பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 காகிதம்‌

164 காகிதம் முறை பெரும்பாலும் இலையுதிர் மரவகைகளைக் கூழாக்க உதவும். மூலப் மரத்தை அடுத்துக் காகிதம் தயாரிக்கும் பொருளுக்குத் தேலையற்ற பழைய காகிதம் அமை கிறது. இதைக் கொண்டு தரம் குறைந்த காகிதமும். காகிதப் பொருள்களும் தயாரிக்கலாம். நீண்ட நாள் பயன்படும் நிலைப்புத்தன்மை உடைய: காகிதம் தயாரிக்க, பஞ்சு இழைகளை மூலப்பொருளாகப் பயன்படுத்தலாம். இதன் பொருட்டுப் பழைய துணி களைப் பயன்படுத்துவது படிப்படியாகக் குறைந்து வருகிறது. தனித் தன்மை உடைய சிலவகைக் காகிதங்கள் தயாரிக்க வைக்கோல், சணல், கரும்புச் சக்கை போன்றவை மூலப்பொருளாகப் பயன்படு கின்றன. ஒரு குறுகிய வட்டத்தில் கனிம இழைகளா லான கல்நார், கண்ணாடி போன்றனவும் செயற்கைக் கரிமப்பல்லுறுப்பிகளால் ஆன நைலான், பாலி ஒலிஃபீன் போன்றனவும் குறிப்பிட்ட வகைக் காகிதம் தயாரிக்க மூலப்பொருள்களாக அமைந் துள்ளன. காகிதத் தயாரிப்பு. பெரும்பாலும் எந்திர முறை அடிப்படையில் காகிதம் தயாரிக்கப்பட்ட போதும், காகிதத்தின் பண்புகள் வேதி, இயல்வேதி இயல்புக்கு ஏற்ப மாறுபடும். நீரில் கலந்துள்ள செல்லுலோஸ் இழைகளால் ஆன தொங்கல் கரைசலை உலரச் செய்யும்போது இழைகள் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொள்ளும் என்னும் அடிப்படையில் விளைந்ததே காகிதத் தயாரிப்பின் தொழில் நுட்பம் ஆகும். படம் 4. செல்லுலோஸ் இழையினாலான காகிதத்துண்டு கூழாக்கும், வெளுக்கும் முறைகளில் வெளிப்படும் மாறாத செல்லுலோஸ் இழைகள் காகிதம் தயாரிக்க ஏற்றவையல்ல. இவற்றை முதலில் எந்திர முறையில் தூய்மை செய்யவேண்டும். இம்முறையில் கூழ் இழைகள் தனித்தனியே பிரிக்கப்பட்டுப் பின்னர் நசுக்கப்படுகின்றன. அப்போது இழைகள் சிறு படம் 5. (அ) காகிதத் தொழிற்சாலையில் மரக்கட்டைகளிலுள்ள இழைகளைப் பிரித்தல். இது காகிதத்தயாரிப்பில் முதல் படியாகும். (ஆ) காகிதக்கூழ்கள் ஒன்றாகக்கலக்கப்படுகின்றன. (இ) கூழிலிருந்து காகிதம் தயாரிக்கும் தொடர் எந்திரம்