காகிதம் 165
காகிதம் 165 இழைகளாகவும், பின்னர் மிகச்சிறு இழைகளாகத் துண்டாக்கப்படுகின்றன. மேலும் இச்சிறு இழை கள் நீரை உறிஞ்சிச் சற்றுப் பெருத்து நன்கு வளை யும் இயல்பைப் பெறுகின்றன. தூய்மை செய்யும் போது இழைகளின் மேற்பரப்புத் திருத்தப்படுகிறது. அத்துடன் புதிய மேற்பரப்பும் தோன்றுகிறது.இதன் விளைவாக, இழைகள் உலரும்போது பிணைந்து கொள்ளும் இயல்பைப் பெறுகின்றன. எந்திர முறையில் அடித்துத் தூய்மை செய்யப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே செல்லுலோஸ் இழைகளை நீரில் கலந்து மரம் அல்லது கல்லால் அடித்தனர். அடுத்து உருவாக்கப்பட்ட ஹாலண்டர் முறையிலும் இதே அடிப்படையில் இழைகள் தூய்மை செய்யப்பட்டன. தற்காலத்தில் தொடர்ச்சியான கூம்பு அல்லது தட்டு முறையைப் பின்பற்றி இழைகள் தூய்மை செய்யப்படுகின்றன. என் ஏறத்தாழ 1860இல் ஜோசப் ஜார்டன் பாரால் கண்டுபிடிக்கப்பட்ட ஜார்டன் தூய்மை முறையின் படம் (படம்-6) கொடுக்கப்பட்டுள்ளது. படம் 6 இல் காட்டியவாறு கூம்பு வடிவ அமைப் பின் உள்ளே கத்திகள் பொருத்தப்பட்டு, குறுகியபகுதி யின் வழியே கூழை செலுத்தும்போது இக்கூழ் சுழலும் கத்திகளால் நன்கு துண்டாக்கப்பட்டுக் கூம்பின் அகன்ற பகுதியின் வழியே வெளியேறும். தட்டு முறையில் அருகருகே அமைக்கப்பட்ட மிக வேகமாகச் சுழலும் தட்டுகளின் இடையே கூழைச் செலுத்தித் தூய்மை செய்கின்றனர். தட்டு முறை யிலும் தேவைக்கு ஏற்ப, பல மாற்றங்கள் புகுத்தப் பட்டுள்ளன. ஒரு தட்டு இயங்காமலும், மற்றொன்று இயங்கும் வண்ணமும் அமைக்கப்படும். காகிதக் கூழ் தயாரிப்பில் பல சேர்க்கைப் பொருள்கள் கலக்கப்படு கின்றன. நிரப்பிகள் (fillers) இவற்றில் இன்றியமை யாதவையாகும். களிமண், டைட்டேனியம் டை ஆக்சைடு கால்சியம் கார்பனேட் போன்ற நிரப்பிகள் காதிதத்திற்கு ஒளிபுகாத் தன்மையை அளிக்கின்றன. இயற்கையில் கிடைக்கும் களிமண் விலை குறைவாக இருப்பதால் அது பெருமளவுக்குக் காகிதக் கூழில் சேர்க்கப்படுகிறது. நிரப்பிகளில் டைட்டேனியம் டைஆக்சைடு காகிதத்திற்கு ஒளிபுகாத்தன்மையைக் கொடுக்கும் சிறந்த நிறமி ஆகும். சிறந்த காகிதத் தயாரிப்பில் இதன் பங்கு குறிப்பிடத்தக்கது.நூல் களிலும், சிகரெட் காகிதங்களிலும் கால்சியம் கார்பனேட் நிரப்பியாகச் செயல்படுகிறது. கஞ்சியிடல் (sizing). இம்முறையில் காகிதத்தோடு சேர்க்கும் குறிப்பிட்ட பொருள்களின் விளைவாகக் காகிதம்,நீர்மம் அல்லது நீர்புகவிடும் தன்மையை இழக்கிறது. கஞ்சியிடாத காகிதம், நீர்மத்தை எளிதில் உறிஞ்சும்; எழுதும் காகிதம் கஞ்சியிட்டது. உறிஞ்சும் காகிதம் கஞ்சியிடாதது. ரோசின், பல ஹைட்ரோ கார்பன்கள், இயற்கையில் கிடைக்கும் மெழுகு, கஞ்சி (starch). கோந்து (glue) போன்ற பொருள்கள் காகிதத்திற்கு நீர் எதிர்ப்புத்திறனை அளிக்கின்றன. இவற்றுள் ரோசின் மட்டுமே பெருமளவுக்குப் பயன் படுகிறது. ஒன்றிலிருந்து மூன்று மடங்கு வரை அலுமினியம் சல்ஃபேட் ரோசின் உடன் கலந்து பயன் படுத்தப்படுகிறது. கஞ்சி இடும்போது pH 4.5-5.5 இருத்தல் வேண்டும். காகிதத் தயாரிப்பில் அதன் நிறத்தைக் கட்டுப் படுத்த உரிய சாயப்பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. இருப்பு வெளியே மின்னோடி இருப்பு உள்ளே கத்திகள் வெளிக்கூடு சுழலும் கூம்பு படம் 6. ஜார்டன் சுத்திகரிப்பு முறை கட்டுப்படுத்தும் சக்கரம்