிகள் பல தயார் செய்யப் பட்டு ஆராயப்படுவது உயிர் கனிம வேதியியலின் ஒரு முக்கிய பகுதியாகும். மூச்சு நிறமிகளில் (respiratory pigments) உள்ள புரதமில்லாப் பகுதிகள் (prosthetic group), பெர் ஆக்சிடேஸ் போன்ற ஆக்சிஜ னேற்ற நொதிகள், எலெக்ட்ரான் மாற்றப் புரதங்கள், சைட்டோகுரோம். ஃபெரிடாக்சின், பிளாஸ்டோ சயனின், நைட்ரோஜனேஸ் போன்ற நைட்ரஜனை நிலைப்படுத்தும் நொதிகள் போன்றவை உயிர் கனிம வல்லுநர்களால் ஆராயப்படும் முக்கிய சேர்மங்கள் ஆகும். நிறை நிரல் வரைவிசுளைப் பயன்படுத்தி உயிர் கனிமச் சேர்மங்கள் பெரிதும் ஆராயப்படுகின்றன. கனிம வேதித் தொழில் நுட்பம். வேதியியல் துறை யில் கனிமச் சேர்மங்களைத் தொழில் முறையில் தயாரிப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. சல்ப்யூரிக் அமிலம், அம்மோனியா, பாஸ்ஃபோரிக் அமிலம், குளோரின் போன்றவை மிகவும் இன்றியமையாத் தொழில் துறைப் பொருள்கள் ஆகும். சிமெண்ட் தயாரித்தல், கண்ணாடி தயாரித்தல், மண்பாண்டம் தயாரித்தல், உரங்கள் தயாரித்தல், உலோகங்களைப் பிரித்து எடுத்தல் போன்றவை கனிம வினைகள் கேற்கும் தொழில் துறைகளாகும். பங் பி.இ.எம்.லியாகத்அலிகான் நூலோதி. F.A. Cotton and G. Wilkinson, Advanced Inorganic chemistry, Sixth Edition, John- wiley and Sons, Inc., New York, 1984.