கனிவிதைப் பரவுதல் 145
கனிவிதைப் பரவுதல் 145 கனியியல் பழப்பயிர்களின் மேம்பாடு, உற்பத்தி, பயன் போன்ற வற்றை விளக்கும் அறிவியலுக்குக் கனியியல் என்று பெயர். கனிப் பயிர்களை அவற்றின் அமைப்பு, தோற்றம் ஆகியவற்றைப் பொறுத்துப் பல பிரிவு களாகப் பிரிக்கலாம். இந்தியாவில் பல்வேறு தட்ப வெப்பச் சூழ்நிலைகள் இருப்பதால் ஏறக்குறைய அனைத்துப் பழப்பயிர்களும் இங்குச்சாகுபடி செய்யப் மில்லியன் படுகின்றன. தற்போது ஏறத்தாழ 2.5 ஹெக்டேரில் சாகுபடியும் இவற்றிலிருந்து 22.5 மில் லியன் டன் பழ உற்பத்தியும் செய்யப்படுகின்றன. மொத்தப் பழப்பயிர்ச் சாகுபடி செய்யும் பரப்பளவில் 24% உத்திரப்பிரதேச மாநிலத்தில்தான் உள்ளது. மொத்தப் பழ உற்பத்தியில் 41% மாம்பழமே விளைகிறது. பிரிவுகள். பழங்கள் உருவாகும் முறையைப் பொறுத்து உண்மைக்கனி, பொய்க்கனி எனப் பிரிக்க லாம். கருவுறுதல் மூலம் கருவுற்ற சூலகம் மாறிக் கனியானால் அதற்கு உண்மைக்கனி என்றும், பூவின் சூலகத்தைத் தவிரப் பிற பகுதிகள் உண்ணக்கூடிய பகுதியானால் அதற்குப் பொய்க்கனி என்றும் பெயர். பழப்பயிர்களை அவை வளரும் இடங்களுக்கு ஏற்பவும் அவற்றின் அமைப்பைப் பொறுத்தும் மரப் பயிர்கள் (இலையுதிர்க்கும் மரங்கள், பசுமை மாறா மரங்கள்) செடிகள் (தரையில் படரக்கூடியவை, மேல் நோக்கி வளரக்கூடியவை) என்று பிரிக்கலாம். பழப்பயிர்களை, அவற்றின் தட்பவெப்பத் தேவைக்கு ஏற்ப வெப்ப மண்டலப் பழப்பயிர்கள் மிதவெப்ப மண்டலப் பழப்பயிர்கள், குளிர் காலப் பழப்பயிர்கள் எனப் பிரிக்கலாம். வெப்ப, மிதவெப்ப மண்டலப் பழப் பயிர்கள். இப்பழப் பயிர்களின் வளர்ச்சிக்கும் உற்பத்திக்கும் அதிக மித வெப்பமும், சூரிய ஒளியும் தேவை. இப்பழங்கள் பெரும்பாலும் கோடைக்காலத்தில் மிகுதியாகக் கிடைக்கும். தமிழ்நாட்டில் மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் ஆகியவை சித்திரை மாதத்தில் மிகுதி யாகக் கிடைக்கின்றன. சில முக்கியமான வெப்ப மிதவெப்ப மண்டலப்பழப் பயிர்களாவன: மாம்பழம், வாழை, எலுமிச்சை, கொய்யா, பப்பாளி, திராட்சை பலா, பிளம்ஸ், இலந்தை, அன்னாசி, மாதுளை, பேரீச்சை, அத்தி, கறிப்பலா, மங்குஸ்தான், பேசன் பழம். இப்பழ வகைகளைத் தவிர கொட்டை தரும் பயிர்களும் இப்பிரிவில் அடங்கும். குளிர் மண்டலப் பழப்பயிர்கள். ஆப்பிள், பேரி, பீச், பிளம்ஸ், ஆப்ரிகாட், செர்ரி, ஸ்டிராபெரி. M கோ.பாலகிருட்டிணன் நூலோதி. S. Singh, SiKrishnamurthi, and S.L Katyal, Fruit Culture in India, CAR, New Delhi, 1963. கனிவிதைப் பரவுதல் ஒவ்வொரு தாவரமும் இனப்பெருக்கத்திற்காகக் கனிகளை உண்டாக்குகிறது. ஒவ்வொரு கனியிலும் உள்ள விதைகள் தாய்த் தாவரத்தின் நிழலிலேயே விழுந்தால் அவற்றிலிருந்து முளைக்கும் தாவரங்கள் அனைத்தும் மிக நெருக்கமாக வளரும். இந்நெருக் கடியால் உணவு, காற்று, இடவசதிப் பற்றாக்குறை ஏற்படப் பல தாவரங்கள் அழிய நேரிடும். அப்போது இவற்றின் வாழ்க்கையில் போட்டி ஏற்பட்டு வலிமை யுள்ள தாவரம் மட்டும் நிலைக்கும், ஆனால் இவ் விதைகள் பல டங்களுக்குப் பரவ வசதி ஏற்பட் டால் இவை முளைத்து வாழ வாய்ப்புக் கிட்டும். புதிய இடங்களிலும் பரவிச் செழிக்க இயலும். வெடிக்கும் கனிகளில் விதைகள் பரவுகின்றன. வெடியாக் கனிகள், கனிகளாகவே பரவுகின்றன. கனிகளுக்கும் விதைகளுக்கும் இயங்கும் ஆற்றல் இல்லாமையால் இவை காற்று, நீர்,விலங்கினம், பறவை மற்றும் சிறப்பான இயங்கு முறைகளைப் பரவுதற்குப் பயன்படுத்துகின்றன. இவ்வாறு உதவி புரியும் பொருள்களுக்கு ஏற்றவாறு கனிகளும், விதை களும் அவற்றின் அமைப்பில் சில மாறுதல்களைப் பெற்றுள்ளன. முருங்கை ஒரோசு ஸைலான் 8-10