பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனை (பூரம்‌) 153

கனை (பூரம்) 153 பாப்பி துளை வெடிகனி (poricidal capsule). கனியின் மேல்பகுதியில், கனி முதிர்ச்சியடைந்த பிறகு, வட்ட அமைப்பில் சிறு துளைகள் தோன்றுகின்றன. இச் சிறு துளைகளுக்கு ஏற்றவாறு. மிகச்சிறிய விதைகள் அவற்றின் வழியாக வெளியேறுகின்றன. காற்றில் கனி அசைந்தாடும் துளை வழியே விதை சிதறும். எ.கா. பாப்பி. கனி பிக்சிடியம், உலர்கனி முதிர்ந்த பிறகு, குறுக்கே இரண்டாகப் பிரிகிறது. மேல்பகுதி மூடி போன்று பிரிந்து கீழே விழுகிறது. இதனால் அடிப் பகுதி திறக்கப்பட்டு விதைகள் வெளியேறுகின்றன. எ.கா. அமராந்தேசி குடும்பக் கனிகள். வைஸோகார்ப். இவ்வகைக் கனி. வெடிக்கும் உலர்கனிக்கும், வெடிக்காத உலர்கனிக்கும் இடையே உள்ளதாகும். இது முதலில் ஒரு விதை கொண்ட பகுதிகளாக வெடிக்கிறது. இவற்றை மெரிகார்ப் அல்லது காகஸ் என்பர். இவை ஒவ்வொன்றிலும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட விதைகள் இருக்கும். மெரிகார்ப் வெடிப்பதில்லை. ஆனால் இதன் தோல் மண்ணில் அழுகி விதைகளை வெளி யேற்றுகிறது. மேல்மட்டச் சூலகம் கொண்ட இணைந்த சூலக இலைகளாலான சூலகத்திலிருந்து பல தோன்றிய சுனி. எ.கா. துத்தி, ஆமணக்கு. லொமெண்டம். இது இருபுறவெடிகனி வகையைச் சார்ந்தது. வெளிப்புறத்தில் கனி ஒவ்வொரு விதை யின் இடையிலும் சுருங்கியுள்ளது. பார்ப்பதற்கு மணிமாலை போன்றிருக்கும். முதிர்ச்சியடைந்த பிக்சிடியம் பிறகு கனி ஒவ்வொரு விதையின் சுருங்கிய இடத்தில் ஒடிந்து விடுகிறது. இப்பகுதி மெரிகார்ப் போன்று செயல்படுகிறது. மண்ணில் விழுந்தபிறகு கனித்தோல் வெடித்து விதை வெளியேறுகிறது. எ.கா: சீயக்காய் என்டடா, கருவேல். கிரிமோகார்ப். இக்கனி இரு தனிப்பட்ட மேல் மட்டச் சூலசுத்திலிருந்து தோன்றுகிறது. கனி தோன்றும்போது அதன் காம்பு இரண்டு கிளை களாகப் பிரிவதால் ஒவ்வொரு விதை கொண்ட பகுதி யாகக் காம்பின் மீது காணப்படும். இக்கிளைகளுக்குக் கனிக் காம்பு (carpophore) என்றும், விதையுள்ள பகுதிக்குக் கிரிமோகார்ப் என்றும் பெயர். எ.கா. தனியா அல்லது கொத்துமல்லி, சீரகம், ஓமம், -மே.லோ. லீலா நூலோதி. Venkateswaralu, External morphology of Angiosperms, S. Chand & Co Ltd., New Delhi, 1982. கனை (பூரம்) அசுவினி முதலான இருபத்து ஏழு விண்மீன்களில் பதினோராம் கூட்டமான தனை சிம்மராசியில் உள்ளது. சிங்கம்போல அமைந்துள்ள ஓர் உருவின் பின்கால் தொடையில் விளங்கும் டல்ட்டா லியோனிஸ் (8-leonis). பின் முழங்கால் அருகி