காகிதம் 163
கிறது. செயற்கைப் பல்லுறுப்பிகளின் (synthetic polymers) இழைகளைக் கொண்டு காகிதம் தயாரிக் கும் முறை அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. செல்லுலோஸ் இழைகளுக்கு முக்கிய மூலப் பொருள் மரம் ஆகும். முதல் கட்டத்தில் மரத்தை இழைகளாக மாற்ற வேண்டும். இம்முறை கூழாக்கல் (pulping) எனப்படும். எந்திர முறை, முழு வேதி முறை (full chemical), பகுதி வேதி முறை (semiche mical) ஆகிய மூன்று முறைகளைப் பின்பற்றிக் காகிதக் கூழ் தயாரிக்கலாம். எந்திரக் கூழாக்கல் (mechanical pulping) முறை யில், மரக்கட்டைகள் நன்கு அரைக்கப்படுகின்றன. (படம் 2). சில நீரில் கரையும் சேர்மங்களைத் தவிர பிற மரத்தில் உள்ள அனைத்துப் பொருள்களும் இம்முறையில் கிடைக்கும் மரக்கூழில் உள்ளன. ஒளிபுகா இயல்பு, உறிஞ்சும் தன்மை ஆகியவற்றைக் கொண்ட அச்சுத்தரம் உடைய காகிதம் தயாரிக்க இம்முறை பயனாகிறது. வேதிக்கூழ் (chemical pulp). இது அனைத்துத் தரக் காகிதங்களும், காகித அட்டைகளும் தயாரிக்கப் பயன்படுகிறது. வேதிக் கூழாக்கல் முறையில், பல வேதிச் சேர்மங்களைப் பயன்படுத்தி, மரத்தில் உள்ள செல்லுலோஸ் இழைகள், மற்ற உருப்பொருள்களி லிருந்து பிரிக்கப்படுகின்றன. செதுக்கப்பட்ட சிறு துண்டுகளை உரிய வேதிச் சேர்மங்களோடு சேர்த்து உயர் அழுத்த நிலையில் வெப்பப்படுத்தும்போது மரத்தில் உள்ள லிக்னின் மற்றும் பிற சேர்மங்கள் கரைய, செல்லுலோஸ் மட்டும் கரையாமல் அதன் இழைகளாகத் தனித்து விடப்படும். இம்முறையில் மரத்தில் உள்ள சில சேர்மங்கள் படுவதால் நீக்கப் எந்திரக் கூழை விட வேதிக்கூழ் 1 மிகுந்த வலிவும், நிலைப்புத்தன்மையும் பெற்றுள் ளது. என வேதிக்கூழ் முறையைப் பொதுவாக, சல்ஃபைட் கூழ், சல்ஃபேட் கூழ் இருவகையாகப் பிரிக்கலாம். சல்ஃபைட் முறையில் கால்சியம் பைசல்ஃபைட் கரைசலும், சல்ஃப்யூரஸ் அமிலமும் பயன்படுகின்றன. பெருமளவுக்குப் பய னாகும் சல்ஃபேட் அல்லது கிராஃப்ட் முறையில் மரத்தைக் கூழாக்கச் சோடியம் ஹைட்ராக்சைடு, சோடியம் சல்ஃபைடு கரைசல்களின் கல்வை பயன்படுகிறது. இம் முறையைப் பின்பற்றி அனைத்து வகை மரங்களையும் கூழா ாக்க இயலும். மேலே விளக்கப்பட்ட இருமுறைகளையும் கூழ் சமைக்கும் நிலையைப் (degree of cooking) பொறுத்துப் பல வகையாகப் பிரிக்கலாம். தூய்மையான எளிதில் தயாரிக்கக்கூடிய காகிதம், எளிதில் வெளுக்கும் சல்ஃபைட் கூழிலிருந்து கிடைக் கிறது. இக்கூழிலிருந்து கிடைக்கும் காகிதம் மென்மை அ. சு 8 11அ காகிதம் 163 வெண்மை யானது. உறிஞ்சும் திறன் உடையது; யானது: பைகள், மடக்குப்பெட்டிகள் போன்ற பொருள்கள் தயாரிக்கத் தேவையான வலிமை உள்ள காகிதம் தயாரிக்க அடர் வெளுக்காத சல்ஃபைட் (strong unbleached sulphite) கூழ் ஏற்றது. இது போன்றே சல்ஃபேட் கூழையும் பலவகையாகப் பிரிக்க படம். 3. கழுவும் எந்திரத்தில் காகிதக்கூழ் தூய்மை செய்யப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது லாம். இவ்வகைக் கூழ் வலிமிக்க காகிதம், காகித அட்டைகள் தயாரிக்கப் பெருமளவுக்குப் பயனா கிறது. குறிப்பாக இருவகை வெளுக்காத சல்ஃபேட் கூழ்களில் பெருமளவுக்குப் பயன்படும் கூழ் கிராஃப்ட் கூழ் எனக் குறிப்பிடப்படுகிறது. இக்கூழை வெளுக்க இயலாது. இதிலிருந்து கிடைக்கும் காகிதம் வலிமை மிக்கது. இரண்டாம் வகைக் கூழ் கிராஃப்ட் தயால்ப் பின் முறையைவிடச் செறிவு மிகுந்த சல்ஃபேட்டாகப் பயன்படுத்தப்பட்டு நீண்ட நேரம் கொதிக்கவைக்கப் பட்டுப் பின்னர் நன்கு கழுவப்படுவதால் இதிலிருந்து கிடைக்கும் காகிதம் கிராஃப்ட் காகிதத்தைவிடச் சற்று வலிமை குறைவாக இருந்தாலும் சற்று மேம்பட்ட நிறமுடையது. வெளுக்கப்பட்ட கிராஃப்ட் எனப் பொதுவாக குறிக்கப்படும் வெளுக்கப்பட்ட சல்ஃபேட் கூழ் வெண்மை நிறக் காகிதங்களும் வலிமிக்க அட்டை களும் தயாரிக்க அடிப்படைப் பொருளாகிறது. பகுதி வேதிக் கூழ், வீரியமற்ற வேதி வினைசு ளோடு எந்திர முறையை இணைத்து மரத்தை ழைகளாக மாற்றிக் கிடைக்கும் பகுதி வேதிக் கூழ் அண்மைக்காலத்தில் சிறப்புப் பெற்றுள்ளது. இம்