பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கணம் (சித்த மருத்துவம்) காது, இதன் இலைச்சாறும், இஞ்சிச்சாறும் ஓரளவாக எடுத்துக் கலந்து, 16 மி.லி, விதம் கோடுத்து வர இளைப்பு நோயிலுண்டாகும் வியர்வை நீங்கும். இதன் இலையை உப்புச் சேர்த்தரைத்து, நெறிகட்டி களுக்குப் பூச வீக்கம் கரையும். காக்கணம் இலைச் சாற்றுடன் சிறிது உப்பிட்டுக் கரண்டியிலிட்டுக் கொதிக்க வைத்துப் பொறுக்கும் சூட்டில் கன்னம் முதலிய பகுதிகளில் பற்றுப்போட, சயித்தி யத்தாலுண்டான வீக்கம், வலி ஆகியவை நீங்கும். இலையைக் கசக்கிச் சாறு பிழிந்து வெள்ளைக் குன்றிமணியும், வாளமும் சம்மாக எடுத்து முன்சொன்ன சாற்றால் அரைத்துக் கொப்பூழைச் சுற்றிக் கனமாகத் தடவினால் ஓரிரு காக்கண ய . முறை பேதியாகும். இதன் விதையைச் சிறிது வறுத்துப் பொடித்து 1.9-2.5 கிராம் வரை கொடுக்க நன்றாகப் பேதியாகும். காக்கட்டான் விதைத்தூள் ஏழு பங்கு, இந்துப்புப் பொடி ஏழு பங்கு, சுக்குத்தூள் ஒரு பங்கு எடுத்துக் கலந்து 3,5-7 கிராம் வரை கொடுக்க, கழிச்சலுண் டாகும். யானைக்கால் நோய் நீங்கும். இதன் விதையைத் தாய்ப்பாலில் ஊறவைத்து அரைத்து அப்பாலிலேயே கலக்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்க, பேதியாகும். காக்கணம் வேரை நெகிழ 168 மி.லி நீரில் 24 மணி நேரம் ஊறவைத்து எடுத்து 42-84 மி.லிவரை கொடுத்து வர, சிறுநீரைப் பெருக்கி மலத்தைக் கழிக்கும். இதன்வேரை அரைத்து இரண்டு கழற்சிக்காய் அளவு யானைக்கால் நோய்க்குக் கொடுத்து வரலாம். இதன் வேர்த்தூளில் 520 மி.கி- 1.4 கிராம் வரை கொடுக்க. குழந்தைகட்குண் டாகும் வாந்தி, குமட்டல், மந்தம், கண்நோய், தலை நோய் ஆகியவை தீரும். இதன் வேர்ப்பட்டையை அரைத்துப் பிழிந் தெடுத்த சாற்றில் 2-3 துளி மூக்கில் விட, தலைவலி நீங்கும். காக்கணம் வேர் 7 கிராம், திப்பிலி 7கிராம். சுக்கு 10.5 கிராம், விளமரப் பிசின் 7 கிராம் கா இவற்றைக் கல்வத்திலிட்டு நீர்விட்டரைத்து 130 மி. கிராம் அளவுள்ள. மாத்திரைகளாகச் செய்து, ஒரு மாத்திரை வீதம் கொடுக்க நன்கு பேதியாகும். குழந்தைகளுக்கு அரை மாத்திரை கொடுக்கலாம். வெள்ளைக் காக்கணம் வேரில் தயிர்விட் டரைத்துப் பின்னைக்காயளவு எடுத்து 501மி. லிட்டர் பசுமோரில் கலக்கிக் கொடுத்துவிட்டு 2.6 லிட்டர் பசுமோர் விளாவி வைத்துக் கொண்டு ஓரளவு பேதி யானவுடன் அந்த மோரில் சிறிது குடிக்க வேண்டும். இவ்வாறு கொடுக்க 6-8 முறை பேதியாகும். மோரைக் கொடுத்தால்தான் பேதியாகும். பேதியாகும். பசுலில் தயிர்ச் சோறும் இரவில் பால் சோறும் சாப்பிட வேண்டும். இதன் மூலம் வெள்ளை ஒரே நாளில் தீரும். சே. பிரேமா காக்கத்துவான் கிளிக் குடும்பத்தைச் சேர்ந்த காக்கத்துவான் அல்லது சுக்கட்டு (cuckatoo) என்னும் பறவைக்கு அழகிய கொண்டையும், வியத்தகு அலகும் அமைந்துள்ளன மேற்புற அலகு நீண்டு வளைந்து வளர்ந்திருக்கும். ஆஸ்திரேலியாவிலும் கிழக்கிந்தியத் தீவுகளிலும் இப்பறவையைக் காணலாம். வெண்கொண்டைக் காக்கத்துவான் (Cacatua alba), கொக்கைப் போன்ற தூய வெண்ணிறம் கொண்டது. உருவில் வீட்டுக் காக்கையைவிடச் சற்றே பெரியது. நுனி அகன்று நீண்டு தொங்கும் கொண்டை அமைப்புக் கொண்ட இதை மத்திய மொலுக்கா தீவில் மட்டும் காணலாம். மொலுக்கா தீவின் தென்பகுதியில் சிவந்த கொண்டைக் காக்கத்துவான் (Cacatua moluscensis) காணப்படுகிறது. இதன் உடல் செம்பொன் வண்ணப் பூச்சில் மிளிர்கிறது. கிரீச்சிட்டு உரக்கக் கத்தும் மஞ்சள் கொண்டைக் காக்கத்துவான் (Cacatua galerita) சிறிய கொண்டையையும், மஞ்சள் நிறக் கன்னக் கதுப்பையும் பெற்றுள்ளது. ஆஸ்திரேலி யாவில் மிகுதியாகக் காணப்படும் இப்பறவைகள்