156 காக்கஸ்
156 காக்கஸ் விளைந்த பயிர்களுக்கும், பழந்தோட்டங்களுக்கும் கேடு விளைவிக்கின்றன. அதனால் இப்பறவைகளை நஞ்சிட்டும்.துப்பாக்கியால் சுட்டும் அழித்துவிடுகின் றனர். இப்பறவைகள் சில சொற்களைப் பேசக் கற்றுக் கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருப்பதாலும், நீண்ட காலம் உயிர் வாழ்வதாலும் இவற்றைக் கூண்டுகளில் அடைத்து வளர்க்கினறனர். ரோஜாக் காக்கத்துவான் (Cacatua roscicopil{a) ரோஜா நிறத்தையுடைய தலையும் மார்பும் கொண்டது.உடல் வெளிர் சாம்பல் வண்ணமாக இருக்கும். கொண்டை பட்டையான பல இறகுகளால் ஆனது: அளவில் குறுகியது. காக்கத்துவான்களுள் இதுவே அளவில் சிறியது. இதனால் பலராலும் இது விரும்பி வளர்க்கப்படுகிறது. இதை ஆஸ்திரேலியாவின் வடக்கு, மேற்குப் பகுதிகளில் மட்டுமே காணலாம். வீட்பீட்டர் காக்கத்துவாள் (eacatua leodbeuteri) சிவப்பு, வெள்ளை மஞ்சள் ஆகிய மூவண்ணங் களோடு கூடிய கொண்டை உடையது. இதன் உடலின் மேற்பகுதி வெண்மையாகவும், மார்பும் சிறு இறகு களும் ரோஜா வண்ணம் தோய்ந்த வெண்மையா கவும் இருக்கும். ஆஸ்திரேலியாவிற்கு உரிய இது நன்கு பேசக் கற்றுக் கொள்வதுடன், மேலே கூ கூறப் பட்ட காக்கத்துவான்களிலிருந்து வேறுபட்ட அலகு அமைப்பையும் பழக்கவழக்கங்களையும் கொண்டது. சிறுத்த அலகு காக்கத்துவான் (Licmetis teniros- tris). ஆஸ்திரேலியாவில் காணப்படும் இது, தன் அலகால் மண்ணைக் கிளறிக கிழங்கு, வேர் சிறு அலகை முதலியவற்றைத் தின்னும். இதன் நெற்றி வெண்மையாகவும், முதுகு சிவப்பாகவும் இருக்கும். மார்பும் தலையும் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப் படும். கன்னத்தில் நீல நிறத்திட்டும் வாலடியில் மஞ்சள் வண்ணமும் கொண்ட இதை ஆஸ்திரேலி யாவில் பலரும் கூண்டில் வைத்து வளர்க்கின்றனர். அவ்வாறு வளர்க்கும்போது இதன் மேல் மிகவும் நீண்டுவிடாமல் அவ்வப்போது விடுகின்றனர். இயற்கையில் மண்ணைக் கிளறித் திரியும்போது இதன் அலகு தேய்வு அடைவதால் அலகின் வளர்ச்சி கட்டுக்கு அடங்கியதாக இருக்கும். கூடுகளில் இணையாக வளர்க்கப்படும் காக்கத்துவான் கள் கூடுகளிலேயே இனப்பெருக்கமும் செய்கின்றன. க. ரத்னம் காக்கஸ் நறுக்கி து உருண்டையான அல்லது சிறிய கோழி முட்டையைப் போன்ற உருவமுடைய நுண்ணுயிரி ஆகும். இந்நுண்ணுயிரி கொத்துக் கொத்தாகக் காணப்படுவதால் காக்கஸ் (Coccus) எனப்பெயரிடப் பட்டது. காக்கஸ் (kokkos) என்றால் கொத்து என்று பொருள்.பொதுவாகவே, காக்கஸ்கள் உடலில் புகுந்து நியூட்டரோஃபில் என்னும் வெள்ளணுக்களை இரத்தத்தில் மிகுதியாக்கிச் சீழ்க்கட்டிகளைத் தோற்றுவிக்கின் றன. காக்கஸ்களில் பல வகையும் அவை ஏற்படுத்தும் நோய்களில் பல வகையும் உண்டு. ஸ்டெஃபைலோ காக்கஸ். இவற்றில் ஒவ்வொரு நுண் ணுயிரும் உருண்டையாகத் திராட்சைக் கொத்துப் போல் இரண்டாகவோ, நான்காகவோ, அதற்கும் மேலாகவோகூடி இருக்கும். இவற்றில் ஸ்டெஃபைலோ காக்கஸ் ஆரியஸ் (Staphylococcus aureus ) என்றும், ஸ்டெபைலோகாக்கஸ் ஆல்பஸ் (Staphylococcus albus) என்றும் இரு பிரிவுகள் உண்டு. ஆரியஸ் என்னும் வகை சற்று வீரியமிக்கது. ஆல்ப்பஸ் என்னும் வகை வீரியம் குறைந்தது. பொது துவாகவே ஸ்டெ பைலோ காக்கஸ் உடலின் எந்தப் பகுதியையும் தாக்கக்கூடும். ஆனால் தோலில் வரக்கூடிய சிரங்கு, சீழ்க்கட்டி, மயிர்க் கால்களில் ஏற்படக்கூடிய சீழ்க் கட்டி, எலும்பில் சீழ் ஆகிய அனைத்தும் ஸ்டெ பைலோகாக்கஸ் ஆரியஸால் விளைபவை. வை தாக்கும் மற்றொரு முக்கியமான உறுப்பு நுரை யீரலாகும். Loo மூச்சுக் குழல் பல நுண்கிளைகளாக நுரையீரல் களுக்குள் பிரிகிறது. இவற்றில் இரண்டு, மூன்றாம் வகைச் சிறு மூச்சுக் குழல்களின் சுவர்களை இந்த ஸ்டெஃபைலோ காக்கஸ் அழித்துவிடும். பின்னர் இவை சீழ்க் கட்டிகளை அங்கே ஏற்படுத்துகின்றன. நச்சு அதிர்ச்சி இணைப்போக்கு (toxic shock syn- drome) என்னும் ஒரு நிலை உருவாக ஸ்டைஃபைலோ